திங்கள், 3 நவம்பர், 2014
சிவபெருமான்
11150) சிவபெருமானுடைய வடிவம் எத்தனை? மூன்று
11151) சிவபெருமானுடைய மூன்று வடிவங்களும் எவை? அருவம், அருவுருவம், உருவம்
11152) அருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சிவன்
11153) அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சதாசிவன்
11154) உருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? மகேசுவரன்
11155) மகேசுவரன் எத்தனை 25 வடிவங்களில் அருள்புரிகிறான்? 25 வடிவங்களில்
11156) சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாக விளங்குபவன் யார்?
11157) உருவமாக காணும் சிவன் எந்த நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம்? பத்மாசனம்
11158) உருவமாக காணும் சிவனின் ஒளி மிகுந்த கண்கள் எவ்வாறு இருக்கும்? முக்கால் பாகம் மூடிய நிலையில் இருக்கும்
11159) சிவனின் இரு புருவங்களுக்கும் நடுவில் இருப்பது என்ன? நெற்றிக்கண்
11160) சிவனின் நெற்றியில் என்ன இருக்கும்? திருநீற்றினால் மூன்று கோடுகள்
11161) சிவன் எந்த நிற சடைமுடியான்? செம்மை நிற
11162) அவன் தலையில் யார் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள்? கங்கை
11163) தலையில் சூடி இருப்பது எதனை? பிறையை
11164) சிவனுக்கு பிடித்த மலர் எது? கொன்றை
11165) சிவன் தலையில் அணிந்திருப்பது எந்த மலரை? கொன்றை
11166) சிவனின் உடல் முழுவதும் என்ன காணப்படும்? திருநீற்று கோடுகள்
11167) சிவனின் கைகளிலும் கழுத்திலும் என்ன காணப்படும்? உருத்திராட்ச மாலை
11168) சிவனின் கழுத்தில் இருப்பது என்ன? பாம்பு
11169) சிவன் எதனை வைத்திருக்கிறார்? உடுக்கையும் சூலாயுதத்தையும்
11170) சிவன் எதனை வாகனமாக வைத்துள்ளான்? விடையாகிய காளை மாட்டை
11171) சிவன் இடையில் என்ன அணிந்துள்ளான்? புலித்தோலை
11172) சிவன் எதனை வீடாக வைத்துள்ளான்? கைலாய மலையை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக