செவ்வாய், 24 மார்ச், 2015
பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?
11285) கடவுளை நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாதாமே ஏன்?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்தப் பார்வை நன்மை அளிக்காது. மற்ற இரு கண்களும் சூரியசந்திர வடிவானவை. இவை நன்மை தருபவை.
தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத்தான் “கடாக்ஷம்” என்பர். இதை கட + அக்ஷம் என பிரிப்பார்கள். “கட” என்றால் கடைசி. “அக்ஷம்” என்றால் கண். அதாவது கண்களின் கடைப்புறப் பார்வை என்று பொருள். இது கருணையே வடிவானது. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. அதற்காகத் தான் நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று வழிபட வேண்டும்.
(11286) பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?
பொதுவாக பூஜையறையில் குலதெய்வ தீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும் எல்லா தெய்வங்களுக்குமாக குத்து விளக்குமாக இரண்டு தீபம் ஏற்றவேண்டும். ஊதுபத்தி, சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டும்.
(11287) சிவபெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்?
எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக்கொண்டுள்ளார். இது தான் கருணையும், எரிமையும். இணைந்த திருவருள் உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அளுள்கிறார்.
(11289) சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன?
பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்து மதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலிபூஜை. இது மிக உயர்ந்த வழிபாடு.
இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்க சுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள்.
(11290) விரத நாட்களில் பகலில் தூங்கக் கூடாதாமே ஏன்?
சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வ சிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும் தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும்.
(11291) பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்லவேண்டும்?
குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
(11292) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?
இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக