வியாழன், 6 பிப்ரவரி, 2014
உலகுக்குக் கிடைத்த கொடைகளில் தண்ணீருக்கு நிகராக வேறெதுவுமில்லை
கே. ஈஸ்வரலிங்கம்
மனிதன் தன்னையும் தனது குடும்பத்தையும் நேசிப்பது போல் இயற்கையையும் இயற்கை வளங்களையும் நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும். இந்துக்கள் இன்று நேற்று அல்ல, தொன்றுதொட்டே இயற்கையை மதித்து வழிபட்டு வருகின்றனர்.
இயற்கை வளங்களில் மிகவும் பெறுமதி மிக்கதாக தண்ணீர் விளங்குகின்றது. இயற்கையாக கிடைக்கும் இந்த தண்ணீரை நாம் எந்த விதத்திலும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது எனவே தான் தண்ணீர் மிகவும் பெறுமதி மிக்கதாக விளங்குகின்றது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமாகின்றது. தண்ணீர் மனிதனுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றது. மனித உடலிலுள்ள அழுக்குகளை போக்குவதற்கு நீர் மிகவும் அவசியமாகின்றது. மனித உடலிலுள்ள அழுக்குகளை போக்கு வதற்கு தண்ணீருக்கு பதிலாக மாற்று ஈடான எதுவும் இல்லை.
விஞ்ஞானம் படிப்படியாக வளர்ந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வருகின்ற போதும் தண்ணீருக்கு மாற்று ஈடாக எதனையும் எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு எவராலும் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் நீர் பிரதானமான இடத்தைக் கொண்டுள்ளது. மனிதனை எடுத்துக்கொண்டால் மனிதர்களால் உணவின்றி ஒரு மாதமேனும் வாழலாம் ஆனால் நீரின்றி நான்கு அல்லது ஐந்து நாட்கள் தான் வாழ முடியும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் நமக்கு எங்கிருந்து கிடைக்கின்றது. குளங்கள், ஆறுகள், அருவிகள், நீர்த் தேக்கங்கள், நீரூற்றுக்கள், பாறைகள், ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. உலகின் சில நாடுகளில் இது பனிக்கட்டிகளாகவும் உள்ளது. எனவே தண்ணீர் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று வடிவங்களிலும் காணப்படுகிறது.
பூமியின் நிலத்தைவிட அதிகளவிலான பரப்பு அளவு நீரைக்கொண்டது. பூமியின் 75 சத வீதத்திற்கும் அதிகளவிலான மேற்பரப்பை நீர் மூடியுள்ளது. உலகிலுள்ள மொத்த நீரில் பெரும் பகுதி சமுத்திரங்களிலேயே உள்ளது. இவற்றில் மனிதனால் எளிதில் நேரடியாக பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு 0.6 சதவீதமே ஆகும்.
நீர் என்பது சி2லி என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு சேர்மம் ஆகும். நீர் மூலக்கூறு ஒன்று ஒரு ஒக்சிசன், மற்றும் இரண்டு ஐதரசன் அணுக்களை பிணைப்பு மூலம் கொண்டுள்ளது. எங் கும் நிறைந்த அது உலக உயிரினங்களின் உய்விற்கு மிக அவசியமான ஒன்றாகும். திட்ட வெப்ப அழுத்தத்தில் நீர் ஒரு திரவம் ஆக இருந்தாலும், இது புவியில் திட வடிவில் பனியாகவும், மற்றும் வளிம வடிவில் நீராவி ஆகவும் காணப்படுகிறது.
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர் நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது.
நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத் திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக் கவிகைகளிலும், 0.6% பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக் கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர்கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றது.
நீரானது ஆவியாதல், நீராவிப் போக்கு (ட்ரான்ஸ்பிரேஷன்), ஆவி ஊட்டளவு (இவாப்போட்ரான்ஸ் பிரேஷன்), குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல் (பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஒஃப்) எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இரு க்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியா தலும், நீராவிப் போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன.
மனிதர்களுக்கும் ஏனைய உயிரி னங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத் தாண்டுகளில், உலகத்தின் பெரும் பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது.
2035 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித் துள்ளனர். பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. சுமார் 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
நம் உயிர்வாழத் தேவையான பொருட் களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறை ந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக் கப்படுகிறது.
வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள், பளபளப் பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.
அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம். இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.
வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சொலிசின் செரித்த பிறகு சொலிசிலிக் அமிலமாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சொலிசிலிக் அசிட்டைத்தான் பயன்படுத்துகின்றனர்.
செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சொலிசிலிக் அசிட்டை தண்ணீர் குடித்து இயற் கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.
சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவீகிதமும் சுருக்கம் மறைந் திருந்ததாம். உஷ்ண பிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர்.
எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லீட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லீட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
நான்கு லீட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லீட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லீட்டரும் குடிக்க வேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத் தியுள்ளனர்.
சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள் எப்போதாவது சுடுநீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங் களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் பாதுகாக் கப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர். அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது.
சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம். * உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும் தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. * வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லா விட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கி விடும்.
* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும் எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரான இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.
* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும் ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* மலச் சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும் எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக