திங்கள், 20 ஏப்ரல், 2015

கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கே. ஈஸ்வரலிங்கம் 11310) கோவிலில் வாயில்படி இருந்தால் அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? இதில் அறிவியல் பு+ர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன் கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சு+ரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். 11311) சைவ சமயத்தின் பண்புகள் எவை? கொலை, களவு, மது, மட்ச்ச மாமிசம், பொய், விபச்சாரம் முதலிய பாவங்களை நீக்கி இருப்பது உயிர்களுக்கு கருணை காட்டுதல் (அஹிம்சை), மெய் பேசுதல், வறியவர்களுக்கு தானமிடல், செய்நன்றி அறிதல் ஆகிய தர்மங்களை பாதுகாத்து நடத்தல், மாதா, பிதா, குரு, அரசன், வயதில் பெரிய வர்கள் ஆகியோரை அன்பாய் உபசரித்தல், விபு+தி உததி;ரார்ட்சம் தரிப்பது, சிவதீட்சை பெற்றுகொள்ளுதல், சந்தியா வந்தனம் , சிவ தியானம், பஞ்சாசற செபம் , சிவ ஸ்தோத்திரம் இவைகளை நித்தமும் ஒரு பத்து நிமிடமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன் செய்து முடிப்பது, நித்தமுமாவது புண்ணிய காலங்களிலாவது சிவலிங்க பெருமானை அன்புடன் விதிப்படி வணங்கி துதிப்பது, சைவ நெறி தரும் நூல்களை வசித்தோ அல்லது கேட்டோ அறிதல், சமய பிரசங்கங்களை கேட்டு அதன் வழி நடப்பது, சிவ நிந்தை, குரு நிந்தை, சிவனடியார் நிந்தை இவைகளை கேளாமல் ஒதுங்கி விடுவது, சைவ சமய குறவர் நால்வருடைய நட்;சத்திர நாட்களில் (குருபு+சை ) அவரவருடைய சரித்திரத்தை கேட்டு தானம் செய்து விரதத்துடன் இருப்பது, மகாபாதங்களை செய்தலும், அல்லது செய்ய கூடிய புண்ணியத்தை செய்யாது விட்டாலும் அதற்காக வருந்தி சிவகாமப் பிரகாரம் விதித்த பிராயச்சித்தத்தை செய்தல். 11312) காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்றுதல் என பொருள் வந்தது ஏன்..? காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும். இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812