திங்கள், 20 ஜூலை, 2020

துாரிகை மீது தீராத மையல் கொண்ட ஓவியன்



எளிதில் வாய்க்காத கலைகளில் ஓவியமும் ஒன்று. வண்ணத்தில் தோய்த்த துாரிகை ஒன்று அங்கும் இங்கும் துள்ளித் திரிந்து தரித்து நின்றால் கண் கொள்ளக் காட்சி ஒன்றை கண்டு கண்கள் வியக்கும். இன, மத, மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலை. கண் கண்ட மாத்திரத்தில் எந்த பருவத்தினரையும் நொடிப் பொழுதில் தீண்டி விடும் ஒரு கலை. இந்த கலையில் சிறந்து புகழ் பூத்த ஓவியராகவும் ஊடவியலாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் வீ. கே. என்று அழைக்கப்படுகின்ற விசுசலிங்கம் கனகலிங்கம். இவர் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்ேகாட்டையில் பிறந்தார். இவர் விசுவலிங்கம், பொன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
கலை உணர்வு கொண்ட கனகலிங்கம், திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர் ஓவியக் கலைக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இவர் தனது 22ஆவது வயதில், 1942 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியாற்றத் தொடங்கியவர், ஆறு மாதங்களில் பிரதம ஒப்புநோக்காளராக பதவி உயர்வு பெற்றார்.
அன்று வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர் கே. வீ. எஸ். வாஸ், இவரது கையெழுத்தும் ஏனைய ஆசிரியர்களின் கையெழுத்துகளும் ஆரம்பத்தில் வாசிப்பதில் இவருக்கு சிரமமாக இருந்தது.
இவர் ஒரு நாள் இந்த எழுத்துக்களை வாசித்து வாசித்து களைத்துப் போய் இருந்தார், அழுத்துப் பொனதன் விளைவாக மேசை மீது தலை வைத்து சாய நினைத்தார். அன்று அந்த மேசையின் மீது இருந்த புத்தம் புதிய "ஓவர் டைம்" என்று எழுதப்பட்டிருந்த புத்தகம் அவரது கண்களுக்குப் பட்டது. அந்த புத்தகத்தை எடுத்து அழகிய சூரிய உதய காட்சியொன்றை வரைந்தார். இந்த விடயமும் இவர் வரைந்த ஓவியமும் அன்று முகாமைத்துவ பணிப்பாளராக இருந்த ஈஸ்வர ஐயரிடமும் வீரகேசரி வாராந்த பத்திரிகையின் ஆசிரியர் லோகநாதனிடம் செல்ல இவருக்கு ஓவியராகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இவர் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் ஓவியத் துறை தொடர்பாக கொழும்பு கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கான பாடநெறியை பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடநெறி வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவர் இந்த பயிற்சிநெறியை தொடர சனிக்கிழமை முழுநாளும் கடமையாற்றினார். இங்கு உயர்தர ஓவியப் படிப்பை முடித்தவர், 19 ஆண்டுகள் வீரகேசரியில் பிரதம ஓவியராகப் பணியாற்றினார்.
வீரகேசரி செய்தி ஆசிரியர் கே. வி. எஸ். வாஸின் மகன் மோகன் "கதம்பம்" என்ற மாத இதழொன்றை ஆரம்பித்தார். அதனை வீ.கே பொறுப்பேற்று நடத்தினார்.
இவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவியின் சகோதரர் கொழும்பு முகாத்துவாரத் தெருவில் கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார். அங்குதான் வீ.கே. தனது மனைவியான திருமதி இரத்தினேஸ்வரியுடன் குடியேறினார்.
1959 ஆம் ஆண்டில் வீரகேசரியில் தொழிற்சங்கம் ஒன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியது. இதனால் வீ.கே வீரகேசரி வேலையை இழந்தார். பின் சிவநாயகம் ஐயாவின் வீட்டுக்கு அருகில் கொட்டாஞ்சேனைக்கு குடி வந்தார். அதன்பின் "'சுதந்திரன்" பத்திரிகைக்கு நான் ஆசிரியராக வரப்போகிறேன் அதில் கடமையாற்றத் தயாராகுமாறு' பத்திரிகை உலகின் ஜாம்பவானான எஸ். டி. சிவநாயகத்திடம் இருந்து இவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அப்பொழுது சிவநாயகம் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். சிவநாயகத்தின் இந்த கூற்றை கேட்ட வீ. கே, "லேக் ஹவுஸ் " பெரிய ஸ்தாபனம், அதை விட்டு விட்டு இந்த சின்ன ஸ்தாபனத்திற்கு போகப் போகிறீர்களே என்று கேட்க, "சொர்க்கத்தில் ஒருவன் அடிமையாய் இருப்பதைவிட நரகத்தில் அவன் ராஜாவாக இருப்பது மேலல்லவா?" என்று கூறி சிரித்துள்ளார்.
அதன் பின்னர் எம். டி. குணசேன நிறுவனம் நடத்திவந்த தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தார். 1970 இல் தொழிற்சங்க நடவடிக்ைகயால் இப்பத்திரிகைகள் மூடப்படவே சொந்தமாகத் தொழில் ஆரம்பித்து ஓவியங்கள் வரைந்தார்.
1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்ற வீ.கே., அங்கு 1986 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உதயன், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளுக்கு ஓவியம் தீட்டினார்.
வீ. கே., கனகு, சித்தார்த்தன், நிலா போன்ற பல புனைபெயர்களில் ஓவியங்கள் வரைந்தார். லிங்கம், திருவாதிரை ஆகிய புனைபெயர்களில் பல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். தமிழ் இதழ்கள் மட்டுமல்லாமல் சிங்கள இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார்.
1990ஆம் ஆண்டு இவருக்கு 70 வயதாகியபோது இவர் நோய்வாய்ப்பட்டு தளர்ந்து இருந்தபோதும் மணிவிழா கண்ட ஒரு கலைஞராகத் திகழ்ந்தார். இவரது உள்ளம் உவகையில் திளைக்க வேண்டும் . இதற்கு இவருக்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என எண்ணிய தொழிலதிபர் வேலணை வீரசிங்கம் இவரைப்பற்றி மலரொன்றையும் வௌியிட்டு விழா எடுத்து மகிழ்ந்தார்.
இவரைப்பற்றி எஸ். டி. சிவநாயகம் ஐயா குறிப்பிடும்போது, ஒரு ஓவியம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று நாம் ஒரு வரியில் சொல்லிவிட ஒரு நொடியில் உயிர் ஓவியமாகத் தீட்டி விடுவார். இவரது கைவண்ணம் தீட்டிய கலை வண்ணங்களுக்கு பெரும் துாரிகையாக இருந்தவர் இவரது துணைவியார். இவரது ஓவியத்தில் உள்ள குற்றம் குறைகளை நேர்த்தியாக சுட்டிக்காட்டி ஓவியத் திலகமாகத் திகழ்ந்தவர் இவர். இவருக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண்கள். ஒரு பெண். மூத்தவர் புகழேந்தி தந்தையைப் போல புகழை ஏந்திய ஒரு ஓவியர். இரண்டாவது மகன் பொறியியலாளர். மகள் கௌரி.
இவர் ஓவியமாமணி, வர்ண வாரிதி, ஓவிய மன்னர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு விவேகானந்த சபையில் புலவர் கருணாலய பாண்டியனார் தலைமையில் நடைபெற்ற அ. பொ. செல்லையா எழுதிய காலத்தின் விதி நூல் வெளியீட்டு விழாவில் "ஓவியமன்னர்" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
1920ஆம் ஆண்டு பிறந்த வீ. கே.க்கு , 2020ஆம் ஆண்டான இந்த ஆண்டு 100 ஆண்டுகளாகின்றன . எனவே ஒரு உன்னதமான கலைஞர் என்ற ரீதியில் அவரைப் பற்றி இந்தாண்டு தாராளமாக எழுதலாம் என்று பிள்ளையார் சுழி போட்டு சுழியோடி பல நினைவுகளை மீட்டித் தந்தவர் ஆன்மீகவாதியும் ஆங்கில ஆசிரியருமான சிவராஜஜோதி.
கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...