புதன், 28 நவம்பர், 2012

சமஸ்கிருதம் 9573. சமஸ்கிருத இலக்கியம் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது? 4000 ஆண்டுகளாக 9574. சமஸ்கிருத இலக்கிய பரப்பினை எத்தனை பெரும் பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்? மூன்று 9575. அம் மூன்று பெரும் பகுதிகளையும் தருக. வேத இக்கியம், இதிகாச இலக்கியம், பிற்கால இலக்கியம். 9576. இருக்கு, யசுர், சாமம், அதர்வம் இவை நான்கும் என்ன? வேதங்கள் 9577. வேதங்களின் சார்பு நூல்கள் எவை? பிராணங்கள், ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் 9578. வேத இலக்கியம் என அழைக்கப்படுபவை எவை? இருக்கு, யசுர், சாம, அதர்வ வேதங்களும் அவற்றின் சார்பு நூல்களான பிராணங்கள் ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் ஆகியனவும் ஆகும். 9579. இவற்றுள் உலக இலக்கியங்களில் அழகிய கவிதையோடும் சீரிய கருத்துடனும் இன்று எமக்கு கிடைத்துள்ளவற்றுள் மிகப் பழையது எது? இருக்கு வேதம் 9580. இந்நூல் எவ்வாறு திகழ்கிறது, பல ரிஷிகள் பல காலங்களில் இயற்றிய 1028 பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. 9581. இது எங்கு பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாக காணப்படுகிறது? வேள்விகளில் 9582. இதனையும் ஏனைய மூன்று வேதங்களையும் என்னவென்று அழைப்பார்கள்? சங்கிதைகள் 9583. இருக்கு வேதப் பாடல்களை வேள்வி யிலே பயன்படுத்தும் யாக விதிகளை கூறுவது எது? யசுர் வேதம் 9584. யசும் வேதம் எந்த நடையில் அமைந்துள்ளது? வசன நடையில் 9585. யசுர் வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? இரண்டு 9586. அந்த இரண்டு பிரிவுகளையும் தருக. கிருஷ்ண யசுர் வேதம், சுக்ல யசுர் வேதம் 9587. ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒரே வட்டத்தைச் சேர்ந்த மூன்று வேதங்கள் எவை? இருக்கு, யசுர், சாமம் 9588. இந்த மூன்று வேதத்திலும் கூறப்பட்டுள்ளவை எவை? வேள்வியிலே பயன்படுத்தப்படும் பாடல்கள், அதற்கான இசை, கிரியை விதிகள். 9589. பாமர மக்களின் சமய நம்பிக்கை களும் சமூகப் பழக்க வழக்கங்களும் எந்த வேதத்தில் இடம்பெற்றுள் ளன. அதர்வ வேதங் களில் 9590. அதர்வ வேதத்தில் எவ்வாறான பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன? மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அல்லல்களை நீக்கவல்ல பாடல்கள் 9591. இந்த நான்கு வேதத் திற்கும் தனித்தனியே என் னென்ன காணப்படு கின்றன? பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் 9592. வேள்விகளுக்கான வேத சூக்தங்கள் வேள்வி விதிகளின் விபரங்கள் விளக்கங்கள் முதலியன எதில் உள்ளன? பிராமணங்களில் 9593. காட்டில் வாழும் துறவிகளுக்காக எழுதப்பட்டவை எவை? ஆரணியங்கள் 9594. ஆரணியங்களில் இடம் பெற்றிருப்பது என்ன? வேள்விகளுக்கான மறை பொருள் விளக்கம். 9595. ஆரணியங்களைத் தொடர்ந்து தோன்றிய தத்துவ நூல்கள் எவை? உபநிடதங்கள் 9596. இவை வைதீக சிந்தனையின் சாரமாகவும் முடிவாகவும் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது? வேதாந்தம் 9597. இவை சூத்திர வடிவில் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது? சூத்திரங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

சமஸ்கிருதம்) 9556) இந்துக்களின் புனித மொழி எது? சமஸ்கிருதம் 9557) இந்த மொழி எத்தனை ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது? ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகள் 9558) சமஸ்காரம் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? பண்படுத்துதல் 9559) இந்த மொழி எந்த இலக்கண ஆசிரியர்களால் பண்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது? பாணினி 9560) சமஸ்கிருத மொழி எத்தனை நிலைகளைக் கொண்டது? அவை எவை? மூன்று வைதிக மொழி (வேதங்களின் மொழி) இதிகாச மொழி, பிற்கால மொழி. 9561) தமிழ் இலக்கிய மரபிலே இந்த மொழிக்குரிய சொல்லாக வழக்கில் இருப்பது எது? வடமொழி 9562) சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும் பேச்சு மொழியாகவும் இருந்தது எந்த காலத்தில்? வேத காலத்திலும் அதற்கு பின்னும் 9563) இந்த மொழியுடன் தொடர்புள்ள மொழிகளை எவ்வாறு அழைப்பர்? பிராகிருத மொழிகள் 9564) பிராகிருத மொழிகளால் இலங்கையில் பாவனையிலுள்ள ஒரு மொழி எது? பாளி 9565) பாளி மொழி எந்த மதத்தினரின் இலக்கிய மொழியாக விளங்கி வந்துள்ளது? தேரவாத பெளத்தர்களின் 9566) பாளியுடன் பிராகிருதங்களாக மாறிய மொழிகள் எவை? அர்த்தமாகதி, செளரசேனி, மகாராட்டிரம், கொடும் சமஸ்கிருதமான பைசாசி 9567) அர்த்தமாகதியை கையாண்டவர்கள் யார்? சீனர்கள் 9568) செளரசேனியை கையாண்டவர்கள் யார்? சமஸ்கிருத நாடங்களிலுள்ள கீழ் நிலை நாடக மாந்தர் 9569) மகாராட்டிரம் எதில் கையாளப்பட்டது? காப்பியங்களில் 9570) மக்களிடையே வழங்கும் கதை இலக்கியத்திற்கு பயன்படுத்திய மொழி எது? பைசாகமொழி 9571) இவற்றிலிருந்து உருவாகிய மொழிகள் எவை? ஹிந்தி, வங்காளி, பஞ்சாபி, குஜராத்தி 9572) இவை எத்தனையாம் ஆண்டளவில் உருவாகின? கி. பி. 1000 ஆம் ஆண்டளவில்

வியாழன், 15 நவம்பர், 2012

9540) மாலையில் விளக் கேற்றிய பின் தலை வாரலாமா? கூடாது 9541) மாலை நேரம் எதற்குரிய நேரம்? வழிபாட்டுக்குரிய நேரம் 9542) மாலையில் விளக் கேற்றும் வேளை யில் யார் இல்ல த்தில் உறைந்திருப் பதாக கூறப்படுகி றது? திருமகள் 9543) அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதா? நல்லதல்ல 9544) மாலையில் பெண்கள் எப்போது தலைவாரி கொள்ள வேண்டும்? விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி பூ முடித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது நல்லது. 9546) திரு என்றால் என்ன? லட்சுமி 9547) மதி என்றால் என்ன? அறிவு 9548) திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாக செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்திவிடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைந்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் ஏற்பட்டது. 9549) பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு kமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வர வழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு லட்சுமியைப் பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம் பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே kமந்தம். 9550) பெண்ணுக்கு வளைகாப்பு (kமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா? பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கின்றாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் நான் kமந்தம் நடத்துகிறார்கள். 9551) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்த்தால் என்ன நடக்கும்? நமது மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும். 9552) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதால் ஏற்படுவது என்ன தோஷம்? திருஷ்டி தோஷம் 9553) வேறு எவ்வாறு திருஷ்டி தோஷம் ஏற்படலாம்? இவ்வளவு அழகாக வீடு கட்டிவிட்டார்களே என்று யாராவது பொறாமையுடன் பார்த்தால். 9554) வீடுகட்டினால் திருஷ்டி தோஷத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்? பூசணிக்காய் தொங்கவிடுவர். 9555) பூசணிக்காய் தொங்கவிடுவதால் திருஷ்டி தோஷம் நீங்குமா? இல்லை புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

புதன், 7 நவம்பர், 2012

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை தண்டாயுதபாணி கோயில் அகந்தையை அழித்திடும் கிருஷ்ணார்ப்பணம் கே. ஈஸ்வரலிங்கம் திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி வசூல் கே. ஈஸ்வரலிங்கம் தெய்வ உபசாரங்கள் 9527) அர்ச்சனை என்ற சொல் எந்த சொல்லில் இருந்து வந்தது? அர்ச்சா 9528) அர்ச்சா என்பதன் பொருள் என்ன? சிலை 9529) அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்த சொற்கள் எவை? அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் 9530) அர்ச்சித்தர் என்ற சொல்லின் பொருள் என்ன? சிலை 9531) ஆண்டவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்? ஆறு 9532) ஆறு வகை உபசாரங்களையும் தருக அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் 9533) இந்த ஆறு வகை உற்சவங்களில் முக்கியத்துவம் பெறுவது எது? அர்ச்சனை 9534) அபிஷேகம் எவற்றால் செய்யப்படும்? தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் 9535) அலங்காரம் என்பது என்ன? பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும் மலர் மாலைகளாலும் தங்க நகைகளாலும் வைர வைடூரியங்களாலும் தெய்வத்தை அழகு படுத்தல் 9536) அர்ச்சனை எவற்றால் செய்யப்படும்? பூக்களாலும் பாக்களாலும் 9537) நைவேத்தியம் என்பது என்ன? பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது 9538) ஆராதனை என்பது என்ன? தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல் 9539) உற்சவம் என்பது என்ன? பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல். 9540) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்? ஆண்டுதோறும் பண்டிகை வரும்போது வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார் காஞ்சிப் பெரியார். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டப்பந்தன மருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கும். எனவே புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால், தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

ல்லாளன் காலத்திற்கு முற்பட்ட கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் கொழும்பு மாநகரிலே கொட்டாஞ்சேனை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவிலே வீதியின் மேற்கிலே குளுகுளுவென குளிர்மையான தென்றல் தவழும் அரச மரத்தடியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம். இந்த ஆலயம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்ற தோற்ற காலத்தையோ இந்த ஆலயத்தின் முழுமையான பரிபாலன தகவல்களையோ அறியக்கூடிய வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன. ஆனால் ஆதியில் அரச மரத்தடியில் வழிபாடு நடந்ததும் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையும் நாகதம்பிரானின் திருவுருவச் சிலையும் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததும் 1890 என்னும் எண்களை தாங்கி இருந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விளக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாலயம் 1890 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்பது இதிலிருந்து புலனாகிறது. இவ்வாலயம் எல்லாள மன்னன் காலத்திற்கு முந்தியதென்றும் போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களது இராணுவ வீரர்கள் இந்த ஆலயத்தை பதுங்கி இருக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள் என்றும் ஒல்லாந்தர் காலத்தில் தங்களுக்கு தேவையானவற்றை சுருட்டிக்கொண்டு ஆலயத்தை அழித்து விட்டார்கள் என்றும் கருத்துக்கள் உண்டு. முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகவிருந்த வேளையில் கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய சிவாச்சாரியார்களின் இன்றைய வதிவிடமாக அமைந்துள்ள அன்றைய அரசடி இடுகாட்டுப் பகுதியில் 1913 இல் ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட அந்த முகாமில் இருந்திருக்கிறார்கள். அந்த முகாமில் வட இந்தியாவைச் சேர்ந்த சண்முகர்ஜீ பட்டேல் என்பவர் தலைமையை ஏற்று பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் விநாயகர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர் எனவே அரச மரத்தடியில் அமர்ந்து அருள்பாலித்த வரதராஜ விநாயகப் பெருமானை வழிபடும் முறைமை அவருக்கும் உரியதாயிற்று. இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகில் வசித்து வந்த வில்லவராஜா என்பவருடனான தொடர்பும் வலுவானது. இதனால் வில்லவராஜாவின் மகளை சண்முகர்ஜி பட்டேல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் சண்முகர்ஜி பட்டேலுக்கு விநாயகர் மீது இருந்த பக்தி மென்மேலும் வளர வழிகோலியது. இதன் விளைவாக அரச மரத்தின் தெற்மேற்கில் விநாயகரின் திருத்தலம் உருவாக வழியேற்பட்டது. 1917 ஆவணியில் விநாயகரின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடும் முறைமையை சண்முகர்ஜி பட்டேல் ஏற்படுத்தி கொடுத்தார். இந்த காலகட்டத்தில் பிக்கரிங்ஸ் வீதியில் பஞ்சலோக வேலை செய்யும் ஆசாரியர் வாழ்ந்து வந்தனர். இவர்களும் வரதராஜா விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டனர். 1921 இல் சண்முகர்ஜி பட்டேலுக்கு நாட்டை விட்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் இவ்வாறு போகும் போது தமக்கு உதவியாளராக இருந்த பஞ்சலோக ஆசாரியர் சமூகத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவரிடம் ஆலயத்தை கவனிக்கும்படி ஒப்படைத்து விட்டுச் சென்றார். இரண்டாவது உலக மகா யுத்த நெருக்கடிகளுடன் பிக்கரிங்ஸ் வீதியில் இருந்த ஆசாரியர் 1943 இடம்பெயர்ந்தனர். அதனால் விநாயகராலய பரிபாலனம் சில ஆண்டுகள் கவனிப்பார் அற்றிருந்து. 1944.08.27 இல் எழுந்தருளி விநாயகர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கவனிப்பாரற்று ஒழுங்கற்ற முறையில் இருந்த ஆலயத்தை திருமதி சொர்ணம்மா சுப்பிரமணியம் அர்ச்சகர் ஒருவரை நியமித்து பூஜை முறைகளை ஒழுங்காக்கினார். 1951 இல் பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1952 இல் சிவஸ்ரீ நடராசா சோமஸ்கந்தக் குருக்கள் பூசை நடைமுறைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 1961 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1962.07.10இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1988 நவம்பர் 27இல் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2012.04.12 ஆம் திகதி இவ்வாலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அமிர்தகல பஸ்லே கணகல அவிசாவளை கிளனெக்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் கொழும்பிலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது அவிசாவளை அமிர்தகல பஸ்லே கணகல என்னும் ஊர். இந்த ஊரில் கிளனெக்ஸ் என்ற எஸ்டேட் உள்ளது. மலையும் மலைசார்ந்த இந்த குறிஞ்சி நிலப்பரப்பிலே இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் இறப்பர் தோட்டத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம். இந்தியாவிலிருந்து பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள், மலையகத்திலே காடுகளை வெட்டி கழனிகளாக்கியது மட்டுமன்றி மரத்தடிகளில் தங்களது இஷ்டதெய்வங்களை வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இவை ஆகம விதிகளுக்கேற்ற ஆலயங்களாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அமை யப் பெற்ற ஆலயங்களில் ஒன்றுதான் இந்த முத்துமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் எப்போது தோன்றியது என்று சரியான கணிப்புக் காலம் தெரியாது. ஆனால் இற்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த அன்னமலை என்பவர் இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக இருந்து இதனை பராமரி த்து வந்துள்ளார். அவருக்குப் பின் அவரது புதல் வர் நடேசன் முதலியார் பராமரித்து வந்த ஆலயத்தை அவருக்குப் பின் தற்போது அவரது புதல்வர் முருகேசன் பராமரித்து வரு கிறார். ஆரம்பத்தில் மடாலயமாக இருந்ததை இவர்கள் ஆலயமாக கட்டியெழுப்பியுள்ளனர். 1970 - 72 ஆம் ஆண்டுகளில் இவ்வாலயம் புனரமைப்பு செய்யப் பட்டது. 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது இந்த ஆலயத் துக்கும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தாபனம் செய்யப் பட்டு இன்று காலை 9.32 மணிக்கு இவ்வாலய த்தில் கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது. சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து ள்ள இவ்வாலயத்தில் 30 அடி உயரமான இராஜகோபுரம் ஒன்று பொம்மைகள் சூழ அமை க்கப்பட்டுள்ளது. இங்கு எல்லாம்வல்ல ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மூல மூர்த்தியாக வீற்றி ருந்து அருள்பாலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர், வைரவப் பெரு மான் ஆகிய தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக இருந்து அருள் பாலிக்கின்றன. இலக்கம் 101, கடை வீதி, பத்தனையைச் சேர்ந்த ஏ. பெரியசாமி ஸ்தபதி, தமிழகத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஜெகநாதன் சிற்பி ஆகியோர் ஆலய சிற்ப திருப்பணி வேலைகளை செய்ய டீ மோகன்ராஜ் வர்ண வேலைப்பாடுகளையும் அவிசாவளை கிரனேட் ஸ்டேட்டைச் சேர்ந்த பீ. ரஞ்சன் பூச்சு வேலைகளை செய்தார். இவ்வாலய திருப்பணி வேலைகளை செய்யவும் கும்பாபிஷேக கிரியைகளை செய்ய வும் உதவிய அனைவருக்கும் நடேசன் முருகேசன் திருப்பணிச் சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார். கே. ஈஸ்வரலிங்கம் திதி 9511) வளர்ப்பிறை தேய்பிறை காலங்களில் சில பகுதிகளுக்கு ஒரு கண் மட்டுமே உண்டு என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பயன் தருமா? பூரண பலன் தராது 9512) பூரண பலன் தராத இத்திதிகளில் சுபகாரியங்கள் செய்யலாமா? தவிர்ப்பது நல்லது 9513) வளர்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை? பஞ்சமி, சஷ்டி, சப்தமி, சதுர்த்தி, பெளர்ணமி 9514) தேய்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை? பிரதமை, அஷ்டமி, நவமி, தசமி 9515) பொதுவாக வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே பலரும் தவிர்க்கும் திதிகள் எவை? அஷ்டமி, நவமி 516) ஆகாத திகதிகள் எவை? அமாவாசை, பெளர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும் 9517) இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் என்ன நடக்கும்? பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும். 9518) திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம் பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தவிர்க்கக் கூடிய செயல்கள் எவை? கடன் கொடுப்பது, வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது, கடுமையான நோய் வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது. கலைமகள் 9519) கலைமகள் வெண்ணிற ஆடையுடுத்தி வெண்தாமரையில் வீற்றிருப்பது ஏன்? தூய்மையை உணர்த்தும் பொருட்டு 9520) கலைமகளின் வாகனம் எது? வெண்ணிற அன்னம் 9521) கலைமகளின் கையிலுள்ள வீணையை யார் கொடுத்தது? சிவபெருமான் உருவாக்கி கொடுத்தது. * 9522) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை? கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுத பாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம். தனித்த காளியும் கால கண்டன் படமும் ஆகாது. 9523) சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கலாமா? வைக்கக் கூடாது. 9524) நவகிரகங்களின் படம் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்கலாமா? கூடாது 9525) சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படம் இல்லங்களில் வைக்கலாமா? ஆகாது 9526) ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபாவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் பூஜைக்கு உபயோகிக்கலாமா? ஆகாது

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...