ஞாயிறு, 16 மே, 2021
முன்வினைப் பயனின் துன்பம் நீங்கி இன்பம் பெற அருளும் விசாகம்
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.
அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள். இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.
மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
விநாயகர்
யானையை அடக்கும் கருவிகள் என்னென்ன?
பாசமும் அங்குசமும்,
விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருப்பது ஏன்?
தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை உணர்த்துவதற்கே ஆகும்.
அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை உணர்த்துவது எது?
அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
அவரது கும்பம் ஏந்திய கை எதை புலப்படுத்துகிறது?
படைக்கும் தொழிலை
மோதகம் ஏந்திய கை எதை புலப்படுத்துகிறது?
காத்தல் தொழிலை
அங்குசம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது?
அழித்தல் தொழிலை
பாசம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது?
மறைத்தல் தொழிலை
தந்தம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது?
அருளல் தொழிலை
விநாயகர் புரியும் ஐம்பெருந் தொழில்களை எவ்வாறு அழைப்பார்கள்?
சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம்
விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன?
பிள்ளையார்.
பிள்ளையார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?
பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றுள்ளது.
அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் என்ன பயன்?
பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
விநாயகருக்கு என்னென்ன நிவேதனம் செய்யலாம்?
கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தம்

புதன், 12 மே, 2021
குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு
வெண்பா படத்தின் நாயகி நயோமி
சாதிக்க வேண்டுமெனில் பிரச்சினைகளை
கண்டு பயப்படக் கூடாது
*****
வெண்பா படத்தின் நாயகி நயோமி
************
ஊடகத்துறை மீதான மோகம் இன்று பல இளம் யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ளதன் விளைவாக இலத்திரனில் ஊடகங்ளை நாடி வருகின்ற இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகைளில் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு முயற்சித்து அது தொடர்பாக பல்வேறு பயிற்சிளையும் பெற்றுள்ளதுடன் அது தொடர்பாக கற்று வருபவர் கண்டி, தெல்தொட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கன்னிப் பெண் கணநேஷா நயோமி. இவரது தாயாரின் பெயர் மனோன்மணி. கண்டி மலைமகள் இந்து மத்திய கல்லுாரியில் கல்வி பயி்ன்ற இவருக்கு, ஒரு அக்காவும் ஒரு தம்பியும் உள்ளனர். ஊடகத்துறையில் ஏற்பட்ட மோகத்தால் அத்துறைக்குள் பிரவேசிப்பதற்காக பணம் செலவழித்து பல பாடநெறிகளை பயின்றாலும் அதற்கான வாயப்பு அவருக்கு எட்டக்கனியாகவே இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது. எனினும் அதற்கான முயற்சியை மட்டும் கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதில் கரையை கண்டுவிடலாம் என்று எண்ணத்துடன் தொடர்ந்து அது சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவரை அண்மையில் பேட்டி கண்போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு
உங்களுக்கு கதை எழுத உந்து சக்தியாக இருந்தது எது?
நான் கதை எழுத மாட்டேன்.
அப்படி என்றால் நீங்கள் நடித்த குறுந்திரைப்படத்திற்குரிய கதை யாருடையது?
நீங்கள் முதன் முதலாக நடித்தது எந்த குறும்படத்தில்?
உயிர் எழுதும் மடல்
எப்போது நடித்தீர்கள்? அப்போது வயது எத்தனை?
2019இல், அப்போது வயது 20
அதற்கான வாப்பு எப்படி கிடைத்தது?
கெப்பிட்டல் எப்எம்மில் வேர்க் பன்ற அண்ணா மூலம்
கெப்பிட்டலில் என்னவாக வேலை செய்தீங்கள்?
நான் வேலை செய்யவில்லை.
எனக்கு தெரிந்த அண்ணா ஒருவர் வேலை செய்கிறார்.
அவர எப்படி தெரியும்?
எனக்கு ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் மூலம் போது தெரியும்.
ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?
நான் சிறுவயது முதல் எனக்குள் ஒரு ஆசை ஏற்பட்டது. நானும் . நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்று.
ஊடகத்துறை தொடா்பாக பயிற்சி அளிக்க வந்தவரா அவர்?
ஆம்
நீங்கள் பெற்ற பயிற்சி என்ன?
எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீங்கள்? ஆறு மாதம்
எவ்வளவு காசு அறவிட்டார்கள்?
ஹட்டன், ஹில் கொலெஜ் 10,000 ரூபா. மாவனல்லை ஜே. எம். மீடியா கொலெஜ் 19,000 ரூபா.
நீங்கள் பெற்ற பயிற்சி என்ன?
ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு தொகுக்க வேண்டும். நிகழ்ச்சியை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். செய்தி வாசிப்பு.
அந்த பயிற்சி பெற்றதால் தொழில் ஏதும் கிடைத்ததா?
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.
எந்த தொலைகாட்சி நிறுவனத்தில்?
யாழ்ப்பாணம் தீ தொலைக்காட்சி நிறுவனத்தில்
என்ன வாயப்பு?
ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக
தீ தொலைகாட்சியில் எவ்வளவு காலம் வேலை செய்தீங்கள்?
மூன்று மாதங்கள்
தொடர்ந்து என்னென்ன குறுந்திரைப்படங்களில் நடித்தீங்கள்
என்னுடைய முதலாவது படைப்பு உயிர் எழுத்து மடல். ஆனால் திரையிடப்படவில்லை,
அடுத்து மான்யா என்ற முழு நீள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன்.
அடுத்த படியாக வெண்பா என்ற குறுந்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தேன். இத்திரைப்படம்
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது.
இதில் நடித்தத்திற்கு உங்களுக்கு காசு கொடுத்தார்களா?
முதல் படைப்புக்கு இல்லை
பாடசாலையில் படிக்கும்போது மேடை நாடகங்களில் நடித்தது உண்டா?
ஆம்
உங்கள் நடிப்பை பார்த்து உற்சாகப்படுத்தியவர்கள் யாராவது உண்டா?
ஆம். வெண்பா குறுந்திரைப்படத்தை பார்த்தவர்கள். அதில் வாழ்த்தியவர்கள். என்னுடைய நண்பர்களான சி.வி லாக்ஸ், மற்றும் அருன், அக்கே ரானில், மற்றும் பிரகாஷ், பானு, ரிசான். தர்சன் மற்றும் ரசிகர்கள், and fan's
அது திரையிடப்படாததற்கு காரணம் என்ன?
முறையாக எடுக்கப்படவில்லை
அது யாருடைய படம்? அன்சார்
இதில் நடித்ததற்கு காசு கொடுத்தார்களா?
வெண்பா படத்திற்கு தந்தாங்க
எவ்வளவு என்று சொல்ல முடியுமா? பதில் இல்லை
முதன் முதலாக நடிப்புக்கு காசு கிடைத்ததும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
மகிழ்ச்சியாக இருந்தது.
இப்ப உங்கள் வயது எத்தனை
22
இப்ப என்ன படத்தில் நடிக்கிறீங்கள்?
வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் திகதி அறிவிக்க வில்லை.
முதன் முதலாக உங்கள் முகத்தை திரையில் பாா்த்தபோது எப்படி இருந்தது?
நானும் திரைக்கு வந்தது விட்டேன் என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
யாரையாவது காதலிக்கிறீங்களா?
இல்லை.
கல்யாணம் எப்போது?
தற்போது அதற்கு ஆசை இல்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் நடைபெறும்.
எப்படிபட்ட மாப்பிள்ளையை எதிர்பாா்க்கிறீங்க?
நல்ல மனம், நல்ல குணம், எப்போதும் எனக்கு துணையாக நிற்க வேண்டும். இன்பம் துன்பம் என்றாலும் கூடவே இருக்கணும்.
என்ன தொழில் செய்பவரை எதிர்பாா்க்கிறீங்கள்?
நல்ல தொழில் என்றால் நல்லம்.
ஊடகத்துறைக்கு நுழைய விரும்பும் உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?
பெண்கள் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும். ஆனால் பிரச்சினைகளை கண்டு பயப்படக் கூடாது. அதுவும் ஊடகத்துறை என்றால் நிறைய பேர் கூறும் விடயம், ஊடகத்துறை என்றால் நிறைய பிரச்சினை வரும். அதனால் நீ போக வேண்டாம் என்று கூறி பெண்களை மட்டம் தட்டுவார்கள். உண்மையாக ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், பிரச்சினைகளை கண்டு பயப்பட வேண்டாம். எதிர்த்து போராடுங்கள். மேலும் ஊடகத்துறை பற்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதில் கலந்து கொண்டு உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்ல நீங்களும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் பல பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்
இந்தத் துறையில் உரிய பயிற்சி கிடைத்தது என்று நீங்கள திருப்தி அடைகின்றீங்கள்?
இந்த பயிற்சியில் பெற்ற சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எண்ணுகிறீங்களா?
கண்டிப்பாக
அப்படியென்றால் உங்களுக்கு ஏன் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
கிடைத்தது. ஆனால் அதற்கு ஏற்ற காசு கிடைக்கவில்லை.
நான் மீண்டும் முயற்சி செய்து வருகின்றேன்.
பொருத்தமான ஒன்று கிடைக்கும் வரை கிடைத்ததை வைத்து முன்னுக்கு வந்திருக்கலாம் அல்லவா?
ம்,,,,ம்
அப்படியென்றால் ஏன் அந்த வாய்ப்பை நழுவ விட்டீங்கள்?
கொடுப்பனவு பிரச்சினை அதுதான்.
அது தனியார் துறையா?
அப்படியென்றால் அந்த சான்றிதழுக்கு அரச அங்கீகாரம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறீங்களா?
அப்படியில்லை கண்டிப்பாக கிடைக்கும். நான் இன்னும் அதற்கு முயற்சி செய்யவில்லை.
ம்... விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கு உங்கள் கருத்து...!
ம்.....
ஊடகத்துறையில் நீங்கள் சந்தித்த சங்கடங்கள் என்ன?
நிகழ்ச்சிகள் செய்யும்போது நேரங்களை கவனிப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. நேரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல பேச்சுத் திறனும் முக்கியம்.
ஆண்களால் தொல்லைகள் ஏதும் ஏற்பட்டதுண்டா...?
ஆம் . பெண்கள் என்றால் நிச்சயமாக ஆண்களின் பிரச்சினை வரும்.
நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?
காதல் வலை தான்
காதலிப்பதாக தொந்தரவுகள் தந்தார்களா? ஆம்
இவர்களைப் பற்றி என்ன சொல்ல வுிரும்புகிறீங்கள்?
முதலில் பெண்களுடைய இலட்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல் காதல்வலை வீச வேண்டாம்.
வார்த்தைகளால் மட்டும்தான் தொந்தரவுகள் ஏற்பட்டதா?
ஓம்
இவ்வாறான தொந்தரவுகளுக்கு முகம் கொடுத்த நீங்களே இளம் பெண்களுக்கு இத்துறையில் பிரவேசிக்கலாம் என்று அறுவுரை கூறுவது சரியா?
அதுதான் நான் சொல்றேன் பிரச்சினைகள் வருதுன்னு சொல்லி பயப்படகூடாது. வேண்டாம். எல்லாத்துக்கும் பயந்தால் எங்கள் கனவு நிறைவேறாது.
முருகன்
முருகனின் திருவுருவங்கள் எத்தனை? 16
அந்த 16 திருவுருவங்களும் எவை?
1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்கள் எத்தனை?
மூன்றாகும்.
அந்த மூன்று இடங்களும் எவை? திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், போரூர்
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது எங்கு?
திருச்செந்தூர்
தாரகாசுரனை வதம் செய்தது எங்கு?
திருப்பரங்குன்றம்,
சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய இருவரின் சகோதரர் யார்?
சிங்க முகாசுரன்
சிங்க முகாசுரனை வதம் செய்தது இடம் எங்கு?
போரூர்
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ளவை எவை? ஆயுதங்கள்
முருகப்பெருமானின் வலப்புறத்தில் ஆயுதங்கள் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்
இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் என்னென்ன இருக்கிறது?
வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவை.
முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய்,
முருகன் யாரால் தாங்கப்பட்டான்?
கங்கையால்
கங்கையால் தாக்கப்பட்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?
காங்கேயன்
சரவணப் பொய்கையில் உதித்ததால் வந்த பெயர் என்ன?
சரவண பவன்
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் வந்த பெயர் என்ன?
கார்த்திகேயன்
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் வந்த பெயர் என்ன?
கந்தன்
சண்முகப் பெருமானின் வாசஸ்தலம் எது? குமரக்கோட்டம்
குமரக்கோட்டம் எங்கே உள்ளது?
காஞ்சீபுரத்தில்
கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூல் எது? திருப்புகழ்
திருப்புகழ் நூலினை இயற்றியவர் யார்?
அருண கிரிநாதர்.
முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று யார் பாடியுள்ளார் ?
அருட்கவி அருணகிரி
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்?
முருகன் ஆவான்.
முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் யார்?
மகாகவி களிதாசர்.
யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் எங்கே செதுக்கப்பட்டுள்ளது?
மாமல்லபுரத்துப் பாறைகளில்
முருகனின் கையில் உள்ள வேல் என்னவென்று பெயர் பெறும்?
இறைவனின் ஞானசக்தி என
பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் யாரை காணலாம்?
முருகனை
பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டு. அது எது.?
பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.
எதிர்ப்புகளும் துரோகங்களும் நம்மை வலுவிழக்கச் செய்ய வாய்ப்பு தேடும்
எதிர்ப்புகளும் துரோகங்களும் நம்மை வலுவிழக்கச் செய்ய வாய்ப்பு தேடும்
அறநெறி
எந்த நேரங்களில் நதிகளில் குளிக்கக்கூடாது இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
அமாவாசை அன்று வேறு வீடுகளில் சாப்பிடலாமா?
முடிந்தவரை நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அமாவாசை அன்று என்ன செய்தால் நல்லது?
நமது வீட்டிற்கு அடுத்தவரை அழைத்து உணவு அளிப்பது பெரும் புண்ணியம்.
கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்கலாமா?
கூடாது
காயத்ரி மந்திரத்தை எப்படி பட்ட இடத்தில் ஜபிக்க வேண்டும்?
சுத்தமான இடத்தில் தான்
பிரயாணத்தின் போது சொல்லலாமா?
சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இறைவனுக்கு சூடம் காண்பிக்கும்போது, இறைவனின் காலிற்கு எத்தனை தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்?
நான்கு
முகத்துக்கு எத்தனை தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்? ஒரு தடவை
கடைசியாக என்ன செய்ய வேண்டும்?
முழு உருவத்துக்கும் சுத்தி காண்பிக்கவேண்டும்.
முழு உருவத்துக்கும் எத்தனை தடவை காண்பிக்கவேண்டும்?
மூன்று தடவை
வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லலாமா?
செல்லக்கூடாது
எரியும் விளக்கில் உள்ள எண்ணெய்யை அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் நல்லதா?
கூடாது.
ஆன்மீகத்தில் உயர்வான நிலையை ஒருவர் அடைய வேண்டுமெனில் முதலில் அழியவேண்டியது எது?
அகங்காரம்
முக்திக்கான முதல் படி எங்கே தொடங்கும்?
எப்போது நான் என்கிற தன்மை அழிகிறதோ அங்கே
இதற்கான ஒரு செயல்முறையாக நம் முன்னோர்கள் எதனை வழக்கமாக வைத்திருந்தனர்.
நம்மை விட மூத்தவர்களின் காலில் விழுவதை
ஒருவரை வணங்குகிற போது எவற்றையெல்லாம் நாம் வணங்குகிறோம்?
வணங்கப்படுபவரின் வயது, ஞானம், சாதனை, அனுபவம் ஆகிய சகலவிதமான நல்லாற்றலையும் நாம் வணங்குகிறோம்.
இவ்வாறு அவர்களுக்கு நாம் அளிக்கிற மரியாதையில், நன்றியில் என்ன நடக்கும்? அவர்கள் மனம் குளிர்ந்து எழும் நல்லாற்றலே நம்மை ஆசியாக வந்து அடைகிறது.
ஆசி என்பது என்ன?
ஒருவரின் நல்லாற்றல் நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதே ஆகும்.
ஆசி வழங்குவோர் வாங்குவோரின் தலையில் கைவைத்து ஆசி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இதன் பொருள் என்ன?
அவரிடம் இருக்கும் நல்லாற்றலை ஆசி வாங்குபவருக்கு அவர் வழங்குகிறார் என்பதே ஆகும்.
இதனை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் என்னவென்று சொல்லலாம்?
ஒருவருக்கு மரியாதை செய்வதும், நன்றியை வெளிப்படுத்துவதும் நல்லறமாகும்.
ஒரு மனிதரின் மொத்த எடையையும் தாங்கி நிற்கிற பாதத்தில் ஒருவர் பணிகிற போது என்ன நடக்கும்?
பணிபவரின் அகங்காரம் அழிகிறது. அவருடைய நான் எனும் தன்மை அங்கே அழிந்து போகிறது
‘சனாதன தர்மம்’
இந்து சமயத்திற்குரிய வேறு பெயர் என்ன?
‘சனாதன தர்மம்’
இதன் பொருள் என்ன?
‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும்.
இதன் அடிப்படை என்ன?
அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.
இந்து சமய வாழ்க்கை எவற்றை அடிப்படையாகக் கொண்டது?
அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை உட்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
மேற்கண்ட அனைத்தும் ஒருங்கிணையும்போது என்ன நடக்கும்?
அது ஒரு சிறந்த ஆளுமையை வளர்க்கும்.
இந்து சமயத்தின் இந்த ஒருங்கிணைந்த பயிற்சியைப் பெறும் போது என்ன நடக்கும்?
மனிதன் வாழ்க்கையில் சலனம் இல்லாத மேம்பாட்டை எட்ட முடியும்.
பொதுவாக இறைவனை அடைவதற்கான வழிகள் எத்தனை?
நான்கு
அந்த நான்கு வழிகளும் எவை?
கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ராஜயோகம்
இறைவனை நெருங்குவதற்கும்உதவும் வகையில் எத்தனை வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது?
எட்டு
அந்த எட்டு வகைகளும் எவை?
*உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது.
இதை வலியுறுத்த என்ன கூறப்படுகிறது?
‘அன்பே சிவம், அதுவே நலம்’
அந்த எட்டு வகைகளுள் மற்றையவை எவை?
* பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.
* மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.
* உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.
* தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.
* எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.
* எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.
* எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.
இந்த எட்டு வகை குணங்கள் மூலம் எவற்றை பெறலாம்?
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் பெற முடியும்.
இவை என்ன செய்யம்?
இறைவனை எளிதில் காண உதவும்.
இந்து சமயத்தின் முக்கிய அம்சம் எது?
இறைவனை காண வேண்டும் என்பதே ஆகும்.
எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு, ஒருங்கிணைந்த ஒன்றாக, எளிமையானதாக வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன?
இந்து சமயம் மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளதுதான்.
இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எப்படி சொல்லலாம்?
மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறை வழிபாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது.
சித்திரை
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள் எது? சித்திரை முதல் நாள் ஆகும்.
சித்திரை மாத்தின் முதல் நாளின் சிறப்பு என்ன?
பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா எப்பொழுது நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமி அன்று நடந்ததாக
சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்?
ஜென்மாந்திர பாவங்கள் விலகும்.
சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் என்ன நடக்கும்?
வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.
சித்ரா பௌர்ணமி திதி யாருக்கு உகந்தது?
தேவர்களுக்கு
சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு என்ன அவதாரம் எடுத்தார்?
மீனாக (மச்சம்)
ஆகவே, அன்று என்ன ஜெயந்தி கொண்டாடப்படுகிறது?
மத்ஸ்ப ஜெயந்தி
லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து எப்பொழுது பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது?
சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில்
சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் யார் பிறந்ததாகக் கூறப்படுகிறது?
அம்பிகை
எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது எப்போது?
சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான்.
அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று வேறு என்ன நடந்த்து?
நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
‘ஓம் நம சிவாயா’
77
‘ஓம் நம சிவாயா’ என்ற மந்திரம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது?
மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது.
‘ஓம் நம சிவாயா’ என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லி பழகுவதால் ஏற்படும் நன்மை என்ன?
அது சிறந்த ஆக்கபூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
‘ஓம் நம சிவாயா’ என்ற நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன?
இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம்.
இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.
‘ஓம் நம சிவாயா’- என்ற தொடரின் பொருள் என்ன?
நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்பதாகும்,
நம சிவாய என்பதில் உள்ள "ந" என்பது என்ன?
ந-நிலம்,
நம சிவாய என்பதில் உள்ள "சி" என்பது என்ன?
சி-அக்னி,
நம சிவாய என்பதில் உள்ள "வா" என்பது என்ன?
வா-காற்று,
நம சிவாய என்பதில் உள்ள "ய" என்பது என்ன?
ய-ஆகாயம்
பஞ்ச பூதங்களின் அதிபதி யார்? சிவபிரான்
. இந்த மந்திரம் எந்த அருளினைப் பெற்றுத் தரும்?
இந்த மந்திரம் அளிக்கும் வேறு அருள்கள் என்ன?
மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
அறநெறி அறிவு நொடி
சிவபெருமானுக்கு பிடித்த வேதம்? சாம வேதம்
தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் யார் ? திருச்சி தாயுமானவர்
மதுரையில் சிவன் ஆடும் தாண்டவம் ? சந்தியா தாண்டவம்
சிவபெருமான் அம்மா என்று யாரை அழைத்து மகிழ்ந்தார் ? காரைக்கால் அம்மையார்
சித்து , அசித்து என்றால் என்ன? சித்து என்றால் உயிர்களின் தொகுதி அசித்து என்றால் உயிரில்லாத பொருளை குறிக்கும்
விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ?
ஆவணி மாதம்
விநாயக சதுர்த்தி கொண்டாடுவது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ?
வளர்பிறை சதுர்த்தி
வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ? மச்சாவதாரம்
வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ? 18
வேதங்களில் மிகவும் பழைமையானது எது?
ரிக் வேதம்
சிவனுக்கு எத்தனை வடிவங்கள்? 64
சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது? இசை
அறநெறி அறிவு நொடி
222
சிவராத்திரி என்ற சொல்லுக்கு உரிய பொருள் என்ன?
மோக்ஷம் தருவது என பொருள் பெறும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி என்ன?
இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும்.
இவருக்கு இந்த திதி வரக் காரணம் என்ன?
சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள்.
மகிமை மிக்க மகா சிவராத்திரி எப்போது வரும்?
மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவில்
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை என்னவென்று அழைப்பார்கள்?
லிங்கோத்பவ காலம் என்பார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த தருணம் பற்றி கூறுவதானால்....?
சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும்.
நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றியவர் யார்? சிவபெருமான்
சிவபெருமானை ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தவர்கள் யார்?
பிரமனும் திருமாலும்
அதனை நினைவுகூரும் வகையில் என்ன செய்ய வேண்டும்?
உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.விரதத்தின் போதும், கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்?
தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை. ஆனால் அவற்றுள் செப்பு-உலோகம் அதனை வெகு சுலபமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.
அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் போது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும், அதனை
அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப் பெற்ற மந்திரங்களின்
முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது.
அருகம்புல் மாலை ஏன்? அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன்
போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும்
வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
சித்திரா பௌர்ணமி
இவ்வுலகின் பாவ புண்ணிய பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.
அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார்.
அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் – பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...