திங்கள், 25 மே, 2020
கலைத்துறையின் கலங்கரை விளக்கு ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஏ. எஸ். எம். நவாஸ்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ. எஸ். எம். நவாஸ். இவர் 1965.12.03ஆம் திகதி பிறந்தவர். இவர் நவகவி, திரைநிலவன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் என்பவற்றை எழுதி வந்தவர். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தன. இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றவர். நூல் வெளியீடுகள் மட்டுமல்ல பல்வேறு நிகழ்வுகளில் இறுதி வரை இருந்து நிகழ்வை கண்டு கழித்து அது சார்ந்து விமர்சனங்களை சிறப்பாக எழுதக்கூடிய ஆளுமை கொண்டவர் நவாஸ்.
பல கலைஞர்களையும் தன்னுடைய எழுதுகோலால் புடம்போட்டு காட்டியவர். பல கலைஞர்கள் கலைத்துறையில் மென்மேலும் வளர இவரது விமர்சனங்கள் உறுதுணையாகின. உலகமே துன்பத்தில் துவண்டு கொண்டு இருந்த தருணத்தில் இவர் 2020.03.22 ஆம் திகதி காலமானார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக