செவ்வாய், 3 பிப்ரவரி, 2015
11229) இந்தியாவின் 280 பழமையான சிவன் கோவில்களில் எத்தனை கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 274
11230) இந்தியாவின் பழமையான 108 வைணவத் திருப்பதிகளில் எத்தனை திருப்பதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 96
11231) சைவத்தை வளர்த்த நாயன்மார் எத்தனை பேர்? 63 பேர்
11232) வைணவத்தை வளர்த்த ஆழ்வார்கள் எத்தனை பேர்? 12 பேர்
11233) சைவத்தில் கோயில் என்று சொன்னாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது?
சிதம்பரத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் இருக்கிறது
11234) வைணவத்தில் என்றாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது?
திருவரங்கத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் உள்ளது.
11235) பொதுவாக. பெயர்களை எவ்வாறு பிரிக்கலாம்?
இடுகுறிப் பெயர், காரணப் பெயர்
11236) மேசியா என்பதற்கு என்ன பொருள்?
எண்ணெய் ஊற்றப்பட்டவர்.
11237) அன்பு என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் என்ன? சிவம்
11238) அன்பே உருவான கடவுளுக்குத் தமிழில் என்ன பெயர்?
சிவன்
11239) நாம் அனைவரும் நீங்காத இன்பத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்பே உருவான கடவுள் மனிதனாகப் பிறந்ததைக் கூறும் சைவ சித்தாந்தப் பாடல் ஒன்றை எழுதவும்.
இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்தான்
11240) மனிதனாக வந்த கடவுள் தீமையை வென்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது? குமரக் கடவுள்
11241) சிவனுடைய வேறு பெயர்கள் யாவை?
நீலகண்டன். மகேஸ்வரன். தட்சிணாமூர்த்தி. நடராசன்
11242) விஷ்ணுவின் வேறு பெயர்கள் யாவை?
திருமால். பெருமாள். நாராயணன். வெங்கடேசன்....
11243) வைணவத்தில். நீரின் மேல் அசையாடுபவர் எனும் பொருள் தரும் கடவுளின் பெயர் என்ன?
நாராயணன்
11244) முருகனின் வேறு பெயர்கள் யாவை?
குமரன். வேலன். கந்தன். கார்த்திகேயன்
11245) மனிதனாக வந்த கடவுள் இறந்து உயிர்பெற்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது?
பிள்ளையார்
11246) பிள்ளையாருடைய வேறு பெயர்கள் யாவை?
விநாயகர். கணபதி. விக்னேஷ்வர்
11247) மனிதனாக வந்த கடவுள் சு+ரியனைப் போன்ற ஒளிமயமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது?
ஐயப்பன்
11248) மனிதனாக வந்த கடவுள் உலகப் படைப்புக்குக் காரணமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது?
பிரமன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக