
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன?
“கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே”
16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன?
சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலர வைத்து அவர்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் விரிவடைய வைக்கும் கல்வியை வழங்குவதே ஆகும்.
16260) அறநெறிக் கல்வியின் “குறிக்கோள் வாசகம்” என்ன?
சிறார்களின் மனம் ஏற்றுக்கொள்கின்ற பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு தெரிந்துகொள்ளவும் ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்ந்துக்கொள்ளவும் மனதிலும் உணர்விலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் பயிற்சி யளித்து வழிகாட்டி ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.
16261) அறநெறிக் கல்வியின் குறிக்கோள்கள் எத்தனை? பத்து
16262) அந்த பத்து குறிக்கோள்களும் எவை?
1.இந்து வாழ்ககை முறைகளை கற்கவும் அதன்படி வாழவும் சிறுவர்களுக்கு உதவுதல்,
2. கடமை, பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்தை பதிய வைத்தல்
3. உள்ளார்ந்த மனித மதிப்புகளின் புரிதலுக்கும் நடைமுறைக்கும் ஊக்கமளித்தல்
4. ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அடக்கியாளவும் ஒழுக்கத்தை பேணவும் பயிற்சியளித்தல்
5. சிறார்களின் எண்ணம், சொல், செயலில் தூய்மையும் ஒற்றுமையும் இருக்க வழிகாட்டுதல்,
6. சரியானதற்கும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காண்பதற்காக உள்ளிருக்கும் தெய்வீகத்தை பின்பற்ற பயிற்சியளித்தல்,
7. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான வழிமுறைகளையும் அருளாளர்களது வாழ்க்கையையும் போதனைகளையும் பின்பற்றி சுயநலமற்ற சேவையை வழங்க பயிற்சி அளித்தல்
8. இந்து கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளில் அறிவு மற்றும் ஆளுமை விருத்திக்கு பயிற்சியளித்தல்,
9. நம்பிக்கைகளுக்கும் மனித குலங்களுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து சிறார்கள் நன்கு அறிந்திருக்க உதவுதல்,
10. நேர் விளைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால தலைவர்களாக வளர்வதற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களை வளர்க்க உதவுதல்
16263) அறநெறிக் கல்வி மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமைகளை எத்தனை நிலையங்களில் மலரச் செய்கிறது?
ஐந்து
16264) அந்த ஐந்து நிலைகளையும் தருக
1. புத்தி சார்ந்த நிலை
2. உடல் சார்ந்த நிலை
3. உள்ளம் சார்ந்த நிலை
4. மனம் சார்ந்த நிலை
5. ஆன்மீக நிலை
16265) அறநெறிக் கல்வி வழங்குகின்ற அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?
ஐந்து
16266) அந்த ஐந்து அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்களும் எவை?
1. அமைதியாக அமர்தல்
2. பிரார்த்தனை
3. இசை மற்றும் குழுவாகப் பாடுதல்
4. கதை கூறல
5. குழுச் செயற்பாடுகள்
16267) உயர் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?
ஐந்து
16268) அந்த ஐந்து உயர் கற்பித்தல் நுட்பங்களையும் தருக
1. தியானம்
2. யோகா (சூரிய நமஸ்காரம்)
3. தலைமைத்துவப் பயிற்சி
4. சேவைத் திட்டங்கள்
5. கருத்தரங்குகள்
16269) அறநெறி பாடசாலை எத்தனை பிரிவுகளாக இயங்குகிறது?
நான்கு
16270) அந்த நான்கு பிரிவுகளும் எவை?
பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, இளைஞர் பிரிவு
16271) பாலர் பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 1,2
16272) எத்தனை வயது பிள்ளைகள்? 5,6,7
16273) கீழ்ப்பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 3,4,5
16274) எத்தனை வயது பிள்ளைகள்? 8,9,10
16275) மத்திய பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன? 6,7,8
16276) என்னென்ன வயது பிள்ளைகள்? 11,12,13
16277) மேற்பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன?9,10,11
16278) என்னென்ன வயது பிள்ளைகள்?14,15,16
16279) இளைஞர் பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னெனன? 12,13
16280 ) என்னென்ன வயது பிள்ளைகள்? 17,18,19

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக