புதன், 28 ஆகஸ்ட், 2013
சுப்ரபாதம்
கே.ஈஸ்வரலிங்கம்
10244) சுப்ரபாதம் என்பதில் ‘பா’ என்றால் என்ன?
வெளிச்சம்
10245) சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
இனிய காலைப்பொழுது
10246) பாVதம் என்றால் என்ன? வார்த்தைகள்
10247) சுபாக்ஷதம் என்றால் என்ன? நல்வார்த்தைகள்
10248) கன்யா என்றால் என்ன பொருள்? பெண்
10249) சுகன்யா என்றால் என்ன பொருள்?
நல்ல பெண்
10250) தாரம் என்றால் என்ன? மகிழ்ச்சி
10251) சாத்திரத்தில் தாரம் என அழைப்பது எதனை? ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை
10252) இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் என்ன?
பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர்.
10253) ஆன்மீகத்தில் எது உயர்ந்த சந்தோசம்?
முக்தி
10254) பிரணவம் என்பதற்குரிய அர்த்தம் என்ன?
புதியது
10255) விரதம் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
கஷ்டப்பட்டு இருத்தல்.
10256) உபவாசம் என்பதன் பொருள் என்ன?
இறைவனுக்கு அருகில் இருத்தல்
10257) விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது என்பது ஏன்?
அரிசி, வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
10258) சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் எந்த நிற ஆடை அணிவது ஏற்றது? கருப்பு
10259) கருப்பு நிற ஆடை அணிவதால் ஏற்படும் நன்மை என்ன?
தீங்கு விளைவிக்கக்கூடிய மிருகங்கள் நெருங்காது
10260) கருப்பு ஆடைக்கு அடுத்தபடியாக தெரிவு செய்யக்கூடிய நிறம் எது? காவி
10261) காவி உடை அணிவதால் ஏற்படும் பலன் என்ன? தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.
10262) மஞ்சள் நிறத்தின் மகிமை என்ன?
பக்தியின் அடையாளம்
10263) மஞ்சள் ஆடைக்கு உள்ள சக்தி என்ன?
திருவிழா காலங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி மஞ்சள் ஆடைக்கு உண்டு.
10264) சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது? ஒன்பது
10265) அந்த ஒன்பது விஷயங்களும் எவை?
ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் – மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக