வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஹெலன் குமாரி


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத் தெருவிலுள்ள புனித அன்னம்மாள் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலையில் படிக்கும் போதே நடனத்தில் தேர்ச்சி பெற்றார். பாடசாலையில் நடைபெறும் விழாக்களில் நடனமாடிக் கலந்து கொண்டார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டர் இவரை கலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மனோரஞ்சித கான சபாவில் கலை நிகழ்ச்சிகளை அளித்து வந்தார். பின்னர் பிரபல சிங்களத் திரைப்பட நடன இயக்குநர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார். சிங்கள திரைப்பட இயக்குநர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் 1970 ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் எம். வி. பாலனுடன் இணைந்து நடனமாடினார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடியுள்ளதோடு நடன இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சின் உதவியுடன் எம்.வி.பாலன் தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான லெனின் மொராயசின் "நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனாலும், இத்திரைப்படம் திரைக்கு வரும் முன்னரே இதன் திரைப்படச்சுருள் 83 ஜுலை கலவரத்தில் தீக்கிரையானது. அதே போன்று காமினி பொன்சேகாவுடன் இவர் இணைந்து நடித்த "இளைய நிலா" திரைப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்திருந்தார். அதுவும் ஜூலைக் கலவரத்தில் எரிந்து போனது.
பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் தயாரிப்பில் உருவான "டயல் எம்-போர்-மேடர்" என்ற நாடகமே இவரது முதல் தமிழ் மேடை நாடகமாகும். அவர் தயாரித்த விட்னஸ்-போர்-த பிரசிகியூசன் என்ற நாடகத்திலும் நடித்துப் பார்ராட்டைப் பெற்றார்.
கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சு தயாரித்த பல நாடகங்களில் ஹெலன்குமாரி நடித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உதயகுமார் கதை வசனத்தில் தயாரான ‘தாலிக்கொடி’, நீர்கொழும்பு முத்துலிங்கம் மாஸ்டரின் உண்மை பேசும், உதயகுமாரின் ராம் ரஹீம் ரீட்டா, போன்ற நாடகங்கள் கொழும்பின் டவர், லும்பினி, கதிரேசன் மண்டபங்களில் பல முறை மேடையேறியன.

ஆர்.ராஜசேகரனுடன் இணைந்து ‘வெள்ளி நிலா காலாலயம்’ என்ற அமைப்பை ஏற்று நடத்தினார். "முக்கோணத்தில் மூவர்" கலாலயத்தின் முதல் நாடகமாக மேடையேறியது. அதைத் தொடர்ந்து "ஒன்று எங்கள் ஜாதியே", "கெரி ஒன் டிரக்டர்" போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. "கெரி ஒன் டிரக்டர்" என்ற நகைச்சுவை நாடகம் ரூபவாகினியில் பல முறை ஒளிபரப்பப்பட்டது.

வெள்ளி நிலா கலாலயத்தின் நிறுவனர் ஆர். ராஜசேகரையே இவர் 1985 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு விக்ரம், கார்த்திகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...