திங்கள், 18 பிப்ரவரி, 2013

முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தரும் பித்ருதேவதா (மக) நட்சத்திரம்

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் kகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபீட்சமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன் பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுப நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம். கும்பகோணம் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகி, உலகமே அழியும் தருணம் ஏற்பட இருந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த பிரம்மன், சிவபெருமானிடம் முறையிட, அதற்கு ஈசன் “நீ எதற்கும் கலங்காதே. பிரளயம் ஏற்பட்டாலும் மீண்டும் அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்” என்று கூறி ஒரு கும்பத்தை கொடுத்து, “இதில் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளின் மூல காரணமாக இருக்கும் வித்துக்களை இதனுள் வைத்து விடு. அத்துடன் புராணங்களையும், மந்திரங்களையும் அதனுடன் வைத்து பூஜை செய். பிறகு அந்த கும்பத்தை மேரு மலையில் வைத்து விடு. அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பிரம்ம தேவரிடம் சிவபெருமான். சிவபெருமானின் உத்தரவின்படி செய்தார் பிரம்ம தேவர். சில நாட்களுக்கு பிறகு மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது. மேருமலையில் பிரம்மன் பூஜித்து வைத்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் சிவபெருமான் ஒரு வேடன் உருவத்தில் வந்து, அந்த கும்பத்தை நோக்கி அம்பு ஏய்த போது, கும்பத்தின் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்தது. அந்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்த இடமும், வேடன் உருவத்தில் சிவபெருமான் கும்பத்தின் ஒரு மூக்கு போன்ற கோணப்பகுதி உடைத்த இடமும் ஒரே இடம் என்பதால் அந்த இடத்திற்கு “கும்பகோணம்” என்று பெயர் உண்டானது. gooனீliஜீலீ சீatriசீony கும்பம் உடைந்த போது அதில் இருந்து அமுதமும் வெளியேறியது. அந்த அமுதம் நனைத்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதில் சர்வேஸ்வரர் ஐக்கியமானார். இதனால் அந்த சிவலிங்கம், “ஆதி கும்பேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தின் மூக்கு உடைந்த இடம் என்பதால் கும்பக்கோணம். “குடமூக்கு” என்ற பெயரும் பெற்ற ஸ்தலம் ஆகும். மாசி மகம் அன்று கும்பகோணத்தில் விசேடமாக கொண்டாடுவார்கள். அதேபோல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. மாசி மகத்திற்கு சக்தி அதிகம் மாசி மகத்திற்கு சக்தி அதிகம் என்பதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே புண்ணிய நதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, காவேரி, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் உணர்ந்தார்கள். ஒருவருடைய கஷ்டத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் கேட்பவர்களுக்கும் அந்த கஷ்டம் வரும். அதனால்தான் நம் முனோர்கள் கூறுவார்கள், “ஒருவரை பார்த்து “ஐயோ பாவம்” என்றால், சொல்பவர்களுக்கு ஈரேழு ஜென்ம பாவங்கள் தேடி வரும். அந்த அளவில் சக்தி படைத்தது துஷ்ட தேவதை. துஷ்ட தேவதைதான் கஷ்டத்தை தருவது. இந்த துஷ்ட தேவதை மனிதர்களிடம் மட்டும் தன் வேலையை காட்டுவதில்லை. பலருடைய பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதிகளிடத்திலும் தன் வேலையை காட்டியது. ஆம், பலருடைய கர்மாக்களை புண்ணிய நதிகள் நீக்கியதால், நதி தேவதைகளின் உடல் கருமையாக மாறி கஷ்டத்திற்கு ஆளானார்கள். இந்த நிலை தீர என்ன செய்ய வேண்டும்? என்று சிவபெருமானிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன், “நீங்கள் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கும்பகோணம் மகா மகக்குளத்தில் நீராடினால், உங்கள் பாவங்கள் நீங்கும்.” என்றார். சர்வேஸ்வரன் கூறியது போல், மகாமககுளத்தில் நீராடி தங்களுடைய பாவத்தை போக்கிக்கொண்டார்கள் அந்த புண்ணிய நதி தேவதைகள். கிhakthi ஜிlanலீt பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான் “எந்த புண்ணிய நதிக்கரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்” என்கிறது சாஸ்தரிம். புண்ணிய நதியில் நீராடினால் கர்மபயன் நீங்குமா? என்ற சந்தேகத்தோடு நீராடக்கூடாது. இதற்கு ஒரு கதை இருக்கிறது. ஒரு முனிவர் இருந்தார். அவர் பல வருடங்களாக மக்களுக்கு உபதேசங்கள் செய்து வந்தார். ஒருநாள் கருடன் பறக்கும்போது தன் சிறகு இழந்து, அந்த முனிவர் காலில் வந்து விழுந்தது. இதை கண்ட முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அந்த கருடன் மேல் தெளித்தார். உடனே அது வலிமை பெற்று பறந்து சென்றது. இதை கண்ட பக்தர்கள், “சாமி உங்களிடம்தான் நாங்கள் தினமும் உபதேசம் கேட்கிறோம். எங்களுக்கும் உடல் உபாதை வந்த போது, நீங்களே எங்களை குணப்படுத்தி இருக்கலாமே” என்றார்கள். அதற்கு அந்த முனிவர், அந்த கருடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் சரண் அடைந்தது. நான் அதை குணப்படுத்துவேனா அல்லது மாட்டேனா? என்ற சந்தேகம் அந்த கருடனுக்கு இல்லை. அதனால் அந்த கருடன் குணம் அடைந்தது. ஆனால் என் மேல் உங்களுக்கு சந்தேகம் இருந்தது. எனக்கு சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் அதிகமாகவே இருப்பதால், நன்மைகள் கிடைக்க தாமதமாகிறது. குழம்பிய மனம் குப்பைக்கு சமமானது. நம்பிக்கையோடு இருந்தால்தான் எல்லாமே நன்மையாக முடியும்” என்றார் அந்த மகான். ஆம்..... அதுபோல மகாமக குளத்தில் நீராடினால் கர்மவினை நீங்குமா? என்ற சந்தேகத்துடன் குளித்தால் நீங்காது. நீங்கும் சுபிட்சம் ஏற்படும் என்று ஆணித்தரமாக நம்பவேண்டும். அப்படி நம்பினால்தான் நன்மைகள் நிழல் போல் தொடர்ந்து வரும். தாட்சாயினி அம்மன் தக்ஷன் தனக்கு சக்திதேவியே மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பி வரம் பெற்றார். அதன்படி சிவனின் கட்டளையை ஏற்று ஈஸ்வரி, இமயமலைச் சாரலில் காளிங்க நதியில் ஒரு வலம்புரிச் சங்காக மாறி தவம் இருந்தார். மாசி மாதம் பெளர்ணமி அன்று, அந்த பக்கமாக வந்த தக்ஷன் கண்ணில் வெண்மையான வலம்புரி சங்கு தெரிந்தது. அந்த சங்கை தன் இரு கரங்களால் எடுத்தவுடன் அந்த வலம்புரி சங்கு குழந்தையாக மாறியது. அந்த பெண் குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயர் வைத்தான் தக்ஷன். சிவபெருமானுக்கும் தக்ஷனுக்கும் ஏற்பட்ட தகராறில் தாட்சாயினி தீக்குள் விழுந்தாள். ஆனாலும் இறைவியின் உடல் உறுப்புகள் விழுந்த பகுதிகள் எல்லாம் சக்தி பீடங்களாக உருவெடுத்து உலகம் முழுவதும் தோன்றி உலக நாயகியாக பக்தர்களை காக்கிறார். மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீ விஷ்ணு பகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...