வியாழன், 23 ஜூலை, 2015

சைவ முன்னேற்றச் சங்க கதிர்காம வேல்பூஜை

கொழும்பு 02, கியூ விதி, 101/ 70 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 13வது ஆண்டாக நடத்தும் புனித கதிர்காம வேல்பூஜை திருவிழா கடந்த (17) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த பூஜை வழிபாடுகள் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணிவரை எதிர்வரும் 29 ஆம் திகதி தொடர்ந்து நடைபெறும். மாலை அணிந்து விரதமிருக்கும் அடியார்களின் அபிஷேகம் ஆராதனைகள் அருள்மிகு பஜனை, சிறப்புச் சொற்பொழிவு என்பன இங்கு இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி இரவு 9 மணிக்கு புனித கதிர்காம யாத்திரை ஆரம்பமாகும். எதிர்வரும் 30ஆம் திகதி திஸ்ஸமஹாராம வழிப்பிள்ளையாரை வழிபட்டு செல்வக்கதிகாமம் நேர்த்தி பாதயாத்திரை இடம்பெறும். அன்று பகல் செல்லத்துப் பிள்ளையார் சந்நிதானத்தில் பொங்கல் வைக்கப்படும்.
31ம் திகதி காலை இடம் பெறும் கதிரைமலை தரிசனத்தைத் தொடர்ந்து அன்று மாலை பெரிய கோயில் முன்னால் ஆனந்த மிக பஜனை இடம்பெறும். எதிர்வரும் 2015-08-01 ஆம் திகதி காலை மாணிக்ககங்கையில் வெற்றி வேலுடன் புனித தீர்த்தமாடல் இடம்பெறும். அன்று மாலை சங்கு மண்டபத்தில் இடும்பன் பூஜை இடம்பெறும் என பெருமாள் பூமிநாதன் குருசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812