திங்கள், 11 ஏப்ரல், 2011

விவேகானந்த சபையின் சைவசமயப் பரீட்சை

செயலமர்வு

திருமூலரால் ‘சிவபூமி’ எனப் போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே கொழும்பு மாநகரிலே இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியிலே ஐரோப்பியரின் வருகையால் நலிவுற்றிருந்த சைவ சமயத்தை ஆங்கிலேயர் காலத்தில் மேலும் நலிவடையச் செய்ய விடாது தடுப்பதற்கு தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு கொழும்பு விவேகானந்த சபை.

இது 1902.07.13 ஆம் திகதி அனுஷ நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டது. அன்று ஐரோப்பியரால் இலங்கையில் சைவ சமயம் நலிவுற்றிருந்தது. ஆனால் இன்று இலங்கைத் திருநாடு முழுவதிலும் மட்டுமன்றி ஐரோப்பியாவிலும் கொழும்பு விவேகானந்த சபையின் சைவசமய பாடப் பரீட்சை நடத்தப்படும் அளவுக்கு புகழ் பெற்றிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

அன்று இலங்கையில் சைவ சமயத்தை நலியவைத்த ஐரோப்பாவிலேயே இன்று சைவசமயம் வளம்பெற்று வருவதைப் பார்த்தால் சைவ சமயத்தின் சிறப்பு புலப்படும்.

800 பாடசாலைகளில் பரீட்சை

கொழும்பு விவேகானந்த சபை முதன் முதலாக 1930.02.15 ஆம் திகதி இப்பரீட்சையை நடத்த ஆரம்பித்தது. 1931 ஆம் ஆண்டு 80 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்பட்டது. இன்று 700, 800 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்படுகிறது. இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் மட்டுமன்றி ஐரோப்பியாவிலுள்ள கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இப்பரீட்சை நடத்தப்படுகிறது.

இந்த விவேகானந்தா சபையினால் நடத்தப்படும் அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சைக்குரிய பாடத்திட்டங்களை ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான கருத்தரங்கும் செயலமர்வும் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை விவேகானந்த சபையில் நடத்தப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இருக்கின்ற தமிழ் மொழி மூல பாடசாலைகளில் சைவசமயம் கற்பிக்கும் ஆசிரியர்களும் அறநெறி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த செயலமர்வு தமிழ் மரபுப்படி மங்கள விளக்கேற்றலுடனும் தேவாரத்துடனும் ஆரம்பமானது.

விவேகானந்த சபை செயலாளர் க. விவேகானந்தன்

சபையின் பொதுச் செயலாளர் க. விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்த சபையின்
தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏ. ஆர். சுரேந்திரன் தலைமையுரை நிகழ்த்தினார். செயலாளர் தமது உரையில் பரீட்சை ஆரம்பித்த வரவாற்றைக் கூறியதோடு சங்கீத ஆசிரிய ஆலோசகரான சங்கீத கலாவித்தகர், தேவாரங்கள் 7ம் நூற்றாண்டில் பாடப் பட்டதாகவும் கர்நாடக இசை 16ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் பஜனை, கீர்த்தனைகள் 17ம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம்


தேவாரத் திருவாசகங்கள் உரிய பண்ணோடு பாடப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அவ்வப்போது பதிகங்களை பண்ணோடு பாடி காட்டி பண்ணிசை விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம் மெய்கண்ட சாஸ்திரம் திருவருட் பயன் பற்றி விளக்கமளித்தார்.

மெய்யியல் என்பது தத்துவம், மெய்பொருள் காண்பது அறிவு, மெய்யியலின் 3 உண்மைப் பொருள்கள் பதி, பசு, பாசம், என மெய்கண்ட சாஸ்திரத்தைப் பற்றி மிகவும் எளிய நடையில் விளக்கமளித்தார் இவர். இந்த செயலமர்வு நடத்துவதற்குரிய நோக்கம், விவேகானந்த சபை வருடாந்தம் நடத்தும் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய வினாக்கள் அகில இலங்கை இந்து மன்றத்தின் ‘இந்து மக்களுக்கு ஓர் கையேடு’ ஆறுமுகநாவலரின் ‘சைவ வினா விடை’, ‘திருக்குறள்’ ஆகிய நூல்களில் உள்ள சில பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அறிவுறுத்துவதற்காகவே ஆகும்.

சைவப்புலவர் எஸ். செல்லத்துரை

கலாபூஷணம் சைவப்புலவர் எஸ். செல்லத்துரை சைவ வினாவிடை நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை சுட்டிகாட்டியதோடு அந்நூலில் இடம்பிடித்துள்ள சில சொற்பதங்களை எடுத்தியம்பி விளக்கமளித்தார்.

தேவாரம், புராணம் என்பன தமிழ்வேத இயலுக்குள் அடங்குவதாகவும் மலசல மோசனம் என்றால் மலசலம் கழித்தல் என்றும், செளசம் என்றால் கழுவுதல் என்றும், தந்த சுத்தி என்றால் பல் தீட்டுதல் என்றும் இவ்வாறாக இன்னொரன்ன பதங்களையும் பயன்படுத்தி விளக்கமளித்தார்.

இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு

கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு ‘திருக்குறள் காட்டும் நெறி’ என்ற தொனிப்பொருளை மையமாக வைத்து விளக்கமளித்ததுடன் திருக்குறளில் எந்தெந்த வகுப்புக்கு எந்தெந்தப் பகுதி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தினார்.

சங்க மருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார், இது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் விபரம் அளித்தார்.

திருமதி வசந்தா வைத்தியநாதன்

இந்த செயலமர்வின் பிற்பகல் அமர்வுகள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் தலைமையில் நடைபெற்றது. இதில் அருள்மொழி அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் பொதிந்துள்ள பொருளை நயம்பட எடுத்துரைத்தார்.

ந என்பது திரோதனம் மறைப்பு என்றும் ம என்பது மலகம் குற்றம் என்றும் சி என்பது சிவம் என்றும் வா என்பது யா அருட்சக்தி என்றும் என்பது ஆன்மா என்றும் குறிப்பிட்டார். தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், முத்தி பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என பஞ்சாட்சரத்தை வகைப்படுத்தி வேறுபடுத்தி (சிவாயநம, சிவசிவ, சிவாயசிவ...) கூறுவது எவ்வாறு? யார் யார் இதை கூறலாம் என்பது குறித்தெல்லாம் விளக்கமளித்தார்.

செல்லையா நவநீதகுமார்

திருவாவடுதுறை ஆதீன சமயப் பரப்புனர் செல்லையா நவநீதகுமார் கட்டையிலே போகும் போது செய்ய வேண்டிய அபரக்கிரிகைகளை பற்றி அழகுற தெளிவுபடுத்தினார்.

இந்த அபரக் கிரியைகளை செய்கின்ற புரோகிதருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும். பெற்றோர் இறந்தால் அவர்களுக்கு உரிய இறுதிக் கிரிகைகளை செய்கின்ற பிள்ளைகள் தீட்சை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அந்த அபரக் கிரியையில் பயன் உண்டு என்றெல்லாம் இவர் தெளிவுபடுத்தினார்.

பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனின் தலைமையில் ஐயந் தெளிதல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்களின் சந்தேகங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. விவேகானந்த சபையின் உப தலைவர் க. ஜெகதீசனின் நன்றியுரையுடன் செயலமர்வு நிறைவுபெற்றது.

திருக்குறள்

விவேகானந்த சபை நடத்தும் சைவ சமய பரீட்சைக்கு 5ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறளில் அறத்துப் பாலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

5, 6, 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய பகுதிகளிலுள்ள 40 குறள்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.

8ம், 9ம் வகுப்புகளுக்கு இனியவை கூறல், செந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை ஆகிய பகுதிகளிலுள்ள 60 குறட்பாக்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.

10ம், 11ம் வகுப்புகளுக்கு பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை ஆகிய பகுதிகளிலுள்ள 80 குறள்களும் இந்த பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சைவ வினா விடை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை நூலில் இருந்து 4ஆம், 5ஆம், 6ஆம் வகுப்புகளுக்கு கடவுள் இயல், புண்ணிய பாவ இயல், விபூதி இயல், ஆகியவையும்,

7ஆம், 8ஆம், 9ஆம் வகுப்புகளுக்கு சிவமூல மந்திர இயல், தமிழ், வேத இயல், ஆகியவையும் 10ம், 11ம் வகுப்புகளுக்கு நித்திய கரும இயல், மலசலமோசனம் நீங்கலாக சிவாலிய தரிசன இயல், தோத்திரங்கள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்து மக்களுக்கு கையேடு

அதனைவிட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ‘இந்து மக்களுக்கு கையேடு’ என்ற நூலிலிருந்து 3ம், 4ம், 5ம் வகுப்புகளுக்கு முதலாம், இரண்டாம் இயலும் 6ம் தரம் முதல் 9ம் தரம் வரை மூன்றாம், நான்காம், ஐந்தாம் இயல்களும் 10ம், 11ம் தரங்களுக்கு ஆறாம், ஏழாம், எட்டாம் இயல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பங்குபற்றியோர்

புவக்பிட்டிய சீ. சீ. தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மயில்வாகனன் ஜெயசுதன், செல்வி செல்வநாயகம் சுதர்ஷனி, றைகம் கீழ்பிரிவு தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த தங்கராஜ் கல்யாணி, நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த செல்வி தர்மிலா ஹரிதேவ், செல்வி அச்சுதன் அனிசியா லோஜினி, வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த புஷ்பவதி மாணி, தந்தை செல்வா அறநெறி பாடசாலையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவச்செல்வி, செல்வி தர்சனி வேல்சாமி, விசுவலிங்கம் சோமசுந்தரம், கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம் சுகந்தி விநாயக மூர்த்தி, களனி அல் அஷ்ரப் மகாவித்தியாலயத்தைச் §சேர்ந்த ததருமதி தேவகி நெல்சன், வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி இராஜநாயகி, திருமதி எஸ். ஸ்ரீதரன் ஷசிரஜனி, கொழும்பு வெஸ்லி கல்லூரி திருமதி லோகிதா சுதாகரன், கொழும்பு புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி சுவர்ணாங்கி சுகர்தன் திருமதி கெளஷியா ஜெயகாந்தன், கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் அறநெறி பாடசாலை செல்வி சந்திரபவானி கோவிந்தசாமி, திருமதி குஞ்சரா நிமலன், வணாத்தமுல்ல றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை செல்வி ஜெ. செல்லத்துரை, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி திருமதி செல்வராணி ஆனந்தசிவம், திருமதி தேவசேனாஞான பண்டிதன், சைவ முன்னேற்றச் சங்கம் திருமதி ரதினி பிரதீப்குமார், செல்வி சுமதி பத்மநாதன் கொழும்பு விவேகானந்த சபை திருமதி அனுராதா பாக்கியராஜா ஐங்கரன் கிருஷ்ணசாமி, செல்வி பவானி சண்முகலிங்கம், செல்வி ரேணுகா அருணகிரிநாதன், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான அறநெறிப் பாடசாலை செல்வி பிரியதர்ஷனி ராஜலிங்கம், திருமதி மகாலெட்சுமி நட்ராஜ், பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் மடம் செல்வி வாஹினி ஸ்ரீதரன், வத்தளை ஸ்ரீ முத்து குமாரன் அறநெறி பாடசாலை திருமதி சந்திராதேவி அருளானந்தம்,

வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி

வடகொழும்பு இந்து பரிபாலன சபை திருமதி யோகேஸ்வரி மாணிக்கவாசகர், கொழும்பு றோயல் கல்லூரி சபாரத்தினம் சிவகுமார், ஹுனுப்பிட்டி ஸாஹிரா ம. வி. திருமதி ரோகிணிதேவி கணேசலிங்கம், கொழும்பு புனித பேதுரு கல்லூரி, திருமதி யோகேஸ்வரி சண்முகநாதன், ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயம் திருமதி லலிதா ஜெகதீசன், கொட்டாஞ்சேனை மெதடிஸ்த தமிழ் பாடசாலை செல்வி மங்களேஸ்வரி சண்முகநாதன், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தமிழ் பாடசாலை திருமதி ச. இராமச்சந்திரன், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி திருமதி கெளரி இரத்தினவேல், கொழும்பு – 10 பிறிஸ்பன்றோரின் பெண்கள் பாடசாலை திருமதி பவானி வரதராஜன், வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி திருமதி சோமசுந்தரம் மகேஸ்வரி ஆகிய ஆசிரியர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இப்பரீட்சை வகுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதால் ஒவ்வொரு வகுப்புகளிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இப்பரீட்சையில் சித்திபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

11ம் வகுப்பு பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதைவிட புலமைப் பரிசில்களும் வழங்கப்படும்.

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...