செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

கருங்கல்லில் தெய்வச் சிலைகளை வடிப்பது ஏன்?

கே. ஈஸ்வரலிங்கம் 10624) தெய்வச் சிலைகளை கருங்கல்லில் வடிவமைப்பது ஏன்? நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதால் ஆகும். 10625) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் எவை? * இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது. * அடிக்கடி வீட்டில் அழக் கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். * பூசணிக்காயைப் பெண்கள் உடைக்கக் கூடாது. * கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கக் கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தைத் தாக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது. 10626) கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக் கூடாது. * வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதைக் கணவரிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையைக் கூறாமல் அந்தப் பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது நல்லது. * சுமங்கலிப் பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது. 10627) கோயிலில் பிரசாதமாகப் பெறும் பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா? சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம். 10628) கோவிலில் சாமி தரிசனம் எப்போது செய்யக் கூடாது? காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமியை கும்பிட கூடாது. அர்ச்சகர் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது. கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.. 10629) அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்? திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸ¤மாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். 10630) தலவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்? விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுகின்ற. 10631) குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்? நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச் சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812