புதன், 5 டிசம்பர், 2018

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை என்று பார்க்கலாம்.
மும்மூர்த்திகளில் சிவ பெருமான் சம்ஹார மூர்த்தியாக அறியப்படுகிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். பொதுவாகவே ஈசன் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு கோபம் வந்தால் பிரளயம் ஏற்படும் என்றும் காலங்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.ஆனால் உண்மையில் ஈசன் அன்பே உருவானவர். தன்னை யார் சிரத்தையுடன் வணங்கினாலும் அவர்களுக்கு அவரின் பரிபூரண ஆசி கிடைக்கும்.உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை தெரியுமா?

பிறன் மனை நோக்குவது ஆண்மையற்றது மட்டுமின்றி அது பாவச் செயலாகும். அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது நமது இந்து மத சாஸ்திரப்படி பாவமாகும்.

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படுவதும் அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது கூட மகா பாவத்தில் அடங்கும்.

சுய நலத்திற்காக எளியவர்களின் வாழ்வை அழிப்பதும் அவர்களின் மீது வீண் பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத பாவம்.

ஒருவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து தீய வழியிலே செல்வது அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.

கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொருவரைப் பற்றி அப்பட்டமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

வதந்திகளையும் தேவையில்லாத விஷயங்களையும் எல்லாரிடம் பரப்புவது அதனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதும் மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

நமது இந்து சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் தெய்வமாக மதிக்கும் கோமாதா என்று போற்றப்படும் பசு. அவற்றை உண்பது பாவச் செயல்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்தும் மன்னிக்கமுடியாத பாவமாக கருதப்படுகிறது.

மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது மற்றும் அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவை சிவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும்.

மொத்தத்தில் நம்முடன் வாழும் நம் சக உயிருக்கு தீங்கு இழைக்காத ஒரு வாழ்வே நம்மை இறை தன்மைக்கு உயர்த்தக் கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812