திங்கள், 27 ஜனவரி, 2014

கே. ஈஸ்வரலிங்கம்

10596) வழிபாட்டில் ஏன் இறைவ னுக்குத் திருவமுது வைக்கின்றோம்? தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்துக்கொண்டிருகின்றப் பெருமானுக்கு நம்மால் கைமாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர் யான் இதற்கு இலன் ஓர் கைமாறே என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் குறள் வழித் தெளிவுப்படு த்துகின்றார். வள்ளுவ பெருந்தகை. இவ்வாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்துக்கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவு பொருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடையப் பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம். 10597) விநாயகப் பெருமானின் கையில் இருக்கும் மோதகம் எதனைக் குறிக்கின்றது? இறைவன் நமக்குப் போகங்களைத் தருபவர், என்பதனைக் குறிக்கின்றது. இக்கருத்தினை, பொன்னும் மெய்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்பானைப் எனும் சுந்தரரின் பாடல் வரிகளோடு ஒப்பு நோக்கி மகிழலாம். 10598) திசைத் தெய்வங்களை வழிபடுவதனால் ஏற்படும் நன்மைகள் யாது? திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும், திசைத் தெய்வங்களும், அந்த- அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டு விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள், அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால், எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812