வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் திமிலை ஶ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தின்
வருடாந்த மஹோற்சவத்தில் இன்று 28ந்திகதி திங்கட்கிழமை தொடக்கம் 1ந்திகதி
வெள்ளிக்கிழமை வரை திருவிழா நடைபெற உள்ளது. கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை
(28) இடம்பெறுவதோடு 29திகதி சக்திக் கரகம் இடம்பெற்று 30ம் திகதி விஷேட
பூஜையோடு 31ம் திகதி காலை மஞ்சள் நீராடல், பொங்கல் இடம்பெறும். இறுதியாக
இடும்பன் பூஜை 1ஆம் திகதி நடைபெறுவதுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக