திங்கள், 13 அக்டோபர், 2014

13/10/2014

கே. ஈஸ்வரலிங்கம் 11114) நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா? அந்தக் காலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித் தான் இருந்தது. அதிலும் ஆண் வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ. பொட்டு, வளையல். வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக்கட்டுப்பாடு இருந்தது. திருமணமான தம்பதிகளோ, அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால். இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில் இப்படி சந்தோஷமாக வெளியேற கிளம்பும் பெண். தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் அந்த விதவைப் பெண்மனிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமே. அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லை அவசியமும் இல்லை. 11115) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் எத்தனை? இரண்டு 11116) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் இரண்டையும் தருக பாஞ்சராத்ரம், வைகானசம் 11117) மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் யார்? ராஜாஜி 11118) இந்தியில் துளசிதாசர் இழுதிய ராமாயணம் எது? ராமசரித மானஸ் 11119) ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது எது? பெருமாள் திருமொழி 11120) திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் எவை? திருவோணம், ரோகிணி 11121) எத்திசை நோக்கி நின்று திருநீறு பூசவேண்டும்? கிழக்கு, வடக்கு 11122) ஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்று பாடிய தலம் எது? மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 11123) விபூதி என்பதன் பொருள் என்ன? மேலான செல்வம் 11124) தாசமார்க்கம் என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் யார்? திருநாவுக்கரசர் 11125) அக்னியைப் பற்றிக் கூறும் நூல் எது? ஆக்னேய புராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812