சமயம், ஒழுக்கம், சடங்குகள் மற்றும் கலாசாரங்களி&ன் தோற்றுவாயை எதிலிருந்து தொடங்குவது மரபு? வேதத்தில் இருந்து
வேதங்கள் யாரால் அருளப்பட்டவை ?
கடவுளாகிய பரம்பொருளால்
யாருக்கு அருளப்பட்டது?
தவசீலர்களான முனிவர்களுக்கு
வேதம் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
உயர்ந்த அறிவு, ஞானம் என்பது பொருள்
வேதங்கள் எத்தனை வகைப்படும்? நான்கு
நான்கு வகை வேதங்களும் எவை?
ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்
பொதுவாக வேதங்கள் எத்தனை நுாற்பிரிவுகளைக் கொண்டது?
மூன்று
அந்த மூன்று பிரிவுகளும் எவை?
ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம்
வேதங்களின் சில முக்கிய சொற்களுக்கு உரை எழுதியவர் யார்?
யாஸ்கர் என்னும் முனிவர்
இவர் தம்முடைய நிருக்தம் என்னும் நூலில் எந்த இரு பிரிவுகளைப் பற்றி கூறியிருக்கிறார்?
ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் என்னும் இருபிரிவுகளையே குறிப்பிடுகிறார்.
பரம்பொருளான ப்ரஹ்மம், ஜீவாத்மா, மோக்ஷம் ஆகியவற்றை மிக விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராய்ந்து முதன் முதலில் உலகுக்கு அறிவித்த உபநிஷத்துக்கள் பெரும்பான்மை எந்த பகுதியில் அடங்கும்?
ஆரண்யகம் என்னும் பகுதியில்
ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் ஆகிய இரு பகுதிகளும் முக்கியமாக எதைப் பற்றி விளக்குகின்றன?
பலவித வேள்விகளைப் பற்றி
வேள்விகளைப் பற்றி விளக்குவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?
கர்மகாண்டம் என்று
சூரியமண்டலத்தில் ப்ரஹ்மத்தைத் தியானித்தல், பஞ்சாக்னி வித்தை முதலிய தியானவகைகளை விளக்குவபவை எவை ?
ஆரண்யகங்கள்
ஆரண்யகங்களை எவ்வாறு அழைப்பர்?
உபாஸனாகாண்டம் என்று
ஞானநிலையைப் பற்றி விரித்துக் கூறுவதால் உபநிஷத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஞானகாண்டம்
இதில் பலவித யாப்புகளைக் கொண்ட செய்யுள் (ரிக்) வடிவில் இருப்பவை எது?
ரிக்வேதம்
செய்யுளும் உரைநடையும் கலந்தவடிவில் இருப்பது எது?
யஜுர்வேதம்
பெரும்பான்மை ரிக்வேதத்தின் ரிக்குகளைக் கொண்டு இசைவடிவில் அமைந்துள்ளது எது?
ஸாமவேதம்
“மந்திரங்களும் பிராஹ்மணங்களும் அடங்கிய நூல் எது?
வேதம்
யாஸ்கர் என்னும் மஹர்ஷியின் வாக்கு எது? வேதம்
வேதம் எத்தனை பெரும் நூல்களைக்கொண்டதது?
ஐந்
அவை எவை?
ரிக்வேதம், கிருஷ்ணயஜுர்வேதம், சுக்லயஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் என்பன.
மிகப் பழமையான காலத்தில் வேதம் என அழைக்கபட்டு வந்துள்ள நால்கள் எவை?
ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூவகை நூல்களே
இதனை நாம் எதிலிருந்து அறிந்து கொள்ளலாம்?
பாணினி முனிவரின் வியாகரண நூல் முதலியவற்றிலிருந்து
சற்றுப் பின்னர்வேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது எது?
அதர்வணவேதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக