செவ்வாய், 29 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6919 ஆரத்தி எடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை?

மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர்

6920 ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?

ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்று விடும்

6921 இதனை என்னவென்று கூறுவர்?

நீர் வலம் நாடுதல்

6922 வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் தொடங்குவர். இது ஏன்?

இது போன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக நம்புவதால்.

6923 புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது திருஷ்டி கழிக்கப்படுவது ஏன்?

இக்காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள் சில கெட்ட சக்திகள் கண் திருஷ்டி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பதாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

6924 குங்குமம் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து.

6926 மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் என்னவென்று கூறலாம்?

கிருமிநாசினி

6927 மனித உடலில் தெய்வ சக்தி வாய் ந்த இடமாக கருதப்படுவது எது?

நெற்றிக்கண்

6928 இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் உண்டாகும் பலன் என்ன?

அமைதி கிடைக்கும்.

6929 குங்குமத்துக்குரிய சக்தி என்ன?

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி உள்ளது.

6930 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன் என்ன?

உஷணம் குறையும்

6931 உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது உடலின் எந்தப் பகுதி?

நெற்றிப் பகுதி

6932 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன்கள் என்ன?

குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்குகிறது.

திங்கள், 21 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி


ஆலயம்

6899) ஆலயத்தில் ‘ஆ’ என்பது என்ன?
ஆன்மா அல்லது ஆணவம்

6900) ‘லயம்’ என்பது என்ன?
லயிப்பதற்கு உரியது அல்லது அடங்குதல்

6901) ஆலயம் என்றால் என்ன?
ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம்

6902) ஆலயம் என்ற பதத்திற்கு வேறு எவ்வாறு பொருள் கூறலாம்?
ஆணவ மனம் அடங்கும் இடம்

6903) முக்திக்கு வழி எது?
பக்தி

6904) அப்பக்திக்கு தூண்டுகோலாக அமைந்தது எது?
ஆலயம்

6905) கோயிலுக்கு சென்று வழிபடுதற்குரிய சிறந்த நேரம் எது?
காலை, உச்சி, அந்திப் பொழுதுகள்

6906) காலை, உச்சி அந்திப் பொழுதுகளை என்ன வென்று கூறுவர்?
திரிசந்தி காலங்கள்

6907) ஆலயத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய பழம், தேங்காய், வெற்றிலை இவற்றை என்னவென்று கூறுவர்?
நிவேதனப் பொருட்கள்

6908) தூபம், தீபம், பத்திர, புஷ்பம், பூமாலை முதலியன என்ன?
நிவேதனத்தின் அங்கங்கள்
6909) அபிஷேகம் என்பது என்ன?
இறைவன் திருமேணியை நீரால் நீராட்டுவது

6910) திருக்கோயில் பூசையில் முதன் முதலில் இடம்பெறும் அபிஷேகத்தை என்ன வென்று கூறுவர்?
திருமஞ்சம்

6911) இறைவன் திருமேனியை நீரால் நீராட்டிய பின் வேறு எவற்றால் அபிஷேகம் செய்வர்?
பால், பழம், இளநீர், நெய், தேன், பன்னீர், திருநீறு

6912) திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகளில் ஒன்று கூறவும்?
பரார்த்த பூசை

6913) பரார்த்த என்றால் என்ன?
பிற உயிர்களின் நன்மைக்காக என்று பொருள்
6914) பரார்த்த பூசை யார் பொருட்டு செய்யப்படுகிறது?
நாடு, மக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோர் பொருட்டு.

6915) திருக்கோயில்களில் வழிபாடு செய்பவர்கள் வலமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
உலக நன்மைகளை விரும்பி

6916) இடமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
வீட்டுப் பேற்றை விரும்பி

6917) இந்த இரண்டையும் விரும்புபவர்கள் என்ன செய்யலாம்?
வலமிடமாக பிரதக்ஷணம் செய்யலாம்

6918) பிரதட்சணம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூறப்படும் உதாரணம் எது?
பூரண கர்ப்பவதியான ஒரு பெண் காலில் ஒரு விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தலையில் எண்ணெய் நிறைந்த குடத்தை சுமந்து நடந்தால் எப்படி மெதுவாக நடப்பாளோ, அப்படி மெதுவாக நடந்து செல்ல வேண்டும். மனம் அவனது திருவடிகளை சிந்திக்க, வாய் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரண்டு கைகளும் மார்ப்புக்கு சமமாக இருக்க வேண்டும்.

திங்கள், 14 ஜூன், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பிரதோஷத்தில் சிவ வழிபாடு)

6883) நிம்மதி இழந்து துன்பத்தால் துவள்கிற மனிதனுக்கு துன்பங்களில் இருந்து விடுபட எது சிறந்த மார்க்கம்? ஆலய வழிபாடு ஒன்றே

6884) எப்படிப்பட்ட துயரையும் துன்பத்தையும் நோயையும் தீர்க்கும் ஆற்றல் எதற்கு உண்டு? இறை வழிபாட்டுக்கு

6885) இறை வழிபாடுகள் பல இருந்தாலும் சிவபெருமானுக்கு சிறந்ததாக எது கருதப்படுகிறது? பிரதோஷ வழிபாடு

6886) பிரதோஷ காலம் என்பது என்ன? சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள 3 3/4 நாழிகையும் சூரியன் மறைந்த பின்பு உள்ள 3 3/4 நாழிகையும்.

6887) இதற்கமைய சிவபெருமானை வழிபட சிறந்த நேரமாக எதனை வகுத்துள்ளனர்? மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை

6888) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய் பிறைகளில் வரும் 13ஆம் நாளாகிய திரயோதசி திதியில் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது என்ன! பிரதோஷ வழிபாடு

6889) அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் 13 ஆம் நாளாகிய பிரயோதசி திதி சனிக்கிழமையன்று வருமானால் அது என்னவென்று கொண்டாடப்படுகிறது? மகா பிரதோஷம்

6890) வாரத்தில் எத்தனை முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது? இரு முறை

6891) சனிக்கிழமை நடைபெறும் பிரதோஷத்தை என்னவென்று அழைப்பர்? சனிப்பிரதோஷம், மகாப் பிரதோஷம்.

6892) ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு மூன்று நாளிகைகள் முன்பு நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள நேரத்தை என்ன வென்று கூறுவர்? சந்தியாகாலம்.

6893) இந்த சந்தியாகாலத்திற்குரிய பிரதோஷம் எது? நித்திய பிரதோஷம்

6894) வளர்பிறை சதுர்த்தி அன்று மாலைக் காலத்தில் வருவது என்ன பிரதோஷம்? பட்சப் பிரதோஷம்

6895) தேய்பிறை பிரயோதசி (23 ஆம் நாள்) அன்று வருவது என்ன பிரதோஷம்? மாதப் பிரதோஷம்

6896) தேய்பிறையில் சனிக்கிழமையன்று திரயோதசி திதி வந்தால் அதனை என்னவென்று கூறவர்? மகா பிரதோஷம்

6897) பிரளயம் ஏற்படுகின்ற காலத்தில் எல்லா உலகங்களும் ஈஸ்வரனிடம் ஒடுங்கும் நேரதத்தை என்னவென்று கூறுவர்? பிரளயப் பிரதோஷ காலம்

9898) பிரதோஷ வழிபாட்டினைத் தொடங்கும் முன்பு யாரை வழிபட வேண்டும்? நந்திதேவரை

திங்கள், 7 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6862) ஹோமம் நடத்துவது ஏன்?காலம் மாறும்போது எல்லாத் துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஹோமங்கள் நடத்த வேண்டும்.

6863) ஹோமங்கள் மூலம் நிகழ்வது என்ன?இறைவன் ஹோமங்கள் மூலம் நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான்.

6864) அக் கோரிக்கைகள் எவ்வாறு இறைவனை சென்றடைகின்றன?

அக்னி குண்டங்கள் மூலமாக

6865) ஹோமங்கள் சிலவற்றைத் தருக?

கணபதி ஹோமம், அவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், லட்சுமி ஹோமம், வித்யா ஹோமம், கனகதார ஹோமம்

6866) புதிய தொழில்கள் தொடங்கும் போது செய்யப்படும் ஹோமம்?

கணபதி ஹோமம்

6867) ஏனைய ஹோமங்களை துவக்கத்திற்கு முன்பு செய்யப்படும் ஹோமம் எது?

கணபதி ஹோமம்

6868) கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல், மனம், ஆன்மீக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும்.

6869) விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறவும், நாடு பசுமைப் புரட்சியில் சிறக்கவும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும் ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும் செய்யப்படும் ஹோமம் எது?

அவஹந்தி ஹோமம்

6870) அவஹந்தி ஹோமம் செய்வதால் உண்டாகும் வேறு பலன்கள் எவை?

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக வளர்ச்சி ஏற்படும்.

6871) குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் எது?

ஆயுஷ்ய ஹோமம்.

6872) ஆயுஷ்ய ஹோமம் வேறு எந்தெந்த நாட்களில் செய்யலாம்?

ஒவ்வொரு மாதமும் வரும் குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில்

6873) ஆயுஷ்ய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன?

குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்து விடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூட குணப்படுத்தலாம்.

6874) பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் எது?

மிருத்தியஞ்ச

6875) மிருத்தியஞ்ச ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?அகால மரணத்தை தவிர்ப்பதற்காக சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.

6876) இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் வேறு நன்மைகள் என்ன?

ஆயுள் விருத்தி அடையும், நீண்ட நாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும்.

6877) சர்வமங்களங்களையும் மேன்மையையும் 16 செல்வங்களையும் அடைய செய்யப்படும் ஹோமம் எது?லட்சுமி ஹோமம்

6878) லட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன?

நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்து சேரும் ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள் சாபங்கள் நீங்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.

6879) மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும் புத்தி கூர்மை ஏற்படவும் ஞானம் விருத்தி அடையவும் படிப்பில் மட்டும் கவனம் செல்லவும் நினைவாற்றல் பெருகவும் செய்யப்படும் ஹோமம் எது?

வித்யா ஹோமம்.

6880) திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் என்ன?

மங்கள சமஸ்கரண ஹோமம்

6881) ஏழையைக் கூட செல்வந்தனாக்கி விடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தி உடைய ஹோமம் எது?கனகதார ஹோமம்

6878) ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி என்னவாக கருதப்படுகிறது?

அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும் அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...