விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும் படும். இருபத்தேழு
நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின்
கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை
முறையிட்டனர். கருணையங் கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று
அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு
தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி,
தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு
சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி
விளங்கின.ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசி மாதத்து விசாக நாள்
ஆகும்.
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில்
எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி
மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ
நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான
சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார்,
நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம்
அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது
இந்த மாதத்தில் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக