வெள்ளி, 18 அக்டோபர், 2013
கே. ஈஸ்வரலிங்கம்
விரதங்கள்
(10361) புராணங்களில் எத்தனை
வகையான உபவாச விரதங்கள்
பற்றி கூறப்பட்டுள்ளன?
27,
(10362) அந்த 27 வகையான
உபவாச விரதங்களையும் தருக
1. உமிழ் நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி உபவாசம் இருத்தல்.
16. ஒருநாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
17. ஒருநாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
18. ஒருநாள் முழுவதும் பொரிமாவு புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடி செய்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்து மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
19. ஒருநாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
21. ஒருநாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
22. ஒருநாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
23. ஒருநாள் முழுவதும், அத்தி இளந்தளிகைகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக்கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக