திங்கள், 10 நவம்பர், 2014
தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும்
ஸ்ரீ கிருஷ்ண கலாலயம் அதன் 38 ஆவதுஆண்டுநிறைவையொட்டி 38 கலைஞர்களைகௌரவித்தது. கொழும்பு மாளிகாவத்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பக்தி இசைக்குழுவின் அங்குரார்ப்பண விழாவில் கலைஞரும ;தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கே. ஈஸ்வரலிங்கம் பிரதி அமைச்சர் பிரபா கணேசனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அருகில் கலாலயத்தின் செயலாளர் கே. மோகன்குமாரும் காணப்படுகிறார்.
வேதங்கள்
11173) பத்து உபநிஷதங்கள் என்னென்ன?
ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம். ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும்.
11174) இவை ஏன் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது?
வேதத்தின் அந்தமாக இவை விளக்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது.
11175) வேதாந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும். இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறு கின்றது.
11176) வேதங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு
11177) இரண்டு வகையான வேதங்களையும் தருக?
கர்ம காண்டம். ஞான காண்டம்
11178) இதில் உபநிஷதங்கள் எந்த காண்டததில் வரும்?
ஞான காண்டத்தில்
11179) உபநிஷதம் என்றால் என்ன பொருள்?
குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும்.
11180) வேதாந்தங்களாக ஒளிர்கின்றவை எவை?
உபநிஷதங்கள் எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன.
11181) வேதத்தின் இலக்கு என்ன?
வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும்.
11182) காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன?
அவ்வளவு தூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும்.
இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை, இறுதியில் இப்படித்தான் இறக்கப் போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும்.
அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.
திங்கள், 3 நவம்பர், 2014
சிவபெருமான்
11150) சிவபெருமானுடைய வடிவம் எத்தனை? மூன்று
11151) சிவபெருமானுடைய மூன்று வடிவங்களும் எவை? அருவம், அருவுருவம், உருவம்
11152) அருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சிவன்
11153) அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சதாசிவன்
11154) உருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? மகேசுவரன்
11155) மகேசுவரன் எத்தனை 25 வடிவங்களில் அருள்புரிகிறான்? 25 வடிவங்களில்
11156) சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாக விளங்குபவன் யார்?
11157) உருவமாக காணும் சிவன் எந்த நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம்? பத்மாசனம்
11158) உருவமாக காணும் சிவனின் ஒளி மிகுந்த கண்கள் எவ்வாறு இருக்கும்? முக்கால் பாகம் மூடிய நிலையில் இருக்கும்
11159) சிவனின் இரு புருவங்களுக்கும் நடுவில் இருப்பது என்ன? நெற்றிக்கண்
11160) சிவனின் நெற்றியில் என்ன இருக்கும்? திருநீற்றினால் மூன்று கோடுகள்
11161) சிவன் எந்த நிற சடைமுடியான்? செம்மை நிற
11162) அவன் தலையில் யார் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள்? கங்கை
11163) தலையில் சூடி இருப்பது எதனை? பிறையை
11164) சிவனுக்கு பிடித்த மலர் எது? கொன்றை
11165) சிவன் தலையில் அணிந்திருப்பது எந்த மலரை? கொன்றை
11166) சிவனின் உடல் முழுவதும் என்ன காணப்படும்? திருநீற்று கோடுகள்
11167) சிவனின் கைகளிலும் கழுத்திலும் என்ன காணப்படும்? உருத்திராட்ச மாலை
11168) சிவனின் கழுத்தில் இருப்பது என்ன? பாம்பு
11169) சிவன் எதனை வைத்திருக்கிறார்? உடுக்கையும் சூலாயுதத்தையும்
11170) சிவன் எதனை வாகனமாக வைத்துள்ளான்? விடையாகிய காளை மாட்டை
11171) சிவன் இடையில் என்ன அணிந்துள்ளான்? புலித்தோலை
11172) சிவன் எதனை வீடாக வைத்துள்ளான்? கைலாய மலையை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...