வியாழன், 5 மே, 2022

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள்

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

வேலை வணங்குவதே வேலை

செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும். கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

அறநெறி அறிவுநொடி

1. ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன? சதாநந்தர் 2. லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனைவியர் பெயர் என்ன? முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்? நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4. சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது? விதேஹ நாட்டின் இளவரசி, தலைநகர் மிதிலை 5. ராவணனுடைய தாய் தந்தையர் யார்? மகோதரன், மால்யவான் 6. ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன? ரிக்ஷராஜன் 7. வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன? மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான். 8. ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது? 9. சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்? 10. வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன? 11. வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? 12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது? 13. தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்? 14. ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை? 15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன? 16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்? 17. ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்? 18. வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன? 19. தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன? 20. ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

நற்செய்கை நிறைந்த "சுபகிருது" புத்தாண்டு பிறப்பு

தமிழ் வருடங்கள் 60ல் சுபகிருது 36வது ஆண்டாக அமைந்துள்ளது. சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் மங்கலகரமான 'சுபகிருது புத்தாண்டு, 14.4.22 வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீடான மீன ராசியில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தரப்போகிறது

பிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம்

பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.

கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருபவர் கணவர்

பரதநாட்டியக் கலைஞராக தன் திறமையை காட்டிவரும் திருமதி தர்ஷி சுகன் ஆன்மீகம், கலை, கலாசாரம் என பல் வேறு துறைகளில் அரும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரை அண்மையில் செந்துாரம் இதழுக்கு பேட்டி கண்ட போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு, உங்களைப் பற்றி கூறுங்களேன்......... நான் தென்கைலை எனப் பெயர் பெற்ற திருகோணமலை நகரில் பிரபல மருத்துவரான Dr. நடராஜகுரு ரவிச்சந்திரனுக்கும் திருமதி கருணைமணிக்கும் (மலர்) இரண்டு சகோதரர்களுடன் கனிஷ்ட புதல்வியாகப் பிறந்தேன். எனது மூத்த சகோதரர் துஷ்யந்தன். இளைய சகோதரர் ஹ்ரித்திக்ரோஷன். கல்வியில் கரைகண்ட விபரங்கள் பற்றி கூறுங்களேன்.... எனது ஆரம்பக் கல்வியினை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் (St. Mary's College) ஆரம்பித்து திருமலை புனித பிரான்சிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் (St. Francis Xavier TMV) நிறைவு செய்தேன். நடனத்தில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? சிறுவயதில் இருந்தே எனக்கு நடனம் பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது தந்தையாரும் சிறு வயதில் நடனம் கற்றுப் பின் மருத்துவக் கல்வி காரணமாகத் தொடரமுடியாமல் கைவிட்டார். அதனால் அவரது கனவும் என்னை நடனக்கலையில் சிறந்த தேர்ச்சி பெற்றவளாக்க வேண்டும் என்பதே. அவரது கனவுடன் எனது ஆர்வத்தினையும் புரிந்து கொண்ட எனது தந்தையார் நான் பரதநாட்டியக் கலையைப் பயில்வதற்குப் பலவழிகளிலும் ஊக்கமளித்தார். அதற்கு வித்திடும் வகையில் எனது ஆரம்ப நடனக்கல்வியை நடன ஆசிரியை திருமதி சசிகலா பிரபாகரனிடம் மிகவும் ஆரவத்துடன் பயில ஆரம்பித்தேன். அத்துடன் எனது பாடசாலை ஆசிரியை திருமதி கலைச்செல்வி ரவிச்சந்திரனிடமும் நடனம் பயின்றேன். பாடசாலையில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றிப் பரிசில்களையும் பாராட்டினையும் பெற்றேன். அதன் பிறகு எனது தந்தையாரது தொழில் இடமாற்றம் காரணமாக தலைநகராம் கொழும்பிற்குக் குடிபெயர்ந்தோம். அங்கு கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா நாட்டியப்பள்ளியில் நடன ஆசிரியை திருமதி சுமதியிடம் நடனக் கல்வியைத் தொடர்ந்தேன். அதே போன்று இசைக் கலையையும் முறையாகப் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை சங்கீத சபை நிறுவனரும் அதன் அதிபருமான திருமதி கௌரீஸ்வரி ராஜப்பனிடம் சங்கீதம் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி பரமேஸ்வரி மோகனவேலிடம் வயலின் கலையையும், திருமதி ராதிகா மற்றும் திருமதி அனுஷா மொறாயஸிடம் வீணைக் கலையையும் முறையாகப் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி துஷ்யந்தி பிரகலாதனிடமும் நடனம் பயிலத் தொடங்கினேன். அவர் எனது திறமையினைப் பட்டைதீட்டி நடனக் கலையில் தேர்ச்சி பெறப் பெரிதும் பாடுபட்டார். அருங்கலையைப் போதித்து அனுபவங்களைப் பகிர்ந்து ஆயகலைகள் கற்பித்து வாழ்விற்கு வழிகாட்டும் வாழ்வியல் புத்தகமே இவர் எனது தந்தையையும் தாயையும் போன்றும் ஒரு உற்ற நண்பனைப் போன்றும் என்னை வழி நடத்திய ஆசிரியர் என்றே கூறலாம். இவரது ஊக்கத்தின் காரணமாகவும் எனது தந்தையாரின் முயற்சியினாலும் என்னுடைய மேற்படிப்பினை இந்தியாவில் சர்வதேசப் புகழ் பெற்ற திருச்சி மாநகரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியக் கல்வியைப் பயின்று முதல் வகுப்பில் தேறி பரதநாட்டியத்தில் இளங்கலைப் (BFA) பட்டம் பெற்றேன். இதற்குப் பலவழிகளிலும் எனது தந்தையுடன் இணைந்து எனது கணவர் சுகந்தன் உதவி புரிந்தார். எனக்கு அமைந்த கணவர் மிகவும் சிறந்தவர் என்பதுடன் அவர் ஒரு ஆன்மீகவாதியுமாவார். நான் எனது இலட்சியத்தினை அடைய அரும்பாடு பட்டவர்களில் அவரும் ஒருவராவார். இன்றுவரை எனது கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றார். கோணேஸ்வரா இசை நாட்டியப்பள்ளியை நிறுவிப் பல மாணவர்களுக்கு இசை, நடன வகுப்புகளை நடாத்தி வருகின்றேன். அத்துடன் ஹேகித்தை சபரிகிரீஷ ஐயப்பன் தேவஸ்தானத்தில் அறநெறி ஆசிரியையாகவும் வத்தளை ஹூணுப்பிட்டி அருண் மாணிக்கவாசகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றேன். இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிச் சான்றிதழ்களையும், வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட நடனம், இசை மற்றும் வீணைப் பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளேன். கே. ஈஸ்வரலிங்கம் எனது மகள்மார் ரம்யவர்ஷினி , சதுர்ஷா.

திருவருளும் குருவருளும் அருளும் விரதம்

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம். வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்து வந்தால் அந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வியாழக் கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்து வருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார். நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.

அறநெறி அறிவு நொடி

19016) திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலயில் ஏற்றப்படுவது என்ன தீபம் ? அணையா தீபம் 19017) இந்த அணையா தீபத்தை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள்? பரணிதீபம் 19018) ஆறாதாரங்களில் திருவண்ணாமலையில் ஆதாரமாகத் திகழ்வது எது? மணிபூரகத் தலம் 19019) திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் என்ன? பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் 19020) “கார்த்திகை அகல் தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு எது? 1997 டிசம்பர் 12 19021) அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் எது? திருவண்ணாமலை 19022) இதனால் திருவண்ணாமலைக்கு ஏற்பட்ட பெயர் என்ன? கிளி கோபுரம் 19023) கார்த்திகை நட்சத்திரம் எந்தெந்த தெய்வங்களுக்கு உரியது? சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன் 19024) அருணாசலம் என்பதன் பொருள் என்ன? அருணம்+ அசலம்- சிவந்த மலை19025) சிவாம்சமாகப் போற்றப்படும் ராம பக்தர் யார்? அனுமன் 19026) நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகத்தில் 19027) தர்ம தேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை 19028) அறவிடை என்பதன் பொருள் என்ன? (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 19029) மனிதப் பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் எவை? அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) 19030) சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108 (நூற்றி எட்டு) 19031) சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் யார்? காரைக்காலம்மையார் 19032) "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் யார்? அப்பர் (திருநாவுக்கரசர்) 19033) நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்? ஆணவம் 19034) ஆணவம் அடங்கினால் என்ன நடக்கும்? ஆனந்தம் உண்டாகும் 19035) மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்.... மகாகவி காளிதாசர் 19036) பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் எது? குற்றாலம் 19037) நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் எது? சங்கார தாண்டவம் 19038) இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? வெள்ளியம்பலம் 19039) வெள்ளியம்பலம் எங்கு உள்ளது? மதுரையில் 19040) மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் எது? பிரதோஷ நடனம் 19041) பிரதோஷ நடனத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? புஜங்கலளிதம் 19042) நடராஜருக்குரிய விரத நாட்கள் எவை? திருவாதிரை, கார்த்திகை சோமவாரம் 19043) நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் என்ன? களி. 19044) திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் யார்? தாயுமான சுவாமி 19045) பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் எது? காளஹஸ்தி 19046) வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர் யார்? பிருங்கி 19047) திருமூலர் எழுதிய திருமந்திரம் எத்தனையாம் திருமுறை? பத்தாம் திருமுறை 19048) திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்... திருக்கோலக்கா 19049) திருக்கோலக்கா திருத்தலத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? தாளமுடையார் கோவில் 19050) தாளமுடையார் கோவில் எங்கு உள்ளது? சீர்காழிக்கு அருகில் உள்ளது 19051) விபூதி என்பதன் நேரடியான பொருள் என்ன? மேலான செல்வம் 19052) சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் எது கஞ்சனூர் 19053) ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? 12 (பன்னிரெண்டு) 19054) மதுரையில் உள்ள சித்தரின் பெயர் என்ன? சுந்தரானந்தர் 19055) திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் எது? ஆச்சாள்புரம் (திருப்பெருமண நல்லூர்) 19056) நாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி யார்? திலகவதி 19057) சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார் யார்? சேரமான் பெருமாள் நாயனார் 19058) “அப்பா! நான் வேண்டுவன கேட்டருள்புரிய வேண்டும்’ என்ற அருளாளர் யார்? வள்ளலார் 19059) மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை யார்? மங்கையர்க்கரசியார் 19060) மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்தன பாண்டியன் 19061) திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறியவர் யார்? பல்லவ மன்னன் 19062) இந்த பல்லவ மன்னனின் பெயர் என்ன? மகேந்திர பல்லவன் 19063) சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் எது? தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்) 19064) சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? 8 (எட்டு) 19065) மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி 19066) மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம் 19067) வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும் விதம் எது? நமசிவாய 19068) முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம 19069) சிவசின்னங்களாக போற்றப்படுபவை எவை? திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம) 19070) சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம் 19071) பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் எது? இராமேஸ்வரம் 19072) சிவ வடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் எது? தட்சிணாமூர்த்தி 19073) கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? 12 (பன்னிரெண்டு) 19074) குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் எது? குற்றாலம் குற்றாலநாதர் கோயில் 19075) ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் எது? வில்வமரம் 19076) அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரியின் பெயர் என்ன? மானசரோவர் 19077)திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 81 (எண்பத்தி ஒன்று) 19078) பதிகம் என்பதன் பொருள் என்ன? பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு 19079) சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் எது? சிவஞானபோதம் 19080) உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கையின் பெயர் என்ன? டமருகம் அல்லது துடி 19081) அனுபூதி என்பதன் பொருள் என்ன? இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 19082) உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை யார்? மதுரை மீனாட்சி 19083) மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் யார்? மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை 19084) மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன? தடாதகைப் பிராட்டி 19085) பழங்காலத்தில் மதுரை .எவ்வாறு அழைக்கப்பட்டது. நான்மாடக்கூடல், ஆலவாய் 19086) மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் எது? கடம்ப மரம் 19087) மீனாட்சி எதுவாக இருப்பதாக ஐதீகம்? கடம்பவனக் குயில் 19088) மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள் யார்? திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

குரு பகவானின் அருளைப் பெற உகந்த வியாழக்கிழமை விரதம்

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம். இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம். வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ூலஸ்தானம் எனும் கருவறையின் பரம ரகசியம்

உடலுக்கு பிரதானமானது எது? தலை உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு எது பிரதானமாக இருக்க வேண்டும்? கருவறை கருவறையை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் கருவறை எப்படி இருக்க வேண்டும்? நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். ஆலய அமைப்பு எப்படி இருக்கும்? மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. அதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. முன்னோர்கள் கருவறையை எப்படி அமைத்தனர்? பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக இதன் பின்னணியில் என்ன அடங்கியுள்ளன? சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் எவ்வாறு இருக்கும்படி அமைத்தனர்? வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கினர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் எவ்வகையானவை? ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் என்ன செய்யும்? கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். அங்கிருந்து அந்த அலைகள் என்ன செய்யும்? ஆலயம் முழுக்க விரவி பரவும். இவ்வாறு இருப்பதால் என்ன நன்மை? நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைக்கும்போது என்ன செய்தார்கள்? கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது எப்படி இருக்கும்? வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம்? ஆறு அந்த ஆறு வகை கருவறை அமைப்புகளையும் தருக அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812