
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
இசைக் கலை
8846. தன்னை மறக்கச் செய்வது எது? கலை.
8847. தன்னை மறப்பது எது? இன்பம்
8848. தன்னை மறந்து இறைவனை நினைப்பது எது? பேரின்பம்.
8849. கவின் கலைகளுள் மிக நுட்பமானது எது? இசைக்கலை.
8850. இசை கலைக்கு ‘இசை’ என்ற பெயர் எவ்வாறு வந்தது?
உள்ளத்தோடு பொருந்துவதாலும் உயிர்களை வயப்படுத்துவதாலும்.
8851. இசைக் கலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
நாதயோகம்.
8852. காந்தருவ வேதம் என்று அழைப்பது எதனை?
இசைக்கலையை.
8853. தமிழை எந்த சுபாவத்தின் மொழி என்பர்?
இரக்க.
8854. மனமுருகுவதலால் தோன்றுவன எவை?
இரக்கமும் பக்தியும்.
8855. இசையறிந்து இசைபாடி இறைநாடும் இயக்கம் எப்போது வேரூன்றப்பட்டது?
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு.
8856. அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே என்று பாடியவர் யார்? திருமூலர்
8857. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய என்று பாடியவர் யார்? பூதத் தாழ்வார்.
8858. மனத்தைப் பண்படுத்தும் இசை வகைகளுக்கு என்னவென்று பெயரிட்டனர்? பண்.
8859. பண் என்பது என்ன? பாடலின் ஒலி
8860. பாடல் வகைகளுக்கும் சீர் அமைப்புகளுக்கும் ஏற்ப அமைவது எது? பண்.
8861. ‘பண்’ என்பதற்கு பண் என்று பெயர் வரக் காரணம் என்ன?
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தூக்கு ஆகிய
எட்டுவகைக் கிரியைகளால் பண்ணப்பட்டமையால்.
8862. ஐவகை நிலங்களும் எவை? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
8863. ஐவகை நிலங்களுக்கும் ஐவகை பண்கள் அமைந்தது எந்த காலத்தில்? சங்க காலத்தில்.
8864. குறிஞ்சி நிலத்திற்கு உரிய பண் எது? குறிஞ்சிப் பண்.
8865. முல்லைக்குரிய பண் எது? சாதாரி.
8865. மருதத்திற்கு உரிய பண் எது? மருதப் பண்.
8866. நெய்தலுக்கு உரிய பண் எது? செவ்வழி.
8867. பாலைக்கு உரிய பண் எது? பஞ்சரம்.
8868. பண்களை ஓதி வளர்த்தவர்கள் யார்? பாணர்.
8869. பண்முறையால் தொகுக்கப்பெற்று உரிய பண்களுடன் பாடப் பெற்றது எது?
பரிபாடல் நூற்பாக்கள்.