திங்கள், 14 செப்டம்பர், 2015

14496) வீடுகளிலும் கடைகளிலும் அர்ஜுனனுக்காக கிருஷ்ண பகவான் தேரோட்டும் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்களே சரியா?
மனிதப் பிறவியே இறைவனோடு இரண்டற கலக்கவே ஏற்பட்டதாகும். அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடைய உள்ளத்தில் உறைகிறார்.
பாரதப்போர் துவங்கும்போது உறவினர்களை அழிக்கத் தயங்கிய அர்ஜுனனுக்கு அரிய பெரிய வேதாந்த கருத்துகளை ஸ்ரீபகவத் கீதை என்று வெளிப்படுத்துகிறார்.
இந்தப் படத்தை மாட்டினால் துறவறம் கிடைத்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். துறவும், ஞானமும் நம் கைகளில் இல்லை.
இந்தப் படம் வாழ்க்கை, ஆன்மீகம் என்று சகல விஷயங்களைப் பற்றியும் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பேசுவதாக உள்ளது. ஆகையால், இந்தப் படத்தை எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். இந்தப் படத்தை ஒரு ஜென்மம் முழுவதும் பார்த்தாலே அது தியானமாகி ஞான பரியந்தம் வரை கொண்டுபோய் சேர்க்கும்.

14497) நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?
நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.
இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.
மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812