திங்கள், 29 ஜூலை, 2013

கதிர்காமம்

கே.ஈஸ்வரலிங்கம் (10200) முருக வழிபாட்டுக்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மையாலும் புகழ் பெற்றுத் திகழும் ஆலயம் எது? கதிர்காமம் (10201) கதிர்காமத்துக்கு பல நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள பெயர்கள் எவை? ஏமகூடம், பூலோக, கந்தபுரி, காரிகாப்பு, வரபுரி, பஞ்சமூர்த்தி வாசம், விஸ்வகானனம், சகல சித்திரகரம், அகத்தீயப்பிரியம், பிரமசித்தி, அவ்வியர்த்த மூர்த்தம், சித்தகேத்திரம், கதிரை, ஜோதிஷ்காமம். (10202) கதிர்காமக் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள திருநாமங்கள் எவை? கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக் கடவுள், ஆறுமுகப் பெருமான், பரஞ்சோதிப் பெருமான், சிதாகாயநாதன், அவ்வியர்த்த மூர்த்தி. (10203) முருகவேள் சூரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கோடு எழுந்தருளியபொழுது எந்த இடத்தை அடைந்தார்? கதிர்காமத்தை (10204) அவர் பாசறை அமைத்து வீற்றிருந்தது எந்த இடத்தில்? மாணிக்க கங்கை அருகில் (10205) கதிர்காம, மாணிக்க கங்கை அருகில் பாசறை அமைத்து வீற்றிருந்ததால் அவ்விடம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது? ஏமகூடம் (10206) வள்ளி நாயகியாரைக் கண்டு காதலித்து மண முடித்த இடம் எது? கதிர்காமம் (10207) முருகப் பெருமான் முதலில் யாரை வணங்கினார்? தெய்வானை (10208) முருகன் வள்ளியை மணமுடித்து எங்கு என்று கைலாச புராணம் கூறுகின்றது? திருத்தணி மலைக்கருகிலுள்ள வள்ளி மலையில் (10209) முருகன் தாம் விரும்பும் தலமாக எதனை வள்ளி, தெய்வானையிடம் கூறினார்? கதிர்காமத்தை (10210) கதிரைமலையிலுள்ள ஏனைய மலைகள் எவை? பிள்ளையார் மலை, வீரவாகுமலை, தெய்வயானையம்மன் மலை. (10211) இந்த மலைகளின் நடுவே முச்சுடர்களின் பேரொளியாய் விளங்குவது எவை? சோமன், சூரியன், அக்கினி (10212) கதிர்காமக் கோயிலில் வருடந்தோறும் எத்தனை திருவிழாக்கள் நடைபெறும்? நான்கு (10213) கதிர்காமத்தில் முதற்றிருவிழா எப்பொழுது நடைபெறும்? சித்திரை வருடப் பிறப்புத் தினத்தன்று (10214) இரண்டாவது திருவிழா எப்பொழுது நடைபெறும்? ஆனி அல்லது ஆடியில் (10215) ஆனி அல்லது ஆடியில் நடைபெறுவது என்ன திருவிழா? பந்தற்கால் நடும் திருவிழா (10216) கந்தசுவாமியார் வள்ளி நாச்சியாரை மணமுடித்தற்கு வேண்டிய பந்தல் அமைப்பதற்கு நடைபெறும் திருவிழா எது? கன்னிக்கால் நடும் திருவிழா (10217) கன்னிக்கால் நடும் திருவிழா எப்போது நடைபெறும்? ஆடி அல்லது ஆவணியில் நடைபெறவிருக்கும் திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன். (10218) கதிர்காமத்தில் நான்காவதாக நடைபெறும் திருவிழா எது? திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812