செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
கைலேஸ்வரத்தில் மாசிமக மகோற்சவம்
கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ கருணாகடாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகைலாச நாதர் சுவாமி தேவஸ்தானத்தில மாசி மக மகோற்சவ விழா நேற்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் வசந்த மண்டப பூஜை நடைபெறும்.
எதிர்வரும் 03ம் திகதி மாலை 5.00 மணிக்கு தேர்த் திருவிழா ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் 04ம் திகதி தீர்த்த உற்சவமும். 10ம் திகதி வைரவர் மடை பூஜையும் நடைபெறும்.
இவ்வாலயத்தில் தினமும் காலை 8.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும் திருவிழா பூஜை காலை 11.00 மணியளவில் அம்பாள் உள்வீதி வலம் வருதலுடன் நிறைவுபெறும். அதேபோன்று மாலை 4.30 மணிக்கு சாயரட்ச பூஜையுடன் ஆரம்பமாகும் மாலை திருவிழா இரவு 7.00 மணிக்கு அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி வருதலுடன் நிறைவுபெறும்.
மகோற்சவ சிவாச்சாரியா முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் தேவஸ்தான குருமாகிய சிவஸ்ரீ க. மகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ யோ. ரஞ்சிதக் குருக்கள், சிவஸ்ரீ பா. சாம்பசிவ குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகர குருக்கள், சிவஸ்ரீ ம. சுரேஷ் குருக்கள், சிவஸ்ரீ ப. புருஷோத்ம சர்மா, சிவஸ்ரீ ரிஷிகேச சர்மா ஆகியோர் மகோற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக