திங்கள், 15 ஜூலை, 2013
அமெரிக்க ஐலாந்திலுள்ள பிரமாண்டமான ஆலயம்
அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாகாணத்தில் ராக்ஸ் ஐலாந்து பகுதியில் உள்ள பிரமாண்டமான ஆலயம் குவார்டு சிட்டி இந்துக் கோயிலாகும். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் உள்ள லோகநாதன் குமிட்யாலா என்பவரது இல்லத்தில் இந்துக்கள் சிலர் ஒன்று கூடி இப் பகுதியில் இந்துக் கோயில் அமைக்க தீர்மானித்தனர்.
2002 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் இந்துக் கோயில்கள் அமைக்கும் பணியில் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் ஈடுபட துவங்கினர். இந்த இந்து மதக் கூட்டங்களின் விளைவாக சுமார் 8000 சதுரடி நிலப்பரப்பில் வழிபாட்டுத்தலம் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான இடம் நவீனமயமாக உருவாக்கப் பட்டது.
பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக இக்கோயிலின் பணிகள் உருப்பெறத் துவங்கின. இப் பகுதியில் வாழ்ந்த இந்துக்களின் பெருத்த ஆதரவுடன் நிலைத்த கட்டிடமாக இக் கோயில் வடிவமைக்கப்பட்டது. இதற்காக இந்துக்கள் பலர் பல வழிகளிலும் பொருள் உதவி செய்தனர். சுமார் 7294 சதுரடி பரப்பளவில் பாலாஜி, ராதா கிருஷ்ணன், சீதா ராமா, நரசிம்மா, சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் போன்ற தெய்வங்களையும் உள்ளடக்கிய பிரமாண்ட ஆலயமாக குவார்ட்டு சிட்டி இந்துக் கோயில் உருவானது. 2007 ம் ஆண்டு ஏப்ரல் 27 முதல் 29 ஆம் திகதி வரை கொண்டாட்டப்பட்ட நூதன உற்சவ மூர்த்தி சம்ப்ரோஷன விழாவின் போது ஏப்ரல் 28 ஆம் திகதி இக்கோயிலின் மிகப் பெரிய அளவில் இக்கோயிலின் திறப்பு விழா நடத்தப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களின் நன்கொடைகளைக் கொண்டு இக்கோவில் வளர்ச்சி அடைந்தது. இக்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள், நிதி திரட்டும் பணிகள், வடிவமைத்தல் போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இல்லினோய்ஸ் மாகாணத்தில் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக