செவ்வாய், 20 ஜனவரி, 2015

111207) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம். 111208) கடவுளின் படம் அல்லது சிலை... எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம். நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது. 111209) சுமங்கலிகளை வழியனுப்பும் போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும் போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது. 111209) விரதத்தின் போதும் கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்? தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை ஆனால் அவற்றுள் செப்பு உலோகம் அதனை வெகு சுலபமாகக் கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள். அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் பொது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும் அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப்பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்குக் கிடைக்கின்றது. எண் குணங்களும் எவை தன்வயத்தனாதல், தூயஉடம்பின்னாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பனவாகும். 111210) எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்டாதவாறு போல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார். 111211) பொங்கலுக்கு - மஞ்சள் குலை வாங்குவது ஏன்? மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும் போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுப நிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத்தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சிரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812