கொ ழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வரன் பூஜையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து குமாரசுவாமிக்கும் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் சுவாமி காலை 7.30 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் பவனி வந்து அருள் பாலிப் பார்.
முதலாம் குறுக்குத் தெரு தேவஸ்தானத்தி லிருந்து மூத்த மன்னடியார் கார்த்திக் குழுவினரின் கேரளா பாலக்காட்டு கொச்சி மேளத்துடன் தேர் நகர் பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். காலி முகத்திடலில் பக்தர்களுக்கு திருவமுது ஜேராஜனம் வழங்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு காலி முகத்திடலில் இருந்து மீண்டும் தேர்பவனி ஆரம்பமாகும்.
இத்தேர் பவனி காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடையும். அதன் பின் பக்தர்களுக்கு திருவமுது அளிக்கப்படும்.
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து அருள்பலிக்கும் சுவாமிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணிக்கு வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடத்தப்படும். அன்று காலை 11.30 மணிக்கு வேல விழா விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதத்துடன் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் விழா அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவான் கலை மாமணி ராஜேஷ் வைத்தியா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு வழமையான பூஜையுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சவாமியின் மயில்வாகனக் காட்சியும் ஆடிவேல் அச்சர்னையும் நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் விபூதிப் பிரசாதத் துடன் நண்பகல் 12 மணிக்கு அன்னதா னம் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பெளர்ணமி தினம் என்பதா ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகர் குருமண்டலம் வீரமணிதாசனம் தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி இடம்பெறும். யாரோ ராஜா இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 2015.08.01 ஆம் திகதி காலை 7 மணிக்குவழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை இடம்பெறும். அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறும்விசேட பூஜையுடன் 12 மணிக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக