வெள்ளி, 27 நவம்பர், 2015

வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல்

(14596) சங்கடம் என்ற வட மொழி சொல்லுக்குரிய தமிழ் மொழி சொல் எது?
இக்கட்டு, தொல்லை

(14597) சங்கதி என்ற வட மொழி சொல்லுக்குரிய தமிழ் மொழி சொல் எது?
செய்தி

(14598) சங்கோஜம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
கூச்சம்

(14599) சதம் என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
நூறு

(14600) சதா என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
எப்பொழுதும்

(14601) சதி என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
- சு+ழ்ச்சி

(14602) சத்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஓசை, ஒலி

(14603) சந்தானம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மகப்பேறு

(14604) சந்தேகம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஐயம்

(14605) சந்தோ'ம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மகிழ்ச்சி

(14606) சபதம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
சு+ளுரை

(14607) சம்சாரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மனைவி

(14608) சம்பந்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? தொடர்பு

(14609) சம்பவம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
நிகழ்ச்சி

(14610) சம்பாதி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஈட்டு, பொருளீட்டு

(14611) சம்பிரதாயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மரபு

(14612) சம்மதி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஒப்புக்கொள்
(14585) பஞ்ச கோசங்களும் எவை?

அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய
கோசம், விஞ்ஞானமய கோசம்.

(14586) பஞ்ச காவ்யங்களும்; (பசு) எவை?

பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

(14587) பஞ்ச லோகங்களும் எவை?

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

(14588) பஞ்ச ஜPவநதிகளும் எவை?

ஜPலம், ரவி, சட்லெட்ஜ் , பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

(14589) பஞ்ச மாலைகளும் எவை?

இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

(14590) பஞ்சமா யக்ஞங்களும் எவை?

பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பு+த யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.

(14591) பஞ்ச ரத்தினங்களும் எவை?

வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

(14592) பஞ்ச தந்திரங்களும் எவை?

மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.

(14593) பஞ்ச வர்ணங்களும் எவை?

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

(14594) பஞ்ச ஈஸ்வரர்களும் யார்?

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

(14595) பஞ்ச சுத்திகளும் எவை?

ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.
(14571) வேலவனின் வேறு பெயராகிய சுப்ரமணியன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.


(14572) வேலவனின் வேறு பெயராகிய வள்ளற்பெருமான் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

(14573) வேலவனின் வேறு பெயராகிய மயில்வாகனன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

(14574) பஞ்ச என்றால் என்ன? ஐந்து

(14575) பஞ்சபு+தத் தலங்கள் எவை?

காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

(14576) பஞ்சலோகங்கள் எவை?

செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

(14577) பஞ்சபுராணங்களும் எவை?

தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

(14578) பஞ்சலிங்கத் தலங்களும் எவை?

அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.

(14579) பஞ்சபட்'pகள் எவை?

வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்

(14580) பஞ்ச கங்கைகள் எவை?

ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.

(14581) பஞ்சாங்கங்கள் எவை?

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

(14581) பஞ்ச ரி'pகள் யார் யார்?

அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.

(14582) பஞ்ச குமாரர்கள் யார்?

விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.

(14583) பஞ்ச நந்திகள் எவை?

போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி, தர்ம நந்தி.

(14584) பஞ்ச மூர்த்திகள் எவை?

விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.

(14585) பஞ்சாபஷேகங்கள் எவை?

வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பு+ரம், குங்குமப்பு+ கலந்த நீர் , கிராம்பு, கொரோசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 (14586) பஞ்ச பல்லவம் எவை?

அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.

(14587) பஞ்ச இலைகள் எவை?

வில்வம், நொச்சி, விளா, துளசி, கிளுகை. (14588) பஞ்ச உற்சவங்கள் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம் இருமுறை)உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

(14589) பஞ்ச பருவ உற்சவங்கள் எவை?

அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.

14590) பஞ்ச சபைகள் எவை?

ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...