செவ்வாய், 20 ஜனவரி, 2015
பன்விலை செல்வவிநாயகர் ஆலயம்
பன்விலை செல்வவிநாயகர் ஆலய கும்பாபிN'கம்
பன்விலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிN'க நிகழ்வு இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற இறையருள் கைகூடியுள்ளதாக ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
பன்விலை பிரதேசத்தில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் 50 வருட கால பழைமையானது. 1969-01-31 ஆம் திகதியன்று ஆலய பரிபாலன சபை செயலாளர் ம.கருப்பைய்யாப்பிள்ளையின்; அரிய முயற்சியால் கட்டுவிக்கப்பட்டது.
இதன் தலைவர் டீ.;நடராஜப்பிள்ளை, பொருளாளர் எஸ்.ஐ.செல்லமுத்துப்பிள்ளை, துணைத்தலைவர் ஏ.வீ.ஆறுமுகம் ஆசாரியார், துணைச்செயலாளர் ஏ.சங்கரன் ஆகியோர் பக்க பலமாக நின்று ஆலய ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொண்டனர்.
மூல மூர்த்தியான ஸ்ரீ செல்வ விநாயகர் விக்கிரகம் 20-01-1969 அன்று வத்தேகம பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக சி.த சோமசுந்தரம் பிள்ளையால்; கொண்டுவரப்பட்டு கும்பாபிN'கம் இடம்பெற்றது.
கும்பாபிN'கம் 1970- ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி விமரிசையாக இடம்பெற்றது. அன்றிலிருந்து 2004 வரை மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்ந்த இவ்வாலயம் பாலஸ்தானம் கண்டு 10 வருடங்களின் பின்னர் 2015-02-01 அன்று கும்பாபிN'கம் காண எம்பெருமான் அருள் பாலித்துள்ளார்.
பன்விலை பிரதேச பொது மக்கள், தனவந்தர்கள், உட்பட பலரும் ஆலத்திருப்பணிக்காக பல்வேறு வகைகளில் உதவி நல்கி வருகின்றனர். ஆலய அறங்காவலர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். செயலாளர் எஸ்.சிவானந்தம் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய இறைபணி ஆலயத்தை கும்பாபிN'கம் காணச் செய்துள்ளது.
கே.மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, வீ.விஜயகுமார் ஆகியோரின் அரும் பணிகளும் ஆலயத்தை தலைத்தோங்கச் செய்துள்ளன. இவ்வாலயத்தின் சமூகப்பணிகளாக ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை இயங்கி சிறப்பான கல்விப்பணியை மேற்கொண்டு வருகிறது. பன்விலை கல்விக் கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் வகுப்புக்களும் இடம்பெற்று வருகிறது.
இத்துடன் அறநெறி வகுப்புகளும் நடன, சங்கீத வகுப்புகளும் பன்விலை பிரதேசத்திற்கு பாரிய கல்வி, கலை, கலாசார சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது.
இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN'க நிகழ்வின் கிரியாகால நிகழ்வுகள் 30-01-2015 அன்று ஆரம்;பமாகும். 31-01-2015 அன்று பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
01-02-2015 காலை 9.20 மணிமுதல் 10.41 மணிவரை ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிN'கம் இடம்பெறவுள்ளது.
கும்பாபிN'க நிகழ்வுகளுக்கு உபயம் செய்ய விரும்புவோர் ஆலய அறங்காவலர் சபையோடு தொடர்பினை ஏற்படுத்;துமாறு கேட்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு செயலாளர் எஸ்.சிவானந்தம் சைவ மகா சபை பன்விலை.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக