அறநெறி அறிவு நொடி
|
திங்கள், 31 மே, 2010
நாகதோஷம்
திங்கள், 24 மே, 2010
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
6839) மயிலின் முக்கியமான பண்பு எது?
அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான்.
6840) மயில் கவர்ச்சியாக தோன்றுவதற்கு எது காரணமாக இருக்கிறது?
நீலமயமான வண்ணம்
6841) முருகனுக்கு மயிலை வாகனமாக வைத்திருப்பதற்குரிய தத்துவம் என்ன?
மயிலின் அழகான தோற்றமும் ஒயிலாக ஆடும் நடனமும் தான் தன் முக்கியமான பண்பாகும். அவை கவர்ச்சியாக தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. மயில், தான் அழகாக ஆடுவதாக நினைக்கும் போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.
மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்து திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்.
கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணர முடிவதில்லை.
இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் அந்த பண்பட்ட மனதை வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.
6842) மயில் பாம்பை மிதிப்பது போல் வைத்திருப்பதன் தத்துவம் என்ன?
மயிலுக்கும் பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பை கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது.
அதைப் போல உலக பந்தங்கள் ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால் இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும்.
இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கி வைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.
6843) தெய்வத்திற்கெல்லாம் தெய்வம் யார்?
பிள்ளையார்.
6844) பிள்ளையாருக்கு விநாயகர் என்ற பெயர் எதற்கு?
தெய்வத்திற்கெல்லாம் முதல்வன் பிள்ளையார். எனவேதான் விநாயகர் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் பிள்ளையாரை போன்றுகின்றன.
6845) விநாயகர் என்ற நாமத்தின் பொருள் என்ன?
தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள்.
6846 )எல்லாம் விதிப் பயன் எனும் போது இறைபூஜைகளும் திருவிழாக்களும் எதற்காக?
இறைபூஜைகளும் திருவிழாக்களுமே விதிப் பயனால் தானே!
விதியின் அடிப்படையில்தான் நம் வாழ்க்கை என்றாலும் ஆன்மீக சாதனைகள் செய்யும் போது விதியின் வேதனை நம்மைத் தாக்குவதில்லை. மேலும் இப்பிறவியில் நாம் செய்யும் ஆன்மீக சாதனை மறுபிறவியில் நல்ல விதிப் பயனை கொடுக்கவல்லது.
விதியை மதியால் வெல்லலாம் என்பது கோட்பாடு. விதிப்பயன் தீயதாக இருந்தால் ஆத்மசாதனம் என்ற மதியால் விதியை வெல்லலாம். ஆத்ம சாதனை செய்ய வேண்டிய மதியைக் கொடுப்பதும் விதிதான்.
திங்கள், 17 மே, 2010
அறநெறி அறிவு நொடி
6802) பேரின்ப வடிவிளான இறைவனை அடைய அடிப்படையானது எது? அன்பு
6803) இல்லற தர்மம் எதை போதிக்கிறது?அன்பை மையமாகக் கொண்ட நெறிகளை
6804) இல்லற தர்மத்தின் கோட்பாடு எது?ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி அதற்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்வது.
6805) தம்பதியரில் ஆணுக்கு 60 வயது நிறைவ டை ந்து அறுபத்தொன்று தொடங்கும்போது கொண் டாடப்படும் விழா எது? மணி விழா
6806) எழுபத்தொன்று தொடங்கும் போது கொண்டாடப்படுவது என்ன விழா?பவள விழா
6807) எண்பத்தொன்று தொடங்கும் போது கொண்டாடும் விழா எது?முத்து விழா
6808) அன்பு செலுத்துவதற்கான எல்லை விரிவ டைவதற்கான தொடக்க விழா எனப்படு வது எது? மணி விழா
6809) இவ்வாறான இறை முயற்சியில் ஒருவருக்கு எத்தனை விதமான அருள் அனுபவங்கள் கிட்டுகின்றன? மூன்று
6810) அந்த மூன்று விதமான அருள் அனுபவங் களையும் தருக. பொன்னுடல், ஓங்கார உடல், அறிவுடல்
6811) பசு கரணங்கள் என்னவாகும்?பதி கரணங்களாக மாறும்
6812) பசு கரணங்கள் பதி கரணங்களாக மாறு வதால் உடல் என்னவாகும்?பொன்மயமாகும்.
6813) உடல் பொன்மயமாகி அதற்கடுத்த நிலை யில் உடல் என்னவாகும்?காற்று மயமாகும்
6814) உடல் காற்று மயமாகியபின் நடைபெறுவது என்ன?ஆன்ம நாதமே எல்லாமாய் மாறி ஓங்கார உடல் கிட்டும்.
6815) ஓங்கார உடல் கிட்டியபின் நடைபெறுவது என்ன?ஆன்மா ஞான மயமாய் விளங்கி அறிவுடல் கிட்டும்.
6816) பொன்னுடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்? மணி விழா
6817) பிரணவ தேகமாகிய ஓங்கார உடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்?பவள விழா
6818) முத்து விழாவாக கருதுவது எதனை?ஞான உடல் வாய்ப்பதை
6819) சஷ்டியப்த பூர்த்தி என்பது எதனை?ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாளை.
6820) 360 பாகைகளின் வழியாக ஒரு வட்டப் பாதையை நிறைவுசெய்ய சூரியனுக்கு எவ் வளவு காலம் எடுக்கும்? ஒரு ஆண்டு
6821) செவ்வாய்க்கு எவ்வளவு காலம் எடுக்கும்?ஒன்றரை ஆண்டு
6822) சந்திரனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு மாதம்
6823) புதனுக்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒரு வருடம்
6824) வியாழனுக்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?12 வருடங்கள்
6825) வெள்ளிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு வருடம்
6826) சனிக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?30 வருடங்கள்
6827) ராகுவிற்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்
6828) கேதுவிற்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்
6829) ஒருவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் தமிழ் ஆண்டு, மாதம் ஆகியவை மாறாமல் அமைந்திருப்பது எப்போது?ஒருவர் பிறந்து 60 வருடங்கள் நிறைவடைந்த நாளிற்கு அடுத்த நாளில்
6830) பூமி எத்தனை பாகைகளாக கணிப்பிடப் பட்டுள்ளன? 360 பாகைகளாக
6831) அந்த 360 பாகைகளும் எத்தனை ராசி வீடுகளாக வகுக்கப்பட்டுள்ளன? 12 ராசி வீடுகளாக
6832) சஷ்டியப்த பூர்த்தியன்று என்ன செய்வர்?64 கலசங்களில் தூய நீர் நிரப்பி மந்திரங்களை ஜயிப்பதன் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அதைக் கொண்டு அபிஷேகமும் செய்வர்.
6833) 64 கலசங்களும் எதை குறிக்கும்?60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரை குறிப்பதாக ஐதீகம்.
6334) பிரபது முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்?அக்கினி பகவான்
6835) ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சூரியன்
6836) ஈஸ்வர முதல்துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சந்திரன்
6837) இறைவனைத் தேடும் மனப் பக்குவம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கு வது எப்போது? மணிவிழாவின் போது
6838) சித்ரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? வாயு பகவான்
திங்கள், 10 மே, 2010
அறநெறி அறிவு நொடி
ஈஸ்வரலிங்கம், தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் 6782) அட்சய திருதியில் தங்கமா? கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது 6783) அட்சயம் என்றால் என்ன? வளருதல் 6784) கெளரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது? அட்சய திருதியன்று 6785) அன்னைக்கு பாதுகாப்பாக மறுநாள் வந்தது யார்? விநாயகர் 6786) ஸ்ரீ பரசுராமர் அவதரித்தது எப்போது? அட்சய திருதியன்று 6787) அட்சயதிருதியன்று தோன்றிய யுகம் எது? கிருத யுகம் 6788) ஸ்ரீ பரசுராமர் விஷ்ணுவின் எத்தனையாவது அவதாரம்? ஆறாவது அவதாரம் 6789) அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன? எப்போதும் குறையாதது 6790) ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர் யார்? குசேலர் 6791) குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க வந்தது எப்படி? ஒரு படி அவலை எடுத்து தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு 6792) அவரது அவலை சாப்பிட்டிபடி கண்ணன் என்ன கூறினார்? ‘அட்சயம்’ என்று 6793) கண்ணன் அட்சயம் என்று கூறியதும் என நடந்தது? குசேலரின் குடிசை மாளிகையானது. குசேலர் குபேர சம்பத் பெற்றார். 6794) குசேலருக்கு கண்ணன் அருள் புரிந்தது எப்போது? அட்சயத் திருதியை அன்று 6795) அட்சயதிருதியைப் பற்றி தருமருக்கு கதை கூறியவர் யார்? கண்ணபிரான் 6796) கண்ணன் தருமருக்கு கதை கூறியதாக எந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது? பவிஷ்யோத்ர புராணத்தில் 6797) அட்சயதிருதியை அன்று யாரை பூஜித்தால் சகல செளபாக்கியங்களும் கிட்டும்? சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சமி. 6798) அட்சய திருதியன்று பித்ருக்களுக்கும் மறைந்த முன்னோருக்கும் சிரார்த்தம், பூஜை செய்தால் கிடைக்கும் நன்மை என்ன? பாவ விமோசனம் பெறலாம். 6799) அட்சய திருமணமான பெண்கள் என்ன செய்யலாம்? சுமங்கலி பூஜைசெய்து மற்றவர்களுக்கு ஆடை வழங்கலாம். 6880) அட்சய திருதியில் ஆடை தானம் அளித்தால் கிட்டும் நன்மை என்ன? மறுபிறவியில் ராஜவாழ்வு கிட்டும். 6801) அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியேயாக வேண்டுமா? அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பண்டங்கள் தானம் செய்தால் திருமணத் தடை அகலும் உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகால மரணம் போன்றவை நடைபெறாது. கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி? வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடுகளிலும் மனதை செலுத்த முன்வர வேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது நம் வாழ்க்கை. |
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் வைகாசி 6762) வைகாசி மாதத்தை வைணவர்கள் என்ன வென்று போற்றுவார்கள்? மாதவமாதம்
6764) விகாஸம் என்றால் என்ன?மலர்ச்சி 6765) வைகாசி விசாகத்தில் உதித்தவர் யார்?முருகப் பெருமான் 6766) வைகாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம் எது?ரிஷப விரதம் 6767) ரிஷப விரத நாளில் எந்த வடிவில் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்?ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரான சிவபெருமானை 6768) ரிஷப விரதத்தை யார் கடைப் பிடித்தால் நல்ல பலன் கிட்டும்?வாகனங்கள் வைத்திருப்பவர்களும் புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்களும் 6769) ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து ஐராவதத்தை பெற்றவர் யார்?இந்திரன் 6770) இந்த விரதத்தை கடைப்பிடித்து புஷ்பக விமானத்தை பெற்றவர் யார்?குபேரன் 6771) இந்த விரதத்தை எப்பொழுது கடைப்பிடிக்க வேண்டும்?வைகாசி மாத சுக்ல அஷ்டமி திதியில் 6772) புத்த பகவான் அவதரித்தது எப்பொழுது?வைகாசி பெளர்ணமியன்று
6774) அவர் இப்பூவுலகைத் துறந்து மோட்சம் பெற்றது எப்பொழுது?வைகாசிப் பெளர்ணமியில் 6775 தங்கத் தட்டில் அவதரித்தவர் யார்?வியாசர் 6776) வியாசர் தங்கத் தட்டில் அவதரித்த மாதம் எது?வைகாசி 6777) வைகாசி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள் யார்?திருஞானசம்பந்தர், சோமாசி மாறனார், நமிநந்தியடிகள், கழற்சிங்கர் 6778) வைகாசி மாதத்தில் அவதரித்த வைணவப் பெரியவர்கள் யார்?நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் 6779) காஞ்சிப் பெரியவர் பிறந்தது எந்த மாதத்தில்?வைகாசியில் 6780) குருவின் நட்சத்திரம் எது?விசாகம் 6781) விசாகம் எந்த வம்சத்துக்குரிய நட்சத்திரம்?இஷவாகு 6782) இராம - இராவண யுத்தம் எப்பொழுது நடந்ததாக ஸ்ரீமத் இராமாயணம் கூறுகிறது?விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில். |
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...