நம்முடைய உயிரைத் தாங்குவது எது?
அன்னம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?
ஆம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக சான்றோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கின்றனர்?
‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று
ஆசாரம் என்பதற்கு என்ன பொருள்? சுத்தம்
நாம் உண்ணும் உணவில் எத்தனை வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது?
ஐந்து
அந்த ஐந்து வகையான தோஷங்களும் எவை?அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம்
‘அர்த்த தோஷம்’ எதனால் வருகிறது?
நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’
இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு என்ன பொருள்?
‘பொருள்’
நிமித்த தோஷம் எதனால் ஏற்படுகிறது?
நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானது, நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கள் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்கூறிய ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.
அசுத்தமான உணவு என்ன செய்யும்?
மன அசுத்தத்தை விளைவிக்கும்.
தீயவன் சமைத்த உணவு என்ன செய்யும்?
தீமையான எண்ணங்களையே உண்டாக்கும்.
மனதில் நற்சிந்தனைகள் எழுவது யார் சமைத்த உணவால்?
நல்லவன் சமைத்த உணவால்
ஸ்தான தோஷம் எதனால் ஏற்படுகிறது?
எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால் அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.
குண தோஷம் எதனால் ஏற்படுகிறது?
சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்களினால்
நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?
சாத்வீக குணமுடையதாக
சாத்வீகமான உணவுப் பொருட்கள் எவை?
பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை
புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை எப்படிபட்ட பொருட்கள்?
ராஜஸிகமானவை.
பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை எப்படிபட்ட பொருட்கள்?
தாமஸிகமானவை.
சாத்வீக உணவு எதைத் தருகிறது? ஆன்மிக முன்னேற்றத்தை
ராஜஸிக உணவு என்ன செய்கிறது?
உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமஸிக உணவு தீய எதைத் தருகிறது?
தீய எண்ணங்களை வளர்க்கிறது.
சம்ஸ்கார தோஷம் என்பது எதனை?
உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள்.
உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள் எவை?
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. இவைதான் உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் என்ன சொல்லி வைத்தார்கள்?
அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக