வியாழன், 6 பிப்ரவரி, 2014

(வராகி அம்மன்)

கே. ஈஸ்வரலிங்கம் 10599) சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி யார்? வராஹி அம்மன் 10600) வராஹி அம்மனை பஞ்சமி தாய் என்று அழைப்பது ஏன்? வாழ்வின் பஞ்சகங்களை துரத்துபவள் என்பதால் 10601) அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் யார்? சப்த கன்னியர் 10602) சப்த கன்னியர்களின் பெயர்களை தருக. பராமஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி 10603) இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் யார்? வராகி 10604) மனித உடலும் பன்றி முகமும் கொண்டவள் யார்? வராஹி 10605) வராஹி அம்மனின் குணவியல்புகள் எவை? கோபத்தின் உட்சம் தொடுபவள், ஆனால் அன்பிலோ ஆதரவிலோ மழைக்கு நிகரானவள். 10606) வராகி அம்மனின் ரதம் எப்படிபட்டது? கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். 10607) இந்தியாவில் வராஹி அம்மனுக்கு எங்கு கோயில் உள்ளது? காசி, தஞ்சாவூர் 10608) ராஜராஜ சோழன் எச்செயலைத் தொடங்கினாலும் யாரை வழிபட்டபின் தொடங்குவது வழக்கம் வராஹி 10609) இலங்கையில் வராஹி அம்மனுக்கு எங்கு கோயில் உள்ளது? கொக்குவிலில் 10610) எந்த வழிபாட்டைத் தொடங்கினாலும் முதலில் யாரை வணங்குவார்கள்? விநாயகரை 10611) தஞ்சைப் பெரிய கோயிலில் யாரை வழிபட்டு தொடங்குகிறார்கள்? துர்க்கையின் தளபதியான வராஹி அம்மனை வழிபட்ட பின்னரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812