செவ்வாய், 2 ஜூன், 2015
(11358) விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக்கூடாது?
“விரதம்” என்ற சொல்லுக்கு ‘கஷ்டப்பட்டு இருத்தல்’ என்று பொருள். நாள் முழுக்க தெய்வ சிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது “விரதம்”. “பசி” என்ற நினைப்பு வரும்போதெல்லாம் ‘தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்’ என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதனால்தான் விரதத்திற்கு “உபவாசம்” (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால்,. பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.
(11359) தாரக மந்திரம் என்றால் என்ன?
‘தாரக’ என்ற சொல்லுக்கு நுண்ணிய, நுட்பமான, உயர்ந்த என்று பொருளுண்டு. இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடியாக பலன் கிடைக்கும்.
இத்தகைய உயர்ந்த மந்திரத்தையே ‘தாரகமந்திரம்’ என்பர். இவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் படித்து ஜெபிக்கக் கூடாது. உச்சரிப்பு பிழை ஏற்பட்டால் எதிர்மறை பலன்கள் ஏற்படும். தெரிந்தவர்களிடம் முறையாக கற்று உச்சரிப்பது நல்லது. ராமநாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு.
(11360) அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தலாமா?
அமாவாசை பிதுர் வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுப நிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்த பிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுப நிகழ்ச்சி நடத்துவதே நல்லது.
(11361) எவர் சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா?
கூடாது. மண் அகல், வெண்கலம், வெள்ளி, தங்கம் இவற் றினால் ஆன விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு உலோகம் பூஜை சம்பந்தமான விஷயங்களில் கூடாது. எவர் சில்வர் இரும்பிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவ்விளக்குகள் விலக்கத்தக்கன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக