திங்கள், 27 ஜனவரி, 2014

கே. ஈஸ்வரலிங்கம்

10596) வழிபாட்டில் ஏன் இறைவ னுக்குத் திருவமுது வைக்கின்றோம்? தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்துக்கொண்டிருகின்றப் பெருமானுக்கு நம்மால் கைமாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர் யான் இதற்கு இலன் ஓர் கைமாறே என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் குறள் வழித் தெளிவுப்படு த்துகின்றார். வள்ளுவ பெருந்தகை. இவ்வாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்துக்கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவு பொருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடையப் பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம். 10597) விநாயகப் பெருமானின் கையில் இருக்கும் மோதகம் எதனைக் குறிக்கின்றது? இறைவன் நமக்குப் போகங்களைத் தருபவர், என்பதனைக் குறிக்கின்றது. இக்கருத்தினை, பொன்னும் மெய்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்பானைப் எனும் சுந்தரரின் பாடல் வரிகளோடு ஒப்பு நோக்கி மகிழலாம். 10598) திசைத் தெய்வங்களை வழிபடுவதனால் ஏற்படும் நன்மைகள் யாது? திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும், திசைத் தெய்வங்களும், அந்த- அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டு விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள், அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால், எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

கே. ஈஸ்வரலிங்கம்

10528) பொறியியல் அறிந்த வானர வீரன் யார்? நளன் 10529) விஸ்வகர்மாவின் மகன் யார்? நளன் 10530) கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன் யார்? நளன் 10531) பிரம்மாவின் மனதில் பிறந்தவர் யார்? நாரதர் 10532) கலக முனிவர் என அழைக்கப்படுபவர் யார்? நாரதர் 10533) கும்ப கர்ணனின் மகன் யார்? நிகும்பன 10534) வானர வீரன் நளனின் நண்பன் யார்? நீலன் 10535) வானர சேனாதிபதி? நீலன் 10536) அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் யார்? நீலன் 10537) விஷ்ணுவின் அவதாரம் யார்? பரசுராமர் 10538) ஜமத்கனியின் மகன் யார்? பரசுராமர் 10539) பிராயாகை அருகே ஆச்சிரமம் அமைத்திருந்த முனிவர் யார்? பரத்வாஜா 10540) கைகேயின் மகன் யார்? பரதன் 10541) ராமனின் தம்பி யார்? பரதன் 10542) கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி யார்? மந்தரை 10543) மந்தரையை வேறு எவ்வாறு அழைப்பர்? கூனி 10544) தேவலோக சிற்பி யார்? மயன் 10545) மயனின் மகள் யார்? மண்டோதரி 10546) ராவணனின் பட்டத்தரசி யார்? மண்டோதர 10547) இந்திரஜித்தின் தாய் யார்? மண்டோதரி 10548) தாடகையின் மகன்கள் யார்? மாரீசன், சுபாகு 10549) ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள் யார்? மாரீசன், சுபாகு 10550) மாய மானாக வந்தன் யார்? மாரீசன்

புதன், 1 ஜனவரி, 2014

சோம்நாத்பூர் கோயில்

ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில்! சோம்நாத்பூர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோம்நாத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக விஷ்ணு பகவான் ‘பிரசன்ன சென்ன கேசவப் பெருமாள்’ என்ற பெயரில் வீற்றிருக்கிறார். ‘சென்ன’ என்றால் கன்னடத்தில் அழகு என்று பொருள். இது ஹொய்சாள மன்னன் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கி.பி. 1268 இல் கட்டப்பட்டது. அதன் காரணமாகவே இக்கோயில் உள்ள ஊர் அவர் பெயரால் சோம்நாத்பூர் என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவில் காணப்படும் கோயில்கள் பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை சார்ந்தவை. இதில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் கோயில்கள் திராவிட வகையை சேர்ந்தவை. அதேவேளையில் வடக்கே காணப்படுவது நாகரா வகை என்றும், இரண்டும் கலந்தது வேசரா வகை எனவும் அறியப்படுகிறது. அதாவது கர்ப்பகிரகத்தின் மேல் இருக்கும் விமானம், கோயிலின் நில வரைப்படம், அமைப்பு முதலியவை கொண்டு எந்த வகை என்று சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால் சோம்நாத்பூர் கோயில் வேசரா வகையை சார்ந்தது ஆகும். சோம்நாத்பூர் கோயிலின் அமைப்பு 16 முனை கொண்ட நட்சத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே கேசவா, ஜனார்த்தனா, வேணும்கோபால் என்று மூன்று கர்ப்பகிரகங்கள் உள்ளன. இதில் ஜனார்த்தனா மற்றும் வேணும்கோபால் சிலை மட்டும் தான் ஒரிஜினல் சிலைகளாம். நடுவில் இருந்த கேசவப் பெருமாள் சிலை பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறதாம். தற்போது இருப்பது டுப்ளிகேட் சிலை என்று சொல்லப்படுகிறது. பிரமிட் போன்ற தோற்றம் அதோடு இந்த மூன்று சன்னதிகளின் வாயில்களிலும் உள்ளிருக்கும் விக்ரகத்தின் மாதிரி வடிவம் சிலை வடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் கர்ப்பகிரகத்தின் மேலே கவிழ்த்து வைத்த மணி போல் கோபுரம் காட்சியளிப்பதோடு கீழிலிருந்து மேலே பார்க்கும்போது பிரமிட் மாதிரி தோற்றமளிக்கிறது. சோழர்கள் தோற்றுப்போன கட்டிடக் கலை கேசவர் கோயிலின் சிற்பங்களில் இராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை பார்க்கலாம். இக்கோயிலின் தெற்குச் சுவரில் இராமாயணமும், வடக்கு சுவரில் மஹாபாரத சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்றதொரு முயற்சியில் சோழர்கள் ஈடுபட்டதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு கோயிலை அவர்களால் வடிக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. செக்கு மரத்தில் இழைக்கப்பட்ட தூண்கள்! இங்குள்ள தூண்களை செக்கு மரத்தின் நடுவில் வைத்து மாடுகளைக் கொண்டு பொலிஷ் செய்யப்பட்டதால் அவை பளபளப்புடன் காணப்படுகின்றன. இதை தெரிந்துகொள்ளும்போது லேத் மிஷின் போன்ற உபகரணங்கள் இல்லாத காலத்திலேயே எவ்வளவு அற்புதமாக கோயிலை வடிவமைத்திருக்கிறார்கள் என்ற பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பிரிட்டிஷ்காரர்கள் தூக்கிக்கொண்டு போன சிலைகள்! சோம்நாத்பூர் கோயிலின் சிறப்பம்சம் இங்கே ஒரு சிலையை போல மற்ற சிலையை பார்க்க முடியாதபடி எல்லாமே தனித்துவமாக இருக்கும். இந்த கோயிலில் மொத்தம் 64 மண்டபங்கள் உள்ளன. இம்மண்டபங்களில் இருந்த சிற்பங்களை எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்களாம். மேலும் கோயில் மேற்கூரையில் செய்யப்பட்டி ருக்கும் அழகிய கலை வேலைப்பாடுகளை கீழிருந்து பார்க்கும்போது தாமரை பூவிற்கு நடுவில் வாழைப்பூ இருப்பது போல தோற்றமளிக்கும். விஷ்ணுவும், பிள்ளையாரும் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் விஷ்ணு மற்றும் பிள்ளையார் சிலைகள் அனைவரையும் கவரக்கூடியவை இதில் அனந்தா எனும் பாம்பின் மடியில் விஷ்ணு பகவான் லலித்த சயனத்தில் வீற்றிருப்பது போல் உள்ளது. அதேவேளையில் இடது பக்கம் நாட்டியமாடும், நிருத்திய கணபதி சிலை, இந்த இரண்டு சிலைகளும் ஆபரணங்கள், குஞ்சம், மகுடம் கொண்டு நன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. விஷ்ணுவின் தசாவதாரம் சோம்நாத்பூர் கோயிலின் சிற்பங்களில் இராமாயண, மகாபாரத கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று பார்த்தோம். அதேபோல் கீழே யானைகளும், குதிரைகளும் ஊர்வலம் வர அதற்கு மேற்புறத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சோம்நாத்பூர் கோயில் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதோடு கோயிலில் நுழைவதற்கும், கெமராவுக்கும் கட்டணம் உண்டு. மேலும் கோயிலுக்கு அருகே ஒரே ஒரு சிறிய தேநீர்க்கடை மட்டுமே இருப்பதால் சாப்பிட ஸ்ரீரங்கப்பட்டணா அல்லது மண்டியா செல்ல வேண்டும். சோம்நாத்பூர் கோயில் மைசூரிலிருந்து 35 கி. மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 137 கி. மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. நீங்கள் பெங்களூரிலிருந்து செல்பவராக இருந்தால் மண்டியா வழியாக சென்று அங்கிருந்து பன்னூர் வழியாக சோம்நாத்பூர் கோயிலை அடைய வேண்டும். இந்த வழியில் செல்வது சிறந்தது என்பதுடன் கோயிலை அடைய 3 மணிநேரம் ஆகும். பஸ் மூலமாகவும் சோம்நாத்பூர் கோயிலுக்கு செல்ல முடியும். இதற்கு பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் கர்நாடக பஸ்ஸில் ஏறினால். மண்டியாவில் இறங்கிக்கொள்ளலாம். அதன் பிறகு அங்கிருந்து பன்னூருக்கு நிறைய பஸ்கள் இருந்தாலும் பன்னூரிலிருந்து சோம்நாத்பூர் செல்ல குறைந்த அளவிலேயே பஸ் உள்ளன.

இராமாயணம்

கே. ஈஸ்வரலிங்கம் (இராமாயணம்) 10505) தசரதரின் மந்திரி யார்? சுமந்திரா 10506) தசரதரின் தேரோட்டிய யார்? சுமந்திரா 10507) கிஷ்கிந்தையின் மன்னன் யார்? சுக்ரீவன் 10508) வாலியின் தம்பி யார்? சுக்ரீவன். 10509) சுக்ரீவன் யாரின் அருளால் பிறந்தவன்? சூரிய பகவானின் 10510) வாலியின் மாமனார் யார்? சுஷேணன் 10511) வானர மருத்துவன் யார்? சுஷேணன் 10512) மேற்குத் திசையில் சீதையை தேடச் சென்றவன் யார்? சுஷேணன் 10513) இராவணனின் தங்கை யார்? சூர்ப்பணகை 10514) கணவனை இழந்தவள் யார்? சூர்ப்பணகை 10515) ராமனின் தந்தை யார்? தசரதன் 10516) சுக்ரீவனின் சித்தப்பா யார்? ததிமுகன் 10517) மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர் யார்? ததிமுகம் 10518) காட்டில் வசித்த அரக்கி யார்? தாடகை 10519) ராமனால் கொல்லப்பட்டவள் யார்? தாடகை 10520) வாலியின் மனைவி யார்? தாரை 10521) அங்கதனின் தாய் யார்? தாரை 10522) அறிவில் சிறந்த வானர ராணி யார்? தாரை 10523) இராவணனின் இளைய மனைவி யார்? தாண்யமாலனி 10524) அரக்கிகளுள் நல்லவர் யார்? திவைடை 10525) சீதைக்கு நம்பிக்கை காட்டியவள் யார்? தரிசடை 10526) இராவணனின் தம்பி யார்? கரன் 10527) கரனின் சேனாதிபதி யார்? சேனாதிபதி

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...