கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8916) சூரியனின் அதிதேவதையாகத் திகழ்பவர் யார்?
சிவபெருமான்
8917) சூரியனின் மணுவுருவாக கருதப்படுபவர் யார்? சிவபெருமான்
8918) சூரியனின் பெற்றோர் யார்?
கரஸ்பியர்- அதிதி
8919) சூரியன் யாரை மணந்தார்?
சஞ்லிகையை
8920) சஞ்சிகை யாருடைய மகள்?
விஸ்வகர்மாவின் மகள்
8921) சஞ்சிகையின் மக்கள் யார்?
வைபஸ்வதமனு- யமன், யமுனா
8922) சாயாவின் மக்கள் யார்?
சாவர்னிமனு, ச்ருதகர்மா (சனிபகவான்)
8923) சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெயர பெறுகிறார். அவை எவை?
மித்ரன், ரவி,சூரியன், பானு, சுகன், பூஷ்ணன்,
ஹிரண்ய, கர்ப்பன், மர்சி, ஆதித்யன், ஸவிதா அரக் கன், பாஸ்கரன்.
8924) கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?
கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல் லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு. ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய கூடியாது. இறைவன் தான் நம் வாழ்வில் மையம், ஆதாரம் எல்லாம் அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதVணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம்.
இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான்.
நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருது கிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right siனீலீ என்றே அழைக்க ப்படுகிறது. எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம்.
அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுறி வந்து பாருங்கள். தொழுதுவிட்டு வெளியே வரும்போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள். புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனித மாகின்றன. புரியாமல் செய்யும் இவை வெறும் சம்பிர தாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.
8925) தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்?
தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றிவிட்டுத்தான் தொடங் கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்துகொண்டி ருக்கும்.
ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கின்றது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாக வும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தீபம் ஏற்றுகிறோம்.
சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.
எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள்.
தீபம் ஒளிரும் போது எண்ணெயும், திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத் தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும், ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது. அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.
சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள் புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.
திங்கள், 23 ஜனவரி, 2012
திங்கள், 16 ஜனவரி, 2012
அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8904. சூரிய ஒளியானது எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
ஏழு
8905. இந்த ஏழு வண்ணங்களைக் கொண்டதைத்தான் சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் பயணம் செய்கின்றான் என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? வேதத்தில்
8906. சூரியன் காலையில் எந்த சொரூபியாகத் திகழ்கிறான்? ரிக் வேத
8907. மதியத்தில் எந்த சொரூபியாகத் திகழ்கிறார்? யசூர் வேத
8908. மாலை வேளையில் எந்த சொரூபியாகத் திகழ்கிறார்? சாம வேத
8909. சூரியன் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு சொரூபியாக திகழ்கிறான் என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
மந்திர சாஸ்திரத்தில்
8910. சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்னவென்று போற்றப்படுகிறது? மகரமாதம்
8911. மகர மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தை மாதம்
8912. மகர சங்கராத்தியான தை மாத முதல் திகதியில் வரும் விழா என்ன? பொங்கல்
8913. பொங்கல் விழாவிற்கு வேறு பெயர் என்ன? இந்திர விழா
8914. மழைக்குரிய தெய்வம் யார்? இந்திரன்
8915. பொங்கல் விழாவுக்கு ‘இந்திர விழா’ என்று பெயர் வரக் காரணம் என்ன?
இந்திரனை வழிபட்டால் மாதம் மும்மாரி பெய்யும் என்பதால்
பஞ்சிகாவத்தை ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம்

இலங்கைத் திருநாட்டில் கொழும்பு மாநகரில் பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், கடைகள் என இன்னொரன்ன நிறுவனங்கள் நிறைந்து விளங்கும் ஓர் நகரம் பஞ்சிகாவத்தை ஆகும். வாகன உதிரிப்பாக வர்த்தகம் மும்முரமாக நடைபெறும் இந்த பஞ்சிகாவத்தை சந்திக்கு அருகில் பிரதான வீதியையொட்டி பட்டித் தோட்டம் என்று அழைக்கப்படும் இடத்தில் 198/24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம்.
1950 ஆம் ஆண்டளவில் ஜல் ஜல் என சவாரி போகும் மாட்டு வண்டிகள் நிறைந்து விளங்கும் ஓர் பகுதியாக இந்த பஞ்சிகாவத்தை பட்டித் தோட்டம் விளங்கியது. மாடுகளும் மாட்டு வண்டிகளும் நிறைந்து விளங்கியதால் இது 'பட்டித் தோட்டம்' என அழைக்கப்படலாயிற்று. மாட்டு வண்டிகள் வாடகைக்கு விடப்படும் இடமாக இது திகழ்ந்தது.
இந்த பட்டித் தோட்டத்தில் 1950 ஆண்டளவில் 40, 50 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன.
மாட்டு வண்டிகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து இவர்கள் தமது ஜீவனோபாயத்தை நடத்தி வந்துள்ளனர். வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்ட காலம் என்பதால் மாட்டு வண்டி சவாரிகளுக்கு பெரும் கிராக்கி நிலவியது. இப்பகுதியில் வசித்தோர் இங்குள்ள புளிய மரத்தடியில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மனின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இவ்வாறு 10 ஆண்டுகளாக வழிபட்டு வந்தோர் அதன்பின் இத் தோட்டத்து மக்களின் உதவியுடன் இந்த புளியமரத்தடியில் ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு ஆலயம் அமைத்தனர்.
முதன் முதலில் சின்னஞ்சிறு ஆலயமாக இருந்த ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம் காலப்போக்கில் தோட்டத்து மக்களின் உதவியுடன் மடாலயமாக கட்டியெழுப்பப்பட்டது. இம் மடாலயத்தை கோயிலாக எண்ணி வழிபட்டு வந்தவர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாகிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். இதன் விளைவாக தோட்டத்து மக்கள் ஒன்றுகூடி நிர்வாக சபையொன்றை அமைத்தனர். இதன் தலைவராக என். சந்தனமும் உப தலைவராக கே. சுரேஸ் குமாரும் பொருளாளராக பீ. பிரதீப்பும் நியமிக்கப்பட்டதுடன், 18 பேரைக் கொண்ட நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2005.09.16 ஆம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது இந்தத் தோட்டத்தில் 300 தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன.
60 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் 23 அடி உயரத்திற்கு புதிதாக கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீ துர்க்கை அம்மன், சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், காளியம்மன், வைரவர், நவக்கிரக நாயகர்கள் ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய மூலஸ்தானத்தில் 62 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ தேவி கருமாரி அம்மனின் திருவுருவச் சிலையே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ஆலயத்திற்கு எதிரே காவல் தெய்வமான ஸ்ரீ முனியப்பரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இவ்வாலயத்தில் புதிதாக வசந்த மண்டபமும் அமைக்கப்படுகின்றது.
கொழும்பு, பஞ்சிகாவத்தை, பட்டித் தோட்டம், 198/24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தின் புனராவர்த்தன ஏக குண்ட மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012.02.05 ஆம் திகதி காலை 7.14 மணிக்கு நடைபெறவுள்ளது
எதிர்வரும் 2012.02.01 ஆம் திகதி மாலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் 2012.02.02 ஆம் திகதி மாலை 9 மணிக்கு புண்ணியாக வாசனம், கிராமசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்ன ஹோமம் திசா ஹோமம், சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், கோவாசம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி என்பன நடைபெறும்.
2012.02.03 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆதிவாசக் கிரியைகள், சூர்யாக்னி சங்கிரம், கங்கா தீர்த்த சங்கிரகணம், மிருத் சங்கிரகணம், ரக்ஷ¡பந்தனம், த்வஜஸ்தம்ப பூஜை (கொடித்தம்ப பூஜை) குருமாத பூஜை, என்பனவும் மாலையில் விஷேட்சந்தி, பிரசன்ன அபிஷேகம், பிரசன்ன பூஜை, கடகப்தாகனம், கலாகர்ஷணம், க்ஷணஹேழமம், யாகசாலை பிரவேசம், நைநோமீனலம் (கண் திறத்தல்) ஜலாதிவாசம் தான் யாதிவரசம், ஸ்தூபி ஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாகனம், அஷ்டபந்தனம், யாகபூசை, தீபாராதனை என்பனவும் நடைபெறும்.
2012.02.04 ஆம் திகதி காலை 8 மணிக்கு புண்ணியாகவாசகம், தைலாப்யங்கம் (எண்ணெய்க் காப்பு) யாக பூஜை விசேட திரவிய ஹோமம் தீபாராதனை என்பனவும் மாலையில் விம்பசுத்தி ரசஷாபந்தனம், பூர்வ சந்தானம் (நியாசம்) ஸ்பர்சாகுதி, யாக பூஜை, தீபாராதனை என்பனவும் நடைபெறும்.
2012.02.05 ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் புண்ணியாகவாசனம், யாகபூஜை, விசேட தீபாராதனை, வேதபாராயணம், தேவார பாராயணம், மஹா பூர்ணாகுதி, கும்ப ஊர்வலம், ஸ்தூபிகள், அபிஷேகம் என்பன நடைபெற்று அன்று காலை 7.14 மணிக்கு மஹா கும்பாபிஷேகம், மங்கள தரிசனம், எஜமான் அபிஷேகம், மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை என்பன நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
சிவஸ்ரீ கணேச சிவபால குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி. சசிகாந்த குருக்கள், சிவஸ்ரீ சி. இராஜேந்திர குருக்கள், ஸ்ரீ சோமசுந்தர குருக்கள், குணானந்த குருக்கள், சிவானந்தன் குருக்கள், பார்த்தீபன் சர்மா, பிரதீப சர்மா மதிஅழகன் ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். தென் இந்தியாவைச் சேர்ந்த விஸ்ப ஸ்ரீ நடராஜா குழுவினர் ஆலய கட்டிட திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விஸ்வஸ்ரீ எம். ரவீந்திரன் எம். சேனாதிராஜா ஆகியோர் ஆலய வர்ண வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடிவேல் குழுவினரின் மங்கள வாத்தியத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்லாபிஷேக பூஜையும் திருவிழாவும் நடைபெறும். 2012.02.10 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகும். இங்கு 18 ஆம் திகதி ஊர்வலமும் 19 ஆம் திகதி சங்காபிஷேகமும் மண்டலாபிஷேக பூர்த்தியும் தீர்த்தோற்சவமும் திருவூஞ்சல் திருவிழாவும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்று ஆலய பிரதம குருவின் ஆசியுரை ஆலய பரிபாலன சபைத் தலைவர் என் சந்தனம் ஆகியோரின் விசேட உரையும் இடம்பெறும். இதனை ஆலய செயலாளர் பீ. பிரதீப் தெரிவித்தார்.
இவ்வாலய திருப்பணி வேலைகளுக்கும் கும்பாபிஷேக கிரியைகளுக்கும் பெருமளவு நிதி தேவைப்படுவதால் பக்தர்கள் தங்களால் முடிந்தளவு நிதி உதவியை தந்துதவ வேண்டும் என ஆலய பொருளாளர் கே. சுரேஷ்குமார் தெரிவித்தார்
திங்கள், 9 ஜனவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
மூன்றின் பெருமை
8889) ஆன்மாக்கள் எத்தனை? அவை எவை?
- மூன்று, விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர்
8890) மூர்த்திகள் எத்தனை பேர்? அவர்கள் யார்?
- பிரம்மா, விஷ்ணு, சிவன்
8891) மன்னர்கள் மூவர் யார்?
- சேரன், சோழன், பாண்டியன்
8892) தேவாரம்பாடிய மூவர்கள் யார்?
- அப்பர், சம்பந்தர், சுந்தரர்
8893) மனிதர்கள் மூவர் யார்?
சத்தமன், மத்திபன், அதிமன்
8894) சத்திகள் மூவர் யார்?
கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி
8895) ஆசைகள் மூன்றும் எவை?
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
8896) கடவுளின் நிலை மூன்றும் எவை?
- அருவம், உருவம், அருவுருவம்
8897) கடவுளின் தன்மை மூன்றும் எவை?
- சத்து, சிந்து, ஆனந்தம்
8998) மதங்கள் மூன்றும் எவை?
- கன்ன மதம், காடமதம், கபோலமதம்
8899) அக்கினி மூன்றும் எவை?
- ஆகவனீயம், காருக பத்தியம் தாட்சணணாயனம்
8800) சுடர்கள் மூன்றும் எவை?
சூரியன், சந்திரன், அக்கினி
8901) இதியாசங்கள் மூன்றும் எவை?
இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம்
8902) உலகங்கள் மூன்றும் எவை?
பூதலம், மீதலம், பாதிலம்
8903) குணங்கள் மூன்றும் எவை?
சத்துவம், ராஜகம், தாமசம்

தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
இசைக்கலை

8870. பரிபாடல் என்பதற்கு இப்பெயர் எப்படி வந்தது?
பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவினால் இயன்றதால்.
8871. பரிதல் என்பதற்குரிய பொருள் என்ன?
அன்புடன் பேசுதல்.
8872. பாவகையால் பெயர் பெற்ற மற்றொரு நூல் எது?
கலித்தொகை.
8873) பண் தமிழிசைப் பாடல்களில் பெரு விருப்புடையவன் யார்?
சிவபெருமான்
8874) தமிழிசையும் சைவ நெறியும் இணையாக வளரத் தொடங்கியது யாரால்?
திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனாரால்
8875) தமிழிசையும் சைவ நெறியும் இணையாக வளரத் தொடங்கியது எப்போது?
சம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ என்ற தேவாரம் பாடியருளிய போது
8876) தெய்வம் சுட்டிவரும் வாரப் பாடல் என
வழங்கப்பெற்றது எது?
தேவாரம்
8877) தேவாரம் என்பதில் தே+வாரம் என பிரித்தால் ‘தே’ எதை குறிக்கும்?
தேவினிடத்து அன்பை விளைவிப்பதை
8878) தேவாரம் என்பதில் ‘வாரம்’ எதை குறிக்கும்?
அன்பை
8879) தேவாரத்தை வேறு எவ்வாறு வரைவிலக்கணம் செய்து கொள்ளலாம்?
சிவபெருமானுக்கு ஆரம் போல் அழகு செய்வது
8880) தம் பாடலுக்குத் தாமே இசை வகுத்துப் பாடியவர் யார்?
சம்பந்தர்
8881) பெருமானுடன் சேர்ந்து திருப்பதிகம் பாடும் போது அதனை யாழில் அமைத்து வாசிக்கும் திருப்பணியைப் புரிந்து வந்தவர்கள் யார்?
திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும்
8882) திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மனைவியாரின் பெயர் என்ன?
மதங்க சூளாமணியார்
8883) சம்பந்தர் அருளிய பாடல்களை என்னவென்பர்?
உருக்குவேத சாரம்
8884) ‘நீயா மாநீ யேயாமா தாவேbகா நீதானே நேதா நீகா bவேதா மாயா யேநீ மாயாநீ’ என்பது எத்தனை அடிப் பாடல்?
இரண்டடிப்பாடல்
8885) இந்த இரண்டடிப் பாடலில் உள்ள விசேடம் என்ன?
இதில் உள்ள அத்தனை எழுத்துக்களும் நெட்டெழுத்துக்கள்
8886) செந்தமிழ்ப் பாமாலையின் விகற்பங்களாகிய மொழிமாற்று, மாலை மாற்று, திருவியமகம், ஏகபாதம், இருக்குக் குறள், எழுகூற்றிருக்கை முதலானவற்றை அருளிச் செய்தவர் யார்?
சம்பந்தர்
8887) சம்பந்தர் தமது பாடல்களை என்னவென்று குறிப்பிடுவார்?
இசை மாலை
8888) ‘விலையுடைய அருந்தமிழ் மாலை’ என போற்றப் பெறுவது எந்தத் திருப்பதிகம்?
இடரினும் தளரினும் எனதுறு நோய் என்ற பதிகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...