செவ்வாய், 7 மே, 2013

சுக்கிரன்

கே.ஈஸ்வரலிங்கம் சுக்கிரன் 10011) மனைவியை தரும் உரிமை பெற்றவர் யார்? சுக்கிரன் 10012) மனைவியை தரும் உரிமை உடையவர் என்பதால் சுக்கிரனை எவ்வாறு அழைப்பர்? களத்திரகாரகர் 10013) களத்திரகாரகர் என்பதன் பொருள் என்ன? மனைவியை தரும் உரிமை உடையவர் 10014) அழகான வீட்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவர் யார்? சுக்கிரன் 10015) ஒருவன் பிறந்தான், வாழ்ந்தான் என்றில்லாமல் அவன் பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்? இசைப்பட வாழ்தல் 10016) அந்த புகழை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? சுக்கிரனிடம் 10017) சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குபவர் யார்? சுக்கிரன் 10018) சுக்கிரனுக்குரிய அதிதேவதை யார்? மகாலட்சுமி 10019) ஆடம்பரப் பொருட்கள், மலர்கள், சந்தனம், கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகிக்க வைப்பவர் யார்? சுக்கிரன் 10020) ஸ்ப்ரிங் கட்டில், வெல்வெட், மெத்தை, குஷன், கதிரை போன்ற சொகுசுப் பொருட்களை வாங்க காரணமாக இருப்பவர் யார்? சுக்கிரன் 10021) வாகனம், கப்பல், வியாபாரம், நவரத்தின வியாபாரம், கடல் வழி விமான பயணங்களை அனுபவிக்க செய்பவர் யார்? சுக்கிரன் 10022) நகைச்சுவை உணர்வுடன் விகட வினோதமாக பேச வைப்பவர் யார்? சுக்கிரன் 10023) தலைமைப் பதவி கிடைக்கச் செய்பவர் யார்? சுக்கிரன் 10024) நண்பர்களுடன் நல்லுறவு கொள்ளச் செய்பவர் யார்? சுக்கிரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812