திங்கள், 8 அக்டோபர், 2018

மந்திரங்கள்





தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள் எவை?

மந்திரமும் யந்திரமும்


மந்திரம் என்பது எத்தனை அங்கங்களைக் கொண்டது?
ஏழு


மந்திரத்தின் 7 அங்கங்களும் எவை?
1. ரிஷி 2. சந்தஸ் 3. தேவதை 4. பீஜம் 5. சக்தி 6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன.


மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் யார்?
ரிஷிகள்


ஒவ்வொரு மந்திரமும் முக்கியமான மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது. அந்த மூன்று விடயங்களும் எவை?
ரிஷி, தேவதை, சந்தஸ்



இங்கு ரிஷி என்பது யார்?

மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி,



தேவதை என்பது யார்?

அந்த மந்திரத்துக்குரிய தேவதை,



சந்தஸ் என்பது என்ன?

அந்த மந்திரத்தின் சொல்லமைப்பு



மந்திர ஜெபம் செய்யும் போது என்ன செய்ய வேண்டும்?

மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.


மந்திரத்தை வெளியிட்ட ரிஷி யார்?
ஆதி குரு
அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்தவர் யார்?
மானிட குரு



ஆதி குரு, மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக என்ன செய்ய வேண்டும்?
வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும்.



இதனை என்னவென்று சொல்லுவார்கள்?

ரிஷி நியாசம்


நமக்குச் சமமானவரை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.



தேவதையை வணங்கும்போது எப்படி வணங்க வேண்டும்? இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.


சந்தஸ் என்பது என்ன?
மந்தரத்தின் சொல் அமைப்பு.



அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறை என்னவென்று அழைக்கப்படுகிறது?
அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.


தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவதை என்னவென்று அழைப்பர்?

தேவதா நியாசம்


பீஜம் என்பது எதனை?
மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்தை பீஜம் என்பா்.


இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வந்தவை?
சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தவை



அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக எந்த நிலையில் இருந்தது?
அதி சூக்கும நிலையிலிருந்தன. இந்த ஒவ்வொரு சூக்குமும் ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.



சக்தி என்பது என்ன?
அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும்.



சக்தியின் வெளிப்பாடுகள் எவை? வீரியம் தேஜஸ், பலம் என்பன


கீலகம் என்பது என்ன?
சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812