மனிதர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ படைக்கப்பட்டவர்கள், அவர்கள்
வாழ்நாள் முழுவதும் தனிமையிலேயே வாழ்ந்துவிட முடியாது. நண்பர்கள்,
உறவினர்கள், மனைவி, குழந்தைகள், உடன் வேலைசெய்பவர்கள் என அனைவருடனும்
வாழ்க்கையை பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும். ஆனால்
நம்முடன் பழகுபவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்துவிட வாய்ப்பில்லை.
வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி நம் உடனிருப்பவர்கள்
உறுதுணையாக இருக்கிறார்களோ அதேபோல நமது வீழ்ச்சிக்கும் நமக்கு
உடனிருப்பவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். எனவே நமது உடனிருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தந்திரங்களின்
சக்கரவர்த்தியான சாணக்கியர் வாழ்க்கையில் சரியானவர்களை எப்படி
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார் என்று பார்க்கலாம்.
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்.
உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கும் குணம் உள்ளவர்கள், உங்களை விட
அந்தஸ்தில் மிக உயரத்தில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் நட்பு பாராட்டாமல்
இருப்பதே நல்லது என்கிறார் சாணக்கியர். ஏனெனில் இந்த வேறுபாடுகள் நிச்சயம்
இருவருக்குள்ளும் பிரச்சினைகளை உண்டாக்கும், இதனால் அவர்களால் ஒரு
மகிழ்ச்சியான உறவை வளர்க்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக