திங்கள், 10 நவம்பர், 2014

வேதங்கள்

11173) பத்து உபநிஷதங்கள் என்னென்ன? ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம். ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும். 11174) இவை ஏன் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது? வேதத்தின் அந்தமாக இவை விளக்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. 11175) வேதாந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும். இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறு கின்றது. 11176) வேதங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு 11177) இரண்டு வகையான வேதங்களையும் தருக? கர்ம காண்டம். ஞான காண்டம் 11178) இதில் உபநிஷதங்கள் எந்த காண்டததில் வரும்? ஞான காண்டத்தில் 11179) உபநிஷதம் என்றால் என்ன பொருள்? குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும். 11180) வேதாந்தங்களாக ஒளிர்கின்றவை எவை? உபநிஷதங்கள் எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன. 11181) வேதத்தின் இலக்கு என்ன? வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும். 11182) காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன? அவ்வளவு தூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும். இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை, இறுதியில் இப்படித்தான் இறக்கப் போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும். அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812