புதன், 15 ஏப்ரல், 2015

(11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி?

கே. ஈஸ்வரலிங்கம் (11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி? உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தக்காரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்? உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும். அரிசியை கழுவி பானையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதமாகி விடுகிறது? கடவுளுக்கு மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் போது சாதாரண கூழாங்கல் கூட பெரிய கல்லாகி விடுகிறது. அதுபோல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது. ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும்தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும். (11298) எப்போது தரிசனம் கூடாது? காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சந்நதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. (11290) கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவலாமா? கோவிலுக்குச் சென்று விட்டு வீடுதிரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். (11300) நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள்? இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம் அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். புரியாத குற்றங்களிலிருந்து வெகு தூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அது மட்டுமல்ல நெருப்பு இடயறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனத்திற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபாட்டால் போதும் நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம். (11301) கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்? அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால் கடவுளின் முன் நேர் எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும் மயிலும் முருகனிடமும் பாம்பும் கருடனும் விஷ்ணுவிடமும் சிங்கமும் காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே கடவுகளின் முன் கூடி வாழும் போது ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது. (11302) அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைக்கிறார்கள்? மலையில் ஏறும்போதும் கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போது நமது இரத்தத்தில் ஒட்சிசன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் இரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட மலைக்கோயில் கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால் இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு மிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812