புதன், 7 மே, 2014
கர்ணன்
(10768) குந்தி இளமையாக இருந்த போது அவரது தந்தையின் இடத்திற்கு வந்தவர் யார்?
துர்வாச முனிவர்.
(10769) குந்திதேவி துர்வாச முனிவருக்கு எவ்வளவு காலம் பணிவிடை செய்தார்?
ஒரு ஆண்டு முழுவதும்
(10770) அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் என்ன செய்தார்?
அவரது எதிர்காலத்து துயரம் பற்றி கணித்து திருமணத்துக்குப் பின்னர் பாண்டு மூலம் அல்லாத குழந்தையால் ஏற்படும் சிக்கல் பற்றிக் கூறினார்.
(10771) குந்திதேவிக்கு இவ்வாறு கூறிய துர்வாச முனிவர் என்ன செய்தார்?
அவரது துன்பத்தைத் தீர்க்க வரம் ஒன்றை அளித்தார்
(10772) அவர் அளித்த வரம் என்ன?
குந்திதேவி தனது விருப்பப்படி எந்தக் கடவுளையும் அழைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்
(10773) குந்தி மணமாகாமல் இருக்கும் போது என்ன செய்தார்?
குந்தியின் முன்னாள் தோன்றி
அந்த வரத்தின் சக்தியை சோதிக்க முடிவு செய்தார்
(10774) அவர் மந்திரத்தை உச்சரித்து யாரை அழைத்தார்?
சூரிய பகவானை
(10775) மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு சூரியன் என்ன செய்தார்?
அவருக்கு மகனை அளித்தார்.
(10776) இந்த குழந்தை எப்படிப் பிறந்தது?
கவசா, குண்டலா அணிந்தே பிறந்தது
(10777) கவசா என்பது என்ன?
போர்க்கவசம்
(10778) குண்டலா என்பது என்ன?
காது வளையங்கள்
(10779) குழந்தை பிறந்ததும் குந்தி தேவி என்ன செய்தார்?
மணமாகாத தாயாக உலகத்தை சந்திக்க விருப்பமின்றி இருந்தார்.
(10780) இதனால் குந்திதேவி என்ன செய்தாள்?
அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து புனித நதியான கங்கையில் மிதக்க விட்டால்.
(10781) குந்திதேவி இவ்வாறு செய்தது ஏன்?
அக்குழந்தை வேறொரு குடும்பத்தால் எடு த்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில்
(10782) குந்திதேவி யாரது துணையுடன் குழந்தையை நதியில் மிதக்க விட்டார்?
அவரது தோழியான தத்ரியின் துணையுடன்
(10783) நதியில் மிதந்து வந்த குழந்தை கர்ணனை கண்டெடுத்தது யார்? அதிரதன்
(10784) அதிரதன் யார்? தேரோட்டி
(10785) யாருடைய தேரோட்டி? திரிதராடிராவின்
(10786) திரிதராஷ்டிரா யார்? ஒரு அரசர்
(10787) அதிரதனின் மனைவியின் பெயர் என்ன?
ராதா
(10788) அதிரதனும் ராதாவும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து வந்தார்கள்?
தங்களின் சொந்த மகனாகவே வளர்ந்தனர்
(10789) இவர்கள் கர்ணனுக்கு இட்ட பெயர் என்ன?
வாசுசேனா
(10790) கர்ணனை இவர்கள் வேறு எவ்வாறு அழைத்தனர்?
ராதேயன்
(10791) ராதேயன் என்பதன் பொருள் என்ன?
ராதாவின் மகன்
(10792) கர்ணன் என்பதன் பொருள் என்ன? காது
(10793) கர்ணன் எந்த தேசத்தின் அரசனானான்?
அங்க தேசத்தின்
(10794) கர்ணனின் உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது எப்போது?
அங்க தேசத்தின் அரசனான பின்பு
(10795) அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்ததும் கர்ணனுக்கு அது மகிழ்வைத் தந்ததா?
இல்லை. வெறுப்பை உண்டாக்கியது.
(10796) அவரது மனைவியின் பெயர் என்ன?
விருஷாலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக