புதன், 3 டிசம்பர், 2025
சைவத் திருநூல்கள்
சைவத் திருநூல்கள்
207675. சைவ சமயத்தின் முதன்மையான நூல்கள் யாவை? வேதமும் சிவாகமமும்.
207676. இவை எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன? ஆரியம் எனப்படும் சமஸ்கிருத மொழியில்.
207677. தமிழ் மொழியில் உள்ள சைவத் திருநூல்கள் நான்கு கூறுக. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம்.
207678. தேவாரம், திருவாசகம் முதலிய திருநூல்கள் அடங்கிய தொகுப்புக்குப்பெயர் யாது? திருமுறை.
207679. தேவாரங்களைப் பாடியருளியவர் யாவர்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவர்.
207680. திருவாசகத்தைப் பாடியருளியவர் யாவர்? மாணிக்கவாசக சுவாமிகள்.
207681. திருமந்திரத்தைச் செய்தருளியவர் யாவர்? திருமூல நாயனார்.
28
207682. பெரியபுராணத்தைப் பாடியருளியவர் யாவர்? சேக்கிழார் பெருமான்.
08
207683. சைவத் திருநூல்களை எவ்விதம் ஓதுதல் வேண்டும்?
அன்புடன் கண்ணில் ஒற்றி, சிவசிந்தனையுடன் நியமமாக ஓதுதல் வேண்டும்.
207684. சைவத் திருநூல்களை அன்புடன் ஓதுபவர் அடையும் நன்மைகள் சில கூறுக.
அறியாமையாகிய இருள் நீங்கப் பெறுவர்; உள்ளத்தூய்மை பெறுவர்; நல் முயற்சிகளிற் சித்தி பெறுவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக