புதன், 14 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10234) புண்யாக வாசனம் யாருக்கு, எதற்கு செய்யப்படுகிறது? வருண பகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம் (10235) புண்யாகம் என்றால் என்ன? புனிதம் வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்று பொருள். (10234) பஞ்சகவ்யம் எவை? அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் (10235) பஞ்சகவ்யம் எவ்வாறு செய்யப்படும்? பஞ்சகவ்யங்களை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க் கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர். (10236) கணபதி ஹோமம் என்பது என்ன? பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகா கணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகா கணபதி ஹோமம். (10237) நவகிரஹ ஹோமம் என்பது என்ன? கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல். (10238) மகாசங்கல்பம் என்பது என்ன? எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும் என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது. (10239) தனபூஜை எவ்வாறு செய்யப்படும்? கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது (10240) தனபூஜை செய்வதால் ஏற்படும் பலன் என்ன? இந்த தன பூஜையைப் செய்வதால், வீட்டில் தனம் சேரும். (10241 சகல தெய்வங்களும் உறையும் தெய்வமாக போற்றப்படுவது எது? கோமாதா என்ற பசு (10242) கோபூஜை எவ்வாறு செய்யப்படுகிறது? பசுவை அலங்கரித்து பூஜை செய்யப்படும். (10243) இந்த பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812