திங்கள், 27 பிப்ரவரி, 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

நிறை குடம்


8962) நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள் எவை?

நிறைகுடம் (நீர் நிறைந்த குடம்), சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையாரின் சிலை நெல் அல்லது பச்சரிசி, தலை வாழை இலை, முடித் தேங்காய் 1, மாவிலை 5 அல்லது 7, குத்து விளக்கு 2, தேங்காய் எண்ணெய், விளக்குத் திரி, விபூதி + கிண்ணம், சந்தனம் + கிண்ணம், குங்குமம் + கிண்ணம், பன்னீர் + செம்பு, பலநிறப் பூக்கள், வாழைப்பழம் ஒரு சீப்பு, தேசிக்காய், தேங்காய் உடைப்பதற்கு) வெற்றிலை 3, பாக்கு 3, சாம்பிராணி.

8963) நிறைகுடம் வைக்க முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன் மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும், அதன் பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை வைக்கவும்.

8964) தலைவாழை இலையை, இலையின் நுனிப் பகுதி எந்தத் திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும்?

வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு

வைக்க வேண்டும்.

8965) மேற்கூறிய முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால் என்ன செய்யலாம்?

பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக்கூடியதாக வாழை இலையை வைக்கவும்.

8966) வாழை இலையை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?

நெல் அல்லது அரிசி பரப்பி, அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும்.

8967) கும்ப குடத்தை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?

அதன் இரு பக்கங்களிலும் குத்து விளக்கு ஒவ்வொன்று வைக்கவும்.

8968) அதன் பின் என்ன செய்ய வேண்டும்?

ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித் தேங்காயை அதன் மேல் வைக்கவும்.

8969) அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது எத்தனை மாவிலைகளை வைப்பார்கள்?

மூன்று

8970) கும்பத்தை வைத்தபின் என்ன செய்யலாம்?

ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பு ஒன்றும் வெற்றிலை பாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்) தேசிக்காய் ஒன்று ம் வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.

8971) மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கொண்ட தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்.

இடது பக்கத்தில்.

8972) இந்தத் தட்டை இடது பக்கத்தில் வைத்து என்ன செய்யலாம்?

அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையாரை அல்லது பிள்ளையார் சிலையை வைக்கலாம்.

8973) சந்தனம், குங்குமம், பன்னீர்ச் செம்பு, விபூதி, இவற்றை என்ன செய்யலாம்?

இன்னொரு தட்டில் வைக்கவும்.

8974) இந்தத் தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்?

வலப்பக்கத்தில்

8975) இவ்வாறு நிறைகுடம், சந்தனம், குங்குமம் வைத்தபின் என்ன செய்வார்கள்?

நிறைகுடத்திற்கு மாலை போடுவார்கள் அல்லது பூக்களால் அலங்கரிப்பார்கள். குத்துவிளக்குக்கும் மாலை போடுவார்கள்.

8976) குத்து விளக்குகளை எப்போது கொளுத்த வேண்டும்?

நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்

8977) எத்தனை திரிகளை கொளுத்த வேண்டும்?

திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ

8978) குத்துவிளக்கை கொளுத்திய பின் செய்யக்கூடிய செயல் என்ன?

தேங்காய் ஒன்றை உடைத்து கும்பத்தின் இருபக்கங்களிலும் வைக்கலாம். தூபம் ஏற்றலாம். ஒன்று அல்லது மூன்று சாம்பிராணிக் குச்சிகளைக் கொளுத்தி வாழைப்பழத்தில் குத்திவிடலாம்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012



கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மாசிமகம்)

8955) மாசி மாதத்தில் சூரிய பகவான் எந்த ராசியில் சஞ்சாரம் செய்வார்?

கும்பராசியில்

9856) மக நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியது?

சிங்க ராசி

8957) மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பவர் யார்?

சந்திரன்

8958) சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பதை என்னவென்று கூறப்படும்?

மாசிமகம்

8959) மாசிமகத்தில் நடைபெறும் உற்சவம் எது?

தீர்தோற்சவம்

8960) மாசி மகத்தன்று நடத்தப்படும் விழாவை என்னவென்று கூறுவர்?

கடலாடும் விழா

8961) பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன் நாள் எது?

மாசிமகக் கடலாடு தீர்த்தமாடும் நன்நாளாகும்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

8941. காளைக்குரிய வேறு பெயர் களைத் தருக.

நந்தி, எருது, விடை,
ஏறு வெள்ளேறு, ரிஷபம், இடபம், நந்திதேவர், நந்தி மகாதேவர், நந்தி கேசுவரர்.

8942. நந்தி தேவரின் நான்கு கால்களும் எதை உணர்த்து கின்றன?

நான்கு வேதங்களை

8943. பிரதோஷநேரத்தில் முதல் பூசை யாருக்கு உரியது?

நந்தி தேவருக்கு

8944. சிவன், நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடை யில் திருநடனம் புரியும் நேரம் எது?

பிரதோஷ நேரம்.

8945. பிரதோஷ நேரத்தில் முதல் பூசை நந்தி தேவருக்கு நடத்துவது ஏன்?

சிவன் அந்நேரம் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் திரு நடனம் புரிவதால் அந்த நேரம் சிவ தரிசனம் செய்தால் அளவற்ற நற்பலன்கள் கிடைப்பது உறுதி என்பதால் ஆகும்.

8946. பொற்பெட்டியில் அவதரித்தவர் யார்?

நந்தி தேவர்.

8947. இவர் பொற்பெட்டியில் அவதரிக்க காரணமானவர் கள் யார்?

சிலாத முனிவரும் சித்ராவதியும்.

8948. மகப்பேறு இல்லை என்று சிவனை வேண்டிய வர்கள் யார்?

சிலாத முனிவரும் சித்ராவதியும்.

8949. இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் என்ன கூறினார்?

யாகம் செய்வதற்கு நிலத்தை உழுதால் எம்மைப்போல் மகன் தோன்றுவான் என்றார்.

8950. நந்தி தேவர் எத்தனை முறை தவம் செய்தார்?

மூன்று முறை

8951. முதன் முறை தவம் செய்து எதனைப் பெற்றார்?

திருவடியில் நீங்காத அன்பினை

8952. இரண்டாம் முறை என்ன பெற்றார்?

சிறு நிந்தனை, சிவனடியார் நிந்தனை
முதலிய நிந்தனைகளைச் செய்கின்றவர்களை தண்டிக்கும் ஆணையை ஏற்றார்.

8953. மூன்றாம் முறை எதனைப் பெற்றார்?

என்றும் நிலைத்திருக்கும் தன்மையை

8954. நந்தி தேவர் யாரை மணந்தார்?

சுயசையை.

திங்கள், 6 பிப்ரவரி, 2012


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8926) உலகம் எப்போது தோன்றியதாக ஐதீகம்

தைப்பூசத்தன்று

8927) சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் எது?

தைப்பூசம்

8928) சிவபெருமான் நடனம் ஆடியது எங்கு?

சிதம்பரத்தில்

8929) நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்த மன்னன் யார்?

இரணியவர்மன்

8930) இரணியவர்மன் நடராஜரை எங்கு வைத்து தரிசித்தார்?

சிதம்பரத்தில்

8931) இரணியவர்மன் சிதம்பரத்திற்கு வந்து என்ன செய்துகொண்டிருந்தார்?

அரும்பெரும் திருப்பணிகள்

8932) இரணியவர்மன் என்னும் மன்னன் நடராஜரை சந்தித்தது எப்போது?

தைப்பூசத்தன்று

8933) ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று சமாதியானவர் யார்?

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.


நந்தி தேவர்

8934. ‘நந்தி’ என்ற சொல் எந்த மொழிச் சொல்?

வடமொழிச் சொல்.

8935. ‘நந்தி’ என்ற இந்த வடமொழி சொல்லுக்கு உரிய பொருள் என்ன?

இன்பம் உடையவன்.

8936. நந்தி என்ற சொல் யாரையும் குறிக்கும்?

சிவனையும் அவனது அம்சமான ஒரு மகனான நந்தி தேவரையும்.

8937. சிவனுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டவர் யார்?

நந்தி தேவர்

8938. சிவனின் வாயில் காவலன் எது?

காளை

8939. சிவனின் வாகனம் எது? காளை

8940. சிவனின் கொடிச் சின்னம் எது?

காளை

வியாழன், 2 பிப்ரவரி, 2012


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8926) உலகம் எப்போது தோன்றியதாக ஐதீகம்

தைப்பூசத்தன்று

8927) சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் எது?

தைப்பூசம்

8928) சிவபெருமான் நடனம் ஆடியது எங்கு?

சிதம்பரத்தில்

8929) நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்த மன்னன் யார்?

இரணியவர்மன்

8930) இரணியவர்மன் நடராஜரை எங்கு வைத்து தரிசித்தார்?

சிதம்பரத்தில்

8931) இரணியவர்மன் சிதம்பரத்திற்கு வந்து என்ன செய்துகொண்டிருந்தார்?

அரும்பெரும் திருப்பணிகள்

8932) இரணியவர்மன் என்னும் மன்னன் நடராஜரை சந்தித்தது எப்போது?

தைப்பூசத்தன்று

8933) ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று சமாதியானவர் யார்?

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...